கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

அழைப்பில்லாத திருமண வீட்டு விருந்து

 அனைவரும் விரும்பும் ஒரு விருந்து தான் இது, திருமண  வீட்டு சாப்பாடு என்றால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள். அம்மா தனியாக செல்லும் திருமண வீட்டில் அசைவம், அல்லது பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என வித்தியாசமாக எது போட்டிருந்தாலும், அவள் கொஞ்சம் சாப்பிட்டு பின் பிள்ளைகளுக்கும் வாங்கி வரும் அன்பு… ஒரு உலக வராற்று காவியம் தான்.



நண்பர்களுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்கு நல்லா டிப், டாப்பாக உடை அணிந்து மணமகன் தோற்று விடும் அளவு வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு அழைப்பே இல்லாத திருமத்திற்கு சென்று அங்கு அறிமுகமில்லாதவர்களிடம் மாப்பிள்ளையின் தோழன் என்று கூறி அவர்களிடம் இருந்து ஒன்று இரண்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அதனை குடித்துகொண்டு.

பந்தியில் பாயாசத்திற்கு அடிபோட்ட கதைகள் அனைவர் வாழ்விலும் நிச்சயம் நடந்திருக்கும். 

யாராவது ஒருவருக்கு முதலில் வரும் செய்தி, பக்கது ஊர் கோவிலில் இன்று அன்னதானம் இந்த செய்தி கோவில் நோட்டிஸ் செல்லும் வேகத்தை விட இளைஞர்களை வந்து வேகமாக அடைகிறது.

அதிலும் கிடாவெட்டு போன்ற செய்திகளுக்கு கோவில் குடும்பத்தை மிஞ்சிய கூட்டம் வந்து நிற்கும். சாப்டா இப்படி சாப்டனும். எப்பவும் வீட்டு சாப்பாடு, இல்லையென்றால் கடை சாப்பாடு. யாருக்கு வேண்டும்.

விதம், விதமாய் கோவில் கொடை, பணக்கார திருமணம், மட்டன் பிரியாணி இதுவல்லவோ வாழ்வு. இதுவரை தெரியாதவர்கள் திருமணத்தில் சாப்பிட்ட அனுபவம் இல்லையென்றால் ஒருமுறை முயற்ச்சி செய்து பாருங்கள். 

முதலில் கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும், பயம் வேண்டாம் நம்ம ஊர் மக்கள் யாருக்கும் உணவு தர மறுக்க மாட்டார்கள். அதுவல்லாமல் பலர் வந்து செல்லும் போது யார் யார் உறவினர்கள் என்று குடும்பத்தவர்களே நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்.

எதற்கும் முன்னெச்சரிக்கையாக மண்டபத்தின் முகப்பில் வைத்திருக்கும் பேனரை ஒரு முறை வாசித்து மணமகன், மணமகள் பெயர் படிப்பு என ஒரு முறை கவனித்துக் கொள்ளுங்கள்.

இதில் இப்போது நீங்கள் யார் வீட்டு விருந்தினர் அல்லது நண்பர் என்று முடிவு செய்து கொள்ளுங்கள். வீட்டில் இருந்து யாரும் நீங்கள் யாரு? எந்த ஊரு என்றெல்லாம் கேட்க மாட்டார்கள்.

ஆனால் நமக்கென்றே வருவார்கள் பந்தியில் அருகிலிருக்கும் உத்தமர்கள். வந்த வேலையை தவிற எல்லாவேலைகளையும் பார்ப்பார்கள். 

அவர்களிடம் பேச்சு கொடுக்காமல் நண்பர்களோடு பேசி கொண்டு திருப்தியாக சாப்டிட்டு வருவது நல்லது. சில வேளைகளில் மது உண்டு வந்து ஆத்திரம் கொள்ள செய்பவர்களும் உண்டு.

நாங்கள் வழக்கமாக முஸ்லீம் வீட்டு நிக்காவில் பங்கு பெறுவது உண்டு. ஒரு முஸ்லீம் மண்டபத்தினை கடந்து தான் பணிபுரியும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதனால், அங்கு திருமணம் நடந்தால் காலையிலே தெரிந்து விடும்.

மதிய உணவு வேளையில், பொடி நடையாய் மொபைலை பார்த்துக் கொண்டு நானும் எனது நண்பரும் பந்தி நடக்கும் இடத்திற்கு சென்று விடுவோம்.

மணக்க, மணக்க மட்டன் பிரியாணி பரிமாறுவார்கள். சில்லி சிக்கன் வேறு மட்டனும் பிரியாணியும் கையில் பிசையும் போது வித்தியாசம் தெரியாத அளவு இருக்கும். வாயில் வைத்தால் பூ போன்ற இட்டிலிகள் எல்லாம் தற்கொலை செய்து கொள்ளும் இந்த பிரியானியை ஒரு முறை ருசி பார்த்தால். 

அவ்வளவு அருமையாக இருக்கும். எங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு போர் அடித்து விட்டது. நண்பன் கூறினான் அடிக்கடி அசைவம் சாப்பிட்டு போரா இருக்கு கொஞ்சம் தள்ளி உள்ள போனா அங்க ஒரு ஹிந்து கல்யாணம் நடக்குது நல்ல அவியல் கூட்டு பொரியல் வச்சி இண்ணைக்கு ஒரு கட்டு கட்டுவோம்னு கூட்டிட்டு போனான். 

அங்க போய் உக்காரவும் நல்லா பாயாசம் மணம், அதுக்கு முந்தின பந்தில ஊத்தினது சரி நமக்கும் கொண்டு வருவாங்க. பப்படம், பழம் போட்டு பிசஞ்சி ஒரு அடி அடிப்போம் என்ற கற்பனையோடு. இலை வந்து போட்டார்கள்.

தண்ணீர் வந்தது அடுத்து முதல் கூட்டு என்ன தெரியுமா? சத்தியமா அவியல் இல்லை. மட்டன் கூட்டு அதுவும் பெரிய ஆப்பையில எடுத்து வைக்குறாய்ங்க. சைவம் சாப்பிட வந்தவங்கடா என்ற மனதின் குரல் மட்டனை பார்த்ததும் படுத்து விட்டது.

நல்ல சாப்பாடு. காலம் எல்லாம் நினைவில் இருக்கும் இது போன்ற நினைவுகள். அதனால் மறக்காதீர்கள் அலைபில்லாதா திருமண வீட்டு சாப்பாடு பிரமாதம்.

உங்களால் ஓசி சோறு சாப்பிட மனம் வரவில்லையென்றால். சாப்பிட்டு முடித்து விட்டு மொய் எழுதிட்டு வாங்க.

“நாங்கெல்லாம் அழைப்புள்ள வீட்டிலே மொய் எழுத அம்மா தாரா காசா மொய் எழுதாமா திருட்டு சரக்கு அடிப்போம்” அப்படி யாரும் சொல்லிட்டு வராதீங்க.

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *