கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

கோடை காலம் (The Summer)

 மழை வந்ததும் மனதிற்கு அத்தனை இதமாக இருக்கிறது அனைத்து ஜீவ ராசிகளுக்கும். இந்த மழைக்கு முன் உயிர்கள் வாழ்வா! சாவா! என்று போராடிக் கொண்டிருந்தன. 

சூரியனுக்கு கொஞ்சம் கூட இறக்கம் இல்லையா என்று திட்டாத மனிதர்கள் குறைவு, வசதி படைத்தவன் ஊட்டி, கொடைக்கானல் என்று செல்கிறான். இரண்டு மாதமும் அவனால் அங்கு இருக்க முடியும்.

ஆனால் இதே காரமான வெயிலில் தான் கூலி தொழிலாளி மூட்டை சுமக்கிறான், கட்டிட வேலைக்கு செல்பவன் செங்கல் சுமக்கிறான். அடிக்கும் வெயிலில் இப்போது தான் நிறைய செங்கல்கள் காயவைக்க முடியும் என்று முதலாளி அதிக செங்கல் அறுக்க கட்டளை இடுகிறான்.

பறவைகள் இறை தேடி அலைய அவைகளுக்கு உடலில் சக்தி இல்லை சிறிய தூரத்திலேயே களைப்படைகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நீர் நிலைகள் இல்லை, வீடுகள் உள்ளன. இருந்து என்ன லாபம்?


முன்பெல்லாம் எல்லா வீடுகளின் பின்புறத்திலும் கொல்லை பகுதி இருக்கும். குளிக்க, பாத்திரம் கழுவ, கால்கழுவ என்று தனித் தனியாக பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். புழுக்கள் கூட ஆனந்தம் பாடி கிடக்கும் மண்ணில் மேற்பரப்பில். கோழிகள் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டி இருக்கும்.

இன்றைய காலம் முழுவதும் அடைக்கப்பட்ட  கார்கிரீட்வீடுகள். வெளியில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாது பலர் வாழ்ந்து வருகிறார்கள். கழிவறையும் வீட்டிற்கு உள்ளே வேறு என்ன வேண்டும். 

நம்மை மட்டும் நாம் கவனம் செலுத்தி வாழ துடிக்கிறோம். துளி அளவு பொது நலம் இல்லாதா சுயநலவாதிகளாக. காடுகளை வளர்த்த பறவைக் கூட்டங்கள் குடிக்க நீர் இல்லாமல் மாண்டு போகின்றன.

நம்மாழ்வார் கூறியிருந்த மண்ணின் அனைத்து உயிர்களும் சுயசார்பு வாழ்வை வாழ்கின்றன என்று ஆனால் மனிதன் அந்த சுயசார்பு வாழ்வை அவனுக்காக மாத்திரம் கட்டமைத்துக் கொள்கிறான்.

சமீபத்தில் இணையத்தில் ஒரு காணொளி வலம் வந்தது, அதில் பறவை ஒன்றிற்கு இரு வாலிபர்கள் வாட்டர் பாட்டில் மூடியில் தண்ணீர் கொடுக்க தாகம் தவித்து போராடிக் கொண்டிருந்த அந்த பறவையும் அவர்கள் கொடுக்கும் நீரை குடித்து உயிர் பெறுகிறது. 

இதில் சுயசார்பு என்பது மாண்டுபோய்விட்டது. நம்மாழ்வார் சொன்ன அந்த சுயசார்பு தான் மனித சமுதாயம் இத்தனை உயர்ந்த நிலையடைய காரணம். நாம் மட்டும் உயர்ந்தால் போதாது சக உயிரினங்களும் மண்ணில் ஜனிக்க அவன் உதவி செய்ய வேண்டும்.

செத்தால் வறுத்து, பொறித்து தின்ன பல உயிரினங்கள் உண்டு. சிங்கத்தை காட்டிற்கு ராஜாவாக்கி அதனை நெருங்க யாராலும் முடியாது என்று நம்மில் ஒரு பிரமாண்டத்தை விதைத்து விட்டாரகள். இன்றைய இணைய சமுதாயத்தில் அனைத்தும் வெளி வந்து விடுகிறதுமறைத்து வைக்க ஏதும் இல்லை. எருமையிடம் முட்டு வாங்கி ஏழ முடியாமல் கிடந்த சிங்கத்தை பார்த்து பரிதாபமாக இருந்தது.

ஒன்றை மனிதன் தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உலகம் அவனுக்கானது மாத்திரமில்லை. அனைத்து உயிரினங்களுக்குமானது. நாம் வளர வளர சமுதாயம் மாற, மாற சக உயிரினங்களும் வாழ நாம் ஏதோ ஒரு வகையில் துணையாக இருக்க வேண்டும். 

உடலை பிரிந்த பின்னர், கோழியும், வாத்தும், காகமும், மனிதனும் ஒன்று தான் அங்கு நம்மை அடையாள படுத்திக் கொள்ள உடலிருக்காது. கோழி தன் பெயரை முருகன் என்று கூறினாலும் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை.

வளர்ந்த இந்த நாகரீக மாற்றத்தில் மொட்டை மாடிகளில், கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வையுங்கள். சிறிது அரிசி அல்லது ஏதோ ஒரு உணவு அவை கொஞ்சம் இளைப்பாரட்டும். 

உங்களை அவைகள் வாழ்த்தாமல் போகாது. அனைத்து உயிரும் விரும்பும் மனிதனாக வாழுவோம். 

 

Comments

Post a Comment

நன்றி

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *