Skip to main content

உழைப்பின் பலன்

உழைப்பின் பலன் " டேய் , பீட்சா வாங்கித் தாடா ... சாப்பிடணும் போல இருக்கு ! நான் வேளச்சேரிக்கு வந்துடுறேன் ," என்று மிகவும் கெஞ்சலாகக் கேட்டாள் ரோகிணி . அப்பொழுதுதான் பாதி லோடு அரிசி மூடைகளை லாரியில் இருந்து இறக்கி முடித்திருந்தான் குமார் . கையில் ஒரு சோடா பாட்டிலுடன் , கொளுத்தும் வெயிலில் நெற்றி வியர்வை வழிய , இறக்கி வைத்த மூடை ஒன்றின் மேல் அமர்ந்தபடி காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியே ரோகிணி சொல்வதைக் கேட்டுச் சற்று எரிச்சலுடன் தெரிந்தான் . அவனுடன் இருந்தவர்கள் அடுத்த பாதியை இறக்கத் தயாரானார்கள் . " உங்க அப்பன்கிட்ட கேட்க வேண்டியதுதானேடி ... ஏன் என் உசுரை வாங்குற ?" என்று கோபமாகக் கடித்துக் கொண்டான் . ஆனால் , ரோகிணிக்கு அவனது கோபம் என்னவோ கொஞ்சுவது போலவே இருந்தது . " அவரு எப்போ கேட்டாலும் வாங்கித் தருவாரு ... ஆனா நீ வாங்கித் தர்றதுல இருக்குற ருசி இருக்காதுடா …" என்றாள் காதலுடன் . " கஷ்டப்பட்டு உழைச்சு வாங்குனா ருசியாதான்டி இருக்கும் . உங்க அப்பனை மாதிரி வட்டிக்கு விட்ட...

கோடை மழை

 அனல் வீசுகிறது ஊரெங்கும், நிற்க நிழலில்லை. நிழல் கிடைத்த போதும் காற்றில்லை. வெக்கை பிழிந்து எடுக்கிறது உடல் நீரை. தாகம், தண்ணீர் குடிக்க குடிக்க அடங்கவில்லை.


அனைவரும் சுட்டெரிக்கும் சூரியனை பற்றி பேசாமல் இல்லை, என்னா வெயில் நாப்பது டிகிரி மேல அடிக்கும். இப்படியே போனால் வர போரா சந்ததிகள் எல்லாம் பூமியில வாழுறது சந்தேகம் தான். என்றான் மாரிமுத்து

கொஞ்சம் கூட இரக்கம் இல்லை, இந்த வெயிலுக்கு காலையில ஏழு மணிக்கு இப்படியா கொதிக்கும்! மாடி படியில் காலை வைக்க முடியல. நாம சின்ன பசங்களா இருக்கும் போதே கோடை விடுமுறை நேரங்களில் விளையாடா போனா அம்மா வையும், இந்த வெளியில் விளையாடாத! சாயங்காலம் விளையாடலாம் என்று சொல்லும்.

இருபது வருடங்களுக்கு மேல் ஆண்டு தோறும் வெயில் அதிகரித்து தற்போது இந்த நிலையில் வந்துள்ளது. மரங்கள் எல்லாம் வெட்டி வேலி அமைக்க, தழைக்க முடியாமல் வேரில் நவீன மருத்துகள் ஊற்ற என்று நம் மக்கள் செய்யும் வேண்டாதா வேலைகள் கொஞ்சம், நஞ்சமா என்ன !

காகிதங்களுக்கும், வீடுகளுக்கும் என்று அனைத்திற்கும் மரங்கள் பயன்படுத்தாமல் வாழ்கை இல்லை என்ற நிலையில் வாழ்வை நகர்த்துகிறது, இந்த நூற்றாண்டு 

அப்துல் கலாம் ஐயா வரும் கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகும் அனைவரும் மரம் நடுங்கள் என்று கூறியதன் விளைவு எத்தனை தன்னார்வல நிறுவனங்கள் மரங்களை நட்டனர்.

