கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

ஏசுவிற்கும் முருகனுக்கும் என்ன பிரச்சனை ?

 கூடவே சுத்துறான், சர்ச்சில் சாப்பாடு போட்டா வாங்கி கொண்டு வந்து எல்லாரையும் சாப்டுங்கன்னு சொல்லுறான். கோவில் சாப்பாடு மாத்திரம் வேண்டாமாம். 

அவரவர் தனிப்பட்ட விருப்பம் எது பிடித்திருக்கிறதோ அதை உண்ண வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு. யாருடைய தனிபட்ட நடைமுறையையும் கேலி செய்ய முயற்சிக்க வில்லை.

சரி இந்து மத கோவில் சாப்பாடு அல்லது பூஜை பிரசாதங்கள் மட்டும் தான் தடையாம். மற்றபடி முஸ்லீம் பிரியாணி, புத்தர் கோவில் அன்னதானம் என அனைத்திற்கும் முழு சுகந்திரம் உண்டு.


முருகர் கோவில் அன்னதானம் ஏசுவிற்கு பிடிக்காதா இல்லை உங்களுக்கு பிடிக்காதா? சரி கிந்து கோவில் அன்னதானம் வேண்டாம் என்று கூற ஏதாவது காரணம் உண்டா என்றால் பதிலில்லை.

அது சிறுவயதில் இருந்தே அப்படி பழக்கப் பட்டது என்றார். சரி பரம்பரை கிருஸ்டியானிட்டி போல என்றால் அதுவும் இல்லை அவர் அப்பா கிந்து வாம்.

இவர்களை என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனம் போன போக்கில் வாழ்பவன் தான் மனிதன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. ஆச்சர்யம் இல்லை ஆனால் பைத்திய காரத் தனமாக தோன்றியது.

எனது மனதில் என்ன தோன்றியது என்றால் நான் கிந்து ஆனால் எந்த மதத்தினரையும் அவர்கள் வழியில் ஏற்றுக் கொள்பவன் ஆனால் இவர்கள் இத்தனை பாகுபாடு பார்ப்பவர்கள் கிந்துவ் என்பதனால் என்னிடம் ஏதும் பாகுபாடு பார்த்து மனதின் நோட்டமிடுவார்களோ என்ற ஒரு ஐயம் உண்டு.

சிறு வயதினில் சர்ச்சிக்கு செல்லும் போது அங்குள்ள பாதிரியார் கிந்து சாமிகள் சாத்தான்கள் என்று சொல்லியிருப்பார் போல.

இல்லாமலிருந்தால் இப்படி ஒரு வெறுப்பு பிரசாதத்தில் எதற்க்கு. மனதன் வாழ்ந்து மடியும் ஒரு உயிரினம் வாழும் வரை அவன் துணைக்கு கடவுள்கள் தேவை படுகிறார்கள் வாழ்ந்து முடித்த பின்னர் தெய்வம் யாது என அறியும் திறனை பெற மறுக்கிறார்கள்.

இன்னமும் எத்தனை கோடி ஆண்டுகள் ஆனாலும் மனிதன் எதனூடாவது போட்டிப் போட்டுக் கொண்டு அல்லது குறை கூறிவிட்டு தான் இருப்பான். அதனை எக்காலமும் மாற்று இல்லை.

புரிதல் அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் அந்த புரிதல் இல்லாமல் அல்லது ஒன்றை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இல்லாமல் தான் இவர்கள் இப்படி ஒரு யுக்தியை மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள்.

உணவு இல்லாமல் எத்தனையோ உயிர்கள் தவிக்க கிடைக்கும் தானத்தை ஏதோ ஈன காரங்கள் கூறி தனக்கு தானே மகுடம் சூட்டிக் கொள்ள எப்படி இவர்களால் முடிகிறது என்பது தெரியவில்லை.

ஒன்றும் இல்லாதா ஒரு அற்ப செயல், ஒரு கருத்து மாத்திரம் தான் எனக்கு வாழும் வரை யார் மனதையும் புண் படுத்தாமல் வாழ்ந்து விட்டு போக வேண்டும். 

முடிந்த வரை மனித மனத்திலிருந்து விலகியிருப்பது சிறப்பு. 







Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *