முயற்சியின் மாயை

 அவனுக்கு அனைத்திலும் நாட்டம் கூட, எதை அவனிடம் கூறினாலும் அவன் அதன் கற்பனையை பற்றிக் கொண்டு வெகு தூரம் சென்றிடுவான். அதன் விளைவுகளை பற்றி அறியவில்லை. அறிந்திருக்க முயற்சிப்பதும் இல்லை.

வயது அப்படி பாராங்கல்லையும் அசைக்கும் துணிச்சல் அவனுக்கு இருந்தது. பெரியோர்கள் கூறுவார்கள் “கல்லை தின்னாலும் ஜீரணிக்கும் வயது” என்று. 

அவனுக்கு தொழில் செய்ய மிகுந்த ஈடுபாடு, வேலைக்கு சென்றால் நினைத்த நேரம் விடுமுறை எடுக்க முடியாது, நினைத்த மாதிரி செயல்பட முடியாது என்ற எண்ணம். யாரோ அவனுக்கு விதைக்க எப்படியேனும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும், என்ற எண்ணம் அவனுக்கு 

நிறுவனம் ஒன்றில் வேலை செய்து சேர்த்து வைத்த சிறிய தொகை கொண்டு அவனது உறவினர் ஒருவருடன் இணைந்து தொழில் துவங்கினான். உழைப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. அசாத்திய திறமைசாலி அவனுக்கு ஆண்டவனே துணை, அவன் துணை கொண்டு உள்ளாரா துணிச்சல் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை கொண்டவன்.

தொழில் முழுவும் அவன் ஒருவனால் மாத்திரம் நடைமுறை செய்யப்பட்டது அவன் அந்த தொழிலுக்கு புதிது என்றாலும் கொஞ்சம், கொஞ்சமாக கற்றுகொண்டு ஓரிரு மாதங்களில் சிறந்து விளங்கினான்.

அவனை தேடி பலர் வர ஆரம்பித்தனர், அவனை பற்றி அவன் இல்லாத நேரங்களில் அவன் உறவினர் இடம் பெருமையாக பேச ஆரம்பித்தனர். “அவன் தனியா நின்று மொத்த வேலையையும் செய்கிறான் மிகவும் திறமையான ஒருவன் உனக்கு கிடைத்துள்ளான் என்று கூற அவரால் அதனை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

அவன் மீது வீண் பழிகளை சுமத்த துவங்கினார், ஒன்றும் இல்லாத காரியங்களுக்கும் அவனை வசை பாடத் துவங்கினார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த அவன் அனைத்தையும் விட்டெறிந்து விட்டு அங்கிலிருந்து விலகி விட்டான். 

அதன் பின் அந்த உறவினரால் தனியாக சமாளிக்க முடியவில்லை. அவனை பலர் மூலம் தூது விட்டு பார்த்தார் ஆனால் அவன் வெறுத்துவிட்டான். இனி எந்த காலமும் அந்த உறவு வேண்டாமென்று முடிவு எடுத்துவிட்டான். 

அதன் பின் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனிடம் குறைந்துவிட்டது. தொழில் செய்தால் தனியாக செய்யவேண்டும் எந்த உறவோ நட்போ அதில் உடனிருக்க கூடாது என்று முடிவெடுத்தான். 

மறுபடியும் தொழில் செய்யும் முன் மிக கவனம் வேண்டும் என்றவன், நல்ல ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான் தொழிலில் அவன் எவ்வளவு முனைப்பானவனோ அந்த செயல் திறனை வேலையில் செய்தான். 

இறைவன் அவனை விட்டு விடவில்லை, அவன் இறைவன் மீது வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கை அவனை காப்பாற்றியது வேலையில் படிபடியாக வளர்ந்தான். உயர்ந்த பொறுப்புகள் கொடுக்கப் பட்டது. 

அதனையும் இறைவன் அருளால் சிறப்பாக செய்து பல சிறந்த தலைவர்களை உருவாக்கினான். 

முயற்ச்சி மட்டுமே தேவை அதை தவிற வேறு என்ன செய்து விட முடியும். பலன் இயற்கை தருவது. ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிடக் கூடாது.

முயற்ச்சின் மாயை ஒரு அசாத்திய சக்தி…










Post a Comment

1 Comments

நன்றி