நடிகர் விவேக் மாத்திரம் லட்சங்களுக்கு மேல் இத்தனை முன்னேற்பாடுகள் செய்தும் வெயிலை தாக்கு பிடிக்கமுடியவில்லை என்றால் காரணம்! 

நாம் நட்டத்தை விட வெட்டியது அதிகம் எனலாம், வெட்டி வீழ்த்திய மரங்கள் எல்லாம் பல ஆண்டு வரலாறு கொண்டவை, வானுயர்ந்து வளர்ந்து நின்றவை அவற்றை வெட்டி வீழ்த்திவிட்டு, புதிய மர விதைகளை விதைக்க அவைகள் வளர்ந்து முழு பலன் தர இன்னமும் காலம் உள்ளது.

அதுவரை என்ன செய்வது என்று கேட்டால் தொடர்ந்து விதைகளை விதைத்து பெரும் காடுகளை உருவாக்கிக் கொண்டே இருப்போம். அது ஒன்றே நம்மையும் நம் சந்ததிகளையும் வரும் காலத்தில் காப்பாற்றிக் கொள்ள சிறந்த வழி.

வெயிலை தாங்க முடியாமல் சிதறி ஓடும் மனிதன் மழை வேண்டி கூச்சலிடுகிறான். இத்தனை கொடூரமாக விழும் சூரிய வெப்பம் கடல் நீரை மொத்தமாக ஆவியாக்கி விட வேண்டும் அப்படி தான் உள்ளது.

வெப்பம் விழுங்கிய கடல் நீர் மேலோட்ட மேகமாகி புண்ணியவான்கள் வாழும் இடம் நோக்கி நகர்கிறது போல. அதனால் தான் இத்தனை தாமதம் நம்மூர்களில் மழை பொழிய.

கனம் தாங்காமல் எப்போ! எப்போ விழுவேன் என்று காத்திருந்த மழை இரண்டு நாட்களாக மண்ணை குளிர்விக்க அதுவும் பொறுக்காத சில அசட்டு கும்பல் என்ன இது கோடைக்காலாமா இப்படி மழை பொய்கிறது என்கிறார்கள்.

இந்த வார்த்தைகளை கேட்கும் போது மனதில் எரிச்சல் தோன்றுகிறது. மழை என்றால் கூட பொறுத்துக் கொள்ள முடியும் ஆனால் வெயிலை யாரால் தாங்க முடியும். 

உடலில் உஷ்ணம் தாங்காமல் ஏற்பாடும் பல அலர்ஜி வேறு, சூட்டுக் கட்டிகள், வியர்க்குருக்கள் என எண்ணிலடங்கா விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை இவர்கள் மறந்து தான் போகிறார்கள் போல.

ஏகனவே ஏற்பட்டுள்ள காலமாற்றம் தாங்க முடியாது இன்னலுறும் மக்கள், இதில் கோடை காலத்தில் மழை பெய்யத் தான் வேண்டும். சிறு குருவிகள், காட்டுப் புறாக்கள் என அனைத்தும் பறக்க முடியாமல் வெயில் தாங்க முடியாமல் சிறு சிறு பள்ளங்களில் தேங்கி கிடக்கும் நீரில் அமர்ந்து தங்களை காத்துக் கொள்கின்றன.

இந்த மழை அவைகளுக்கு எத்தனை இதம் பெற்றுதந்திருக்கும். ஆயிரம் வரங்கள் பெற்றாலும் இயற்கை தரும் மழையின் சக்திக்கு ஈடாகாது.

கோடை மழை யொன்று இல்லையென்றால் பல்லாயிரம் உயிர்கள் வெப்பம் தாங்காது மாண்டு போகும்.





