ஹாட் ஸ்பாட் ( Hot Spot )
- Get link
- X
- Other Apps
வழக்கமா தம்பி ஒருத்தன் எந்த படம் வந்தாலும் அத முதல் ஆளா பாத்துட்டு அதுல நல்ல படமா எனக்கு அனுப்பி வைப்பான். அண்ணா இத கண்டிப்பா பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க ன்னு சொன்ன படத்துல இந்த ஹாட்ஸ் பாட் ஒண்ணு.
படம் ஆரம்பம் முதல் இரண்டு நிமிடம் வழக்கமான கீரோ என்ட்ரி போல இருந்தாலும். கதை ரொம்பவே புதுசு ஆனால் படத்தோட லிங் ஆக மனசு மறுத்துச்சு. ஏதோ நமக்கு நடந்த மாதிரியே இருந்துச்சி.
ஒரு ஆணோட கழுத்தில தாலி அது நம்ம சம்பிரதாயம் இல்லைன்னாலமும் அது மனுசன் உருவாக்குன சடங்கு தான, ஆனால் துர்துஷ்டா வசமா இப்படி ஆகிற கூடாது. படத்திலயே ஏற்றுக் கொள்ள முடியல.
வேலைக்கு போக வேண்டாம் பையன் வீட்டோட இருந்தால் போதும். வீட்டு வேலை பாக்குற அப்பா என மனம் ஒவ்வாத கதைக்களம். புகுந்த வீட்டில் பையன் போய் தவிக்கும் தவிப்பு.
இதையே தான் ஒரு பெண் அனுபவிக்கிறாள் என்பது அது நமக்கு வரும் போது தான் புரிகிறது. படத்தில் கூட இப்படி ஒரு காட்சியை ஒரு ஆணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
படம் துவங்கி திருமண காட்சி முடிந்து மணமகன் விஜய் மணமகள் தனு வீட்டிற்குள் வந்ததும் ஒரு பாடல் வரும் வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம் அந்த பெண் குரல் காதுகளில் கணீர் என்று விழுகிறது.
இசையும் தான் அப்படியே ஒரு பொண்ணுக்கு என்ன என்ன மாமியார் வீட்டில நடக்குமோ அப்படியே, ஒரு பையனுக்கு மாமனார் வீட்டில நடக்கும் கடைசியா பொண்டாட்டி கையால புருஷன் ஒரு அடி வாங்கவும் தான் எல்லாம் கனவுன்னு காட்டுறாய்ங்க அப்புறம் தான் நமக்கு உசுரே வருது.
பட காட்சியை கூட ஏற்றுக் கொள்ள முடியாத அளவு சமூகத்தோடு ஒன்றிவிட்டோம் என்று தோன்றவில்லை. பெண்ணடிமை யை பழகிவிட்டோம் என்று தான் தோன்றுகிறது.
வெறும் கனவு தான் அதன்பிறகு படம் மாறும் என்ற எண்ணம் வரும். மாறும் தான் ஆனால் இந்த முறை வழக்கம் போல மணமகள் டீ கொண்டு வருவாள். நாயகன் விஜய் கண்ட கனவு நம்மையே பாதிக்கும் போது அவனை பாதித்திருக்காதா என்ன அவன் அனைவரும் பேசும் முன்பு அவனது பேச்சை துவங்குவான்.
தனது மாமியாரிடமிருந்து “ஆன்டி பயப்படாம சொல்லுங்க நீங்க உங்க வீட்டை எவ்வளவு மிஸ் பண்ணுறீங்கன்னு” அவங்களும் தயங்கி தயங்கி உண்மையை சொல்லுவாங்க பார்க்க கஷ்டமா தான் இருக்கும்.
பெண்கள் நாட்டின் கண்கள் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் மாத்திரம் தான் என்பதை அவர்கள் என்றோ புரிந்து கொண்டார்கள்.
நல்ல ஒரு வசனம் முதல்ல விதவை ஒருத்தி வெள்ளை புடவை கட்டிக்க மாட்டேன்னு சொன்னதுல இருந்து நிலவுக்கு போறதுக்கு முன்னால வரைக்கும் எல்லாரும் சொன்ன ஒரு வார்த்தை அது எல்லாம் எப்படி சாத்தியம்னு தான்.
அப்படியே டைரைக்கடர் முகத்த காட்ட அந்த கதையை அதோட முடிச்சிட்டு நான் ஒரு லெஸ்பியன் என்பதை ஒரு பெண் படிப்பறிவு இல்லாத தனது தாய் தந்தையரிடம் சொல்லும் காட்சி. பார்க்க வேடிக்கையா இருந்துச்சி
காலம் எவ்வளவு மாறிடிச்சி பாலுறவுகள்உடலுறவுகள் எத்தனை விதமாகிடிச்சி என்பது போல இருந்தது. கடைசியா ட்விஸ்ட்டு இருக்கு ஒண்ணு இல்லை வரிசையா கண்டிப்பா எல்லாரும் படத்தை பாருங்க. அந்த ஸ்வாரஸ்யம் அப்போ தான் நல்லாயிருக்கும்.
இன்னமும் பஸ்ட் ஆப் கூட முடியல அப்புறமா மூணாவது கதை ஆரம்பமே கதாநாயகனுக்காக காதலி நல்ல சம்பளத்துக்கு கேரளாவிற்கு கிடைக்கிற டிரான்ஸ்பர் வேண்டாம்னு சொல்லுறாங்க.
ஆனா ஹீரோ பாத்ரூம்ல மாஸ்டபெட்ஸ் பண்ணி தெரியாம மாத்தி பிக்ஸ் பண்ண சிசிடிவி ல மாட்டிக்கிறாரு. அவரு வேலையும் போய்டுது.
அந்த கீரோ கால்பாய் ஆகிடுறாரு பணத்துக்காக, அவன் லவ்வர் இத பத்தி ஒரு ஆர்ட்டிக்கல் எழுத அவன எதேர்ச்சையா பார்க்க அது இரண்டு பேரயும் பிரேக் பண்ணுற அளவு போகுது எல்லாம் ஆணாதிக்கம் என்ற தலைப்பு கீழ் தான் வருகிறது. எதுனாலும் ஆம்பள பண்ணா தப்பு இல்லை பொண்ணு பண்ணா தப்பு…
அடுத்து நான்காவது கதை இப்படி வரிசையாகா கதையின் பின் கதை என்று எல்லாம் பெண்கள் தனித்தன்மையை மையமாக கொண்டு காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
படம் சரியாகா தியேட்டரில் ஓடாதா போது இயக்குனர் பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் ஒரு முறை வந்து பாருங்கள் உங்களுக்கு படம் பிடிக்கவில்லையென்றால் என்னை செருப்பால் கூட அடியுங்கள் என்று கூறியிருப்பார்.
அவ்வளவு நம்பிக்கை அவர் கதையின் மீது. நான்காவது கதை இன்றைய டிவி சேனல்களில் நடக்கும் குழந்தைகள் ரியாலிட்டி சோவை மையமாக வைத்து எடுத்திருப்பார்கள்.
எதார்த்தமானா கருத்துக்களாக இருந்த போதிலும் இதை இனி மாற்ற முடியாது என்பது தான் உண்மை. உலகம் மாற்றத்தின் பிடியில் மாட்டிக் கொண்டுள்ளது மாற்றம் மட்டுமே மாறாதது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி