பிரசவ வார்ட் ஒரு இருட்டறை

 அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது பிரிட்டிஷ் காரன் என்றாலும் அதனை அன்று முதல் இன்று வரை அரசு தொடர்ந்து வருவது சிறப்பு.

எத்தனை ஏழை மக்கள் அரசு பொது மருத்துவக் கல்லூரிகள் மூலம் பலன் அடைகிறார்கள் என்றால் மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி தனி வார்டு அமைத்து அரசு தன்னால் முடிந்ததை செய்கிறது என்று கூறிவிட முடியாது.


ஏனென்றால் அரசால் இன்னமும் பல செய்யமுடியும். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை நடுநிலை வர்க்கத்தவர்கள் தொடங்கி அன்றாடம் காய்ச்சி வரை பலன் பெறுவது அரசு மருத்துவமனை மூலம் தான். 

இப்படி இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவமனை தனியார் கட்டிடங்களை மிஞ்சி அதி நவீன கருவிகள் மூலம் அதிக டாக்டர் எண்ணிக்கை மூலம் இன்னமும் எவ்வளவு பராமரிக்கப் பட வேண்டும்.

ஆனால் கவனம் எல்லாம் பேருந்து நிலையம் திறப்பதிலும், மணல் குடோன் திறப்பதிலுமே உள்ளது என்று மக்கள் குறை கூறும் அளவு உள்ளது. 

பிரசவ வார்ட் ஒரு இருட்டறை:

பிரசவ வார்ட்டிற்கு ஏதேர்ச்சையாகா நுழைய நேர்ந்தது ஒரு குறிபிட்ட வயது முதல் தனது உடலை பத்திரப்படுத்தி பாதுகாத்து. தன் உடல் தான் எல்லாம் என்று வாழ்ந்து வந்த பெண்களை அங்கு யாரும் பெண்களாக மதிக்கவில்லை.

பரிட்சை கால் போல ஒரு அரை, அங்கு இடுப்பளவு உயர இழு ஊர்தி அதனை சுற்றி திரை இப்படி இருபது, முப்பது ஊர்திகள் நிறுத்தப் பட்டுள்ளது.

அதில் வரிசையாக பெண்கள். ஆடைகளை அகற்றப் பட்டு எட்டு மாதங்களுக்கு மேலிருக்கும் அனேக பெண்களுக்கு. அந்த இழு ஊர்தியில் படுக்க வைத்துள்ளனர் மருத்துவர் பரிசோதைக்கு.

ஒரு நர்சம்மா எல்லாரையும் துணியை விலக்க சொல்லுது. மானம் பறிபோகும் நிலையில் ஒரு சில பெண்கள் கைகளால் அவர்கள் பிறப்பு உறுப்பை மறைத்து வைத்துள்ளனர். 


மறைத்து கொள்ளும் பெண்களை அந்த நர்சம்மா அங்க என்ன புதுசா இருக்கு? எல்லாருக்கும் இருக்கது தான் டாக்டர் வர நேரம் கையை எடுங்க என்று திட்டிக் கொண்டுள்ளது. 

தனி தனி மேஜை என்றாலும் அனைத்திற்கும் திரை உண்டு ஆனால் அதனை மூட அனுமதி இல்லை. மருத்துவர் வந்து பார்க்கும் போது ஒரு சிலருக்கு மாத்திரம் மருத்துவர் அந்த திரையை மூடிக் கொள்கிறார்.

பலர் முதல் முறை மகப்பேறு அடைந்தவர்கள். அவர்கள் மனதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க நேர்ந்தது. எத்தனை வெக்கம் அருகில் மற்ற பெண்கள்.

தலையை திருப்பினால் அங்கு அவர்கள் இவர்களை போலவே வேறு வழியில்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்கிறார்கள். 

அனைவரும் இரண்டு கால்களையும் மடக்கி விரித்து வைத்துக் கொண்டு மருத்துவருக்காக காத்திருக்கின்றனர். பார்க்கவே வருத்தமாக இருந்தது.

இத்தனை நவீனமாக்கப் பட்ட மருத்துவமனையில் கூட இப்படி தான் பெண்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தனியறை தேவையில்லை பலர் வந்து போகும் இடம் என்றாலும் கொடுக்கப் பட்ட திரையை மூடி அவர்கள் சங்கோஜம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

மற்றப்படி நோயாளிகளிடம் எரிந்து விழும் குணம் ஒரு சில மருத்துவர்களிடம் மட்டுமே இல்லை. பலர் எப்போதும் வரும் நோயாளிகளை திட்டியே தீர்க்கின்றனர். 

முதலில் பெண்கள் அப்படி ஒரு சூழலை எப்படி கையாள்வார்கள் சுற்றி பெண்கள் என்றாலும், இப்படி ஓர் சூழ்நிலைக்கு பழக்க படவில்லையே.

பெரியவர்கள் ஊட்டி ஊட்டி வளர்த்த மானம், அது உண்மையில் உடலில் இல்லை மனதில் தான் என்று அவர்கள் அன்று உணர்ந்திருக்க முடியுமா என்றால் தெரியவில்லை.

ஆனால் ஒரு தெளிவு கிடைத்திருக்கும். பலரால் எந்த யோசனைக்கும் சென்றிருக்க முடியாது. சீக்கிரம் டாக்டர் வந்து பார்த்துட்டு விட்டா போதும் இனி இந்த மருத்துவமனைக்கு வரவே கூடாது என்று தான் எண்ணியிருப்பார்கள்.

காலம் மாறிக் கொண்டு உள்ளது அரசு மருத்துவமனைக்கு வரும் மக்கள் விகிதம் நாளுக்கு, நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஏற்ப இன்னும் பல வசதிகளை அரசு முன்னெடுக்கும் என்று நம்புவோம். 

செவிலியர்களையும், மருத்துவர்களையும் வாழ்த்துவோம். 

Post a Comment

0 Comments