இலங்கையும் கேரளாவும் அக்கா தங்கை ( Srilanka and Kerala )

 கடவுளின் தேசம் என்று கேரளத்தை அனைவரும் குறிப்பிடுவது உண்டு. அவ்வாறு, அதற்கு ஏற்றவாறு தான் தன்னை தானே அமைத்திருக்கும் கேரளம்.


இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு கேரளத்தை மிஞ்ச வேறு எந்த நாடு இருந்து விட முடியும்? என்ற கேள்விக்கு இலங்கை என்ற அந்த சிறிய நாடும் போட்டிக்கு வருகிறது. 

கேரளாவை ஓரம் கட்டும் அளவு இல்லையென்றாலும் அதற்கு இணையாக சில இடங்கள் உள்ளது. மற்றும் கேரளாவில் மக்கள் அவரவர் வீட்டை சுற்றி மரங்கள் செடிகள் கொடிகள் என அனைத்திற்கும் இடம் அமைத்திருப்பார்கள். 

அப்படியே அந்த நடைமுறையை இலங்கையில் பரவலாக காண முடிகிறது. ஒவ்வொரு வீடும் குறைந்தது இருவது சென்ற் நிலத்தின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. அதாவது இருபது சென்ற் நில அமைப்பு கொண்ட இடத்தின் நடுபகுதியில் மூன்று அல்லது நான்கு சென்ற் அளவு மனைகளை அமைத்து வீட்டை சுற்றி முற்றம் பெரிதாகா அமைத்து தினமும் அழகாகா பராமரித்து வருகிறார்கள். 

மழை ஓய்ந்த போது சாலையோர வீடுகள்

மழையில், மாலையில் இலங்கை சாலை

சாலையோர கடை, கோடை மழை

இலங்கை பேக்கரி முழுவதும் மைதா மா பன்கள்


கேரளாவில் கோடை காலம், மழைகாலம் என்றெல்லாம் இல்லாமல் எப்போது மழைவரும் என்பதை கணிக்கவே முடியாத அளவு வாரம் குறைந்தது ஒரு முறையாவது மழை பொய்துவிடும். ஆனால் இலங்கையில் அப்படி இல்லை காலநிலை தமிழ்நாட்டை ஒத்து உள்ளது.

இருப்பினும் நுவோரிலியா, கண்டி, மாத்தாளை போன்ற மலைகள் சூழ உள்ள கிராமங்கள் மழைகாலம் கொஞ்சம் கேரள தேசத்தை ஓத்து உள்ளது.

என்னை மிகவும் கவர்ந்தது கேரளாவிலும் சரி இலங்கையிலும் சரி வீட்டு அமைப்பு தான் மாலை ஆனால் அனைவரும் வீட்டு முற்றத்தில் நாற்காலிகளை போட்டு அதில் குடும்பத்தினரோடு அமர்ந்து பருகும் தேநீராகட்டும் அல்லது சில குடும்பத்தினர் கணவன் மனைவி மாமனார் மாமியார் என அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது விருந்தும் பருகுவது உண்டு.

அது ஒரு ஆனந்தம் தான் அளவாக இருக்கும் வரை, அனைவருக்கும் இப்படி ஒரு ஒரு இயற்கை அமைப்பின் நடுவே வாழத்தானே ஆசையாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல் "Work Balancing Life" என்பார்கள் அது சரியான முறையில் கடைபிடிப்பவர்கள் கேரள மக்கள் தான் பணம், பணம் என்று அதன் பின் ஓடிகொண்டே இருக்காமல் மாலை ஏழு மணி ஆகிவிடால் கடைகளை எல்லாம் மூடிவிட்டு வீடு சென்றுவிடுவார்கள். அதிகபட்சம் எட்டு மணி அதன் பின் தெருக்களில் யாரையும் காண முடியாது.

 முக்கியமான நகரங்களில் கூட அப்படிதான். நம்ம ஊர்களில் முக்கிய நகரங்களில் விடிய விடிய கடைகள் வியாபாரம் படு ஜோர் தான் என்றாலும் அனைவரும் கடன் வாங்கிக் கொண்டு, அந்த கடனை அடைக்க இரவு பகல் பார்க்காது உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதும் ஒரு புற உண்மை.

இலங்கை மக்கள் மிகவும் சோம்பேறிகள், அவர்களுக்கு ஏற்றவாறு சட்டமும் உள்ளது எட்டு மணி நேரத்திற்கு மேல் பணி புரிபவர்களுக்கு கட்டாயம் அதிக ஊதியம் என்றாலும் நல்ல உழைப்பாளிகள் நாற்பதில் ஒருவன் தான். இந்த சிறிய தீவு இங்குள்ள மக்கள் உண்மையில் நன்கு உழைத்தால் இந்த நாடு எப்போதோ முன்னேறியிருக்கும். 

உயர் அதிகாரிகளின் சுரண்டல் அது மொருபுறம், இங்குள்ள காவல் அதிகாரிகாள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதை காண முடிந்தது. 

ஒரு வாலிபன் தலையில் தலைகவசம் அணியாமல் சென்று கொண்டிருந்தான். அவனை  காவல் அதிகாரிகள் நிறுத்த. அவன் நிற்காமல் சென்றான் ஒரு காவளர் துரத்தி சென்று பிடிக்க முயன்றார் ஆனால் அவன் நிற்காமல் சென்றான். வேகமாகா இடது பக்கமாக வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து நீட்டுகிறார் ஆனால் அந்த வாலிபன் பயமற்றவனாய் நிற்காமல் வேகமாக சென்று விட்டான். 

அவனை பிடிக்க முடியாத அவமானம் கையில் துப்பாக்கி ஏந்தும் அளவு செய்கிறது என்பது மிகவும் ஆபத்து தான்.

வெயில் அடிக்கும் போது திருநெல்வேலி தோற்று போகும். அந்த அளவு வெயில் கோடை தாக்கு பிடிப்பது மிகவும் சிரமம் தான் இலங்கையில். கேரளாவிலும் வெயில் அதிகம் என்றாலும் திடீர், திடீரென கூடும் கார்மேகங்கள் உண்மையில் அது கடவுள் தேசம் தான் என்று கூற வைக்கிறது.

உணவை பொறுத்த வரை இலங்கையில் மதிய உணவு சிங்களத்தவர்கள் கடைகளில் வைத்திருக்கும் ப்பே முறை அழகாகா இருக்கும் நானுறு இலங்கை காசுக்கு நல்ல மீன் சாப்பாடு கிடைக்கும். 

கேரளாவில் அரிசி மிகவும் பெரியதாக மற்றும் மீன்குழம்பு பிரமாதமாக இருக்கும். இலங்கையில் அவ்வளவு பிரமாதம் இல்லை என்றாலும் சுவையில் குறையில்லை.

அது ஒரு விதம் இது ஒரு விதம். சோறு போடும் இடம் சொர்க்கம் தானே...  

Post a Comment

0 Comments