Comments

Popular posts from this blog

சுயம்

 இன்றிலிருந்து தினமும் என்னில் அல்லது என்னுள் நடப்பதை எழுத முடிவெடுத்துட்டேன். என்பது எனக்கு கொஞ்சம் அசவுகரியமாக உள்ளது என்றாலும், எழுத வேண்டும் என்று எண்ணுகிறேன். எழுத அசவுகரியம் செய்வது என்னுடைய குணமே அன்றி வேறில்லை. அத்தனை கழிசடை எண்ணங்களையும் கொண்டுள்ள நான் எப்படி அசவுகரியம் கொள்ளாமல் இருக்க முடியும் ? சரி எது எப்படியோ எழுதுவது ஓர் நாள் என்னை மாற்றலாம் என்ற நம்பிக்கையில் தொடருகிறேன். சுயம் 1 என்பதில் இருந்து தொடரும். முப்பத்து மூன்று வயதில் இருந்து எழுத போகிறேன் எத்தனை நாட்கள் தொடரும் என்பது தெரியவில்லை என்றாலும் எழுத பிடிக்கிறது. தினமும் நடப்பது மட்டும் இல்லாமல் என்றோ நடந்த ஒன்றும் கூட அதன் வரிசையில் வரலாம்.  அது ஒரு ஏகாந்தத்தை தரும் என்று நம்புவோம்..... சுய சரிதை எழுதும் அளவு என்ன சாதித்து விட்டோம் என்பதெல்லாம் இல்லை. அன்றாடம் நம் வாழ்வில் நடப்பதை எழுதுவது என்பது மிகவும் வேடிக்கையாக இருக்கும். ஒரு வயோதிக பருவத்தில். இந்த பொழுதில் நாம் அனுபவிக்கும் வலிகள் எல்லாம் அன்று நம்மை அறியாமல் நிச்சயம் ஒரு ஆனந்தத்தை தரும். நம் வாழ்வை திரும்பி பார்க்க ஏதுவாக் இருக்கும்.  ஒவ்வொர...

அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

  எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்.. எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்.. நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !! நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் ! பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !! நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்... மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !! உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்... உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு... புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !! எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்... மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க... நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து.  உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !! இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... ...

கற்பனைகளின் தாக்கம்

நிச்சயம் இல்லாத வாழ்கை தான் இருந்தும் நாம் அதில் நிச்சயம் செய்து கொள்ளும் வழக்குகளும் வளாகங்களும் தூரிகை முகம் கொண்டு தினம் தினம் நினைவு செய்து இன்னல்கள் என்ற பேரின்ப வரி விதிக்கின்றது ! இத்தனை பெரிய வாழ்வில் எத்தனை சிறுய துன்பங்கள் என்றாலும் கூட பொறுத்துக் கொள்ளும் திடம் மனதில் விதைக்க சூழ்நிலைகள் தான் முடிவு செய்து முடிக்கின்றது அது இவன் திடவான் என்றும் அல்லது தயிரியம் மற்றவன் என்றும் ! நடை பாதையில் சூழ்ந்து வரும் மாந்தர்கள் பேசும் வார்த்தைகள் நம் வாழ்வோடு ஒப்பிட்டு பார்த்து சிறுது ஆனந்தம் திளைத்துக் கொள்ளுகிறது ஏதோ தற்போதைய ஆறுதல் என்றாலும் இந்த பொழுது அதன் சாரமே கடந்து செல்ல வைக்கிறது ! நிம்மதி தேடி அலையும் போது சனம் கூடி நிற்கும் வெளிகளில் சென்று அமைதியாக நிற்பதும் அவர்கள் நண்பர்களோடு அல்லது தொலைபேசியில் யாருடனோ தனது இன்ப துன்பத்தை வரிசைப் படுத்தும் போது நாம் எத்தனை இடங்களை நம் வாழ்வில் சரியாக பயன் படுத்திக் கொள்கிறோம் என்ற பேருண்மை விளங்கப் பெரும் ! பல முட்டாள்களின் முட்டாள் தன்மான உரையாடல்கள் தான் வியத்தகு பாடங்களை விளக்குகிறது யாருடைய வரவையும் அல்லது அருகில் இருப்பவர்கள் பற்றி...