Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

ஹீராமண்டி (Hiramandi - The Diamond Bazaar)

 நவாப் ஆட்சி காலம் அது வேசிகளுக்கு என்று ஒரு தனி அரண்மனை, நவாப்கள் பொழுது போக்கு வேசிகளின் நடனம். ஆடும் வேசிகளுக்கு நவாப்கள் பொற்காசுகளை வாரி இறைக்கின்றனர். 


பொற்காசுகள், வைரம் வைடூரியம் என நவாப்கள் எண்ணிலடங்கா செய்வங்களை பரிசாக அளிக்கின்றனர்

வயது வந்து முதலில் வேசியாகும் பெண்ணிற்கு மூக்கு வளையம் விலக்கும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பல நவாப்கள் வருகை தருவார்கள், அதில் பல பொய்காசுகளை கொடுத்து அந்த பெண்ணை விலைக்கு வாங்கி கொள்வார்கள் அவள் கடைசி வரை அந்த நவாப் யுடன் மாத்திரம் இருக்க வேண்டும். 

மற்றைய பெண்கள் அன்றாடம் வரும் வழிபோக்கர்கள் தொடங்கி பலரும் பலருடன் சென்று செல்வங்களை ஈட்டிக் கொள்கின்றனர். இதில் நவாப்கள் கொடுத்த கனவு மாளிகை யாருக்கு என்ற போட்டி வேசிகளுக்கு இடையே நடக்கிறது. 

வேசிகள் எப்போதும் மது போதையிலே காண்பிக்கபடுகின்றனர். வேசிகளை பற்றிய படம் என்றாலும் ஆபாசங்கள் இல்லை. 

இப்படி கனவு மாளிகைகளுக்காவும், நவாப்களுக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த வேசிகள் கடைசியில் சுகந்திர போராட்டத்திலும் பங்கு கொண்டு பல ஆங்கிலேயர்களை துப்பாக்கியால் சாதுர்யமாக சுட்டு தள்ளுகிறார்கள்.

வேசிகள் தலைமை மல்லிகா (மனீஷா கொயர்லா) சிறப்பானா நடிப்புபை வெளிக்காட்டி இருப்பார். அவர் வயதிற்கு ஏற்ற நடிப்பு. சிறந்த கதாபாத்திரம்.

மல்லிகாவின் மகளை விடுதலை இயக்கத்தின் தொடர்பு உடையவள் என்று ஆங்கிலேயர்கள் காவலில் வைக்க அவளை விடுவிக்க வேசிகளின் தலைவி மல்லிகா காவல் நிலையம் செல்ல அவளை விலை பேசுகிறார்கள் கார்பர்ட் என்ற உயர் அதிகாரி தலைமையில்.

அப்போது நான்கு, ஐந்து போலீஸ் காரர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு வலியால் துடிக்கிறாள் ஒரு புறம் உடல் வேதனை, மறுபுறம் அரண்மனையை அடைய போராடும் சதி காரியின் துரோகம் மகளின் வாழ்கை என்று அத்தனையும் தனி ஒருத்தியாக தாங்கிய போதும் உடன் இருந்து பணிப் பெண்ணை வேறு நவாப்களுக்கு விற்று அவளின் காதலனை  சூதாட்டம்கா விளையாடிய குற்றம்கூறி காவலில் தள்ளி அவர்கள் காதலில் செய்யும் சதி நம்மையும் மல்லிகா மீது கோபம் வர செய்யும்..

இப்படி பெண்களை மய்யமாக கொண்டு மிகவும் சிறப்பாக தேர்த்தியாகா ஒவ்வொரு வசனமும் அமைக்கப் பட்டுள்ளது.

இந்த வெப் சீரியஸ்க்கு மிகப் பெரிய வெற்றி. இசையும் சினிமொட்டோ கிராபிக்ஸ் மிகவும் பிராமாதம். 

கடைசியாக சுகந்திரம் கிடைத்த பின்னும் பெண்கள் தங்கள் தனிப்பட்ட சுகந்திரத்திற்காக போராடிக் கொண்டே இருந்தார்கள் என்று கூறி முடிகிறது இந்த ஹீராமண்டி வைர புதையல் கொண்ட வேசிகளின் கதை அனைவரும் குடும்பத்துடன் பார்க்கலாம்

வேசிகள் பற்றி எடுக்கப் பட்டதால் ஆபாசமாக இருக்கும் என்று என்ன வேண்டாம்.

Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...