யார் இந்த பூமியில் நிரந்தரமானவர்கள் ?
- Get link
- X
- Other Apps
எந்த பூமியை பற்றி பேச பால்வெளில் பல்லாயிரம் பூமிகள் உள்ளது, இதில் நாம் எந்த பூமியில் இருக்கிறோம் என்பதை ஏதோ ஒரு மனக்கணக்கில் குறித்து வைத்திருக்கலாம் யாரோ ஒருவர் அதனை அங்கீகாரம் செய்ய ஒருவரை நாடியிருக்கலாம்.
அவர் அதனை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு அனுபவ அறிவாக இருக்கலாம் அந்த அனுபவ அறிவு அவர்களுக்கு கிடைத்தது ஏதாவது ஆன்மீக புத்தகத்திலா இருக்கலாம்.
மனிதன் மனத்தால் தெய்வீக பரிணாமத்தை அடையாமல் அவனால் எதையும் ஊர்ஜித படுத்த முடியாது. அவன் அகவழி பயணம் மாத்திரமே மெய்ஞானத்தை தரும். அந்த ஞானம் அவனை உயர்த்தும்.
அண்ட சராசரங்கள் யாவையிலும் அவனை வியாபிக்க செய்யும். ஆனால் பூமியில் நிலையாக, நிலையானவர்களாக இருக்க முடியுமா என்றால் சாத்தியம் இல்லை. சித்தர்கள் ஞானிகள் தேவர்கள் எல்லாம் மரணமற்றவர்கள் தான் என்ற போதும் அவர்கள் பூமியில் இல்லையோ என்று தான் தோன்றும்.
உடலை விட்டு உயிர் சென்ற பின் உடல் இன்பங்கள் அதாவது உலக இன்பங்கள் எல்லாம் மாயை என்கிறாரகள். மாயா நதியில் தினம் தினம் உழன்று வாழும் நமக்கு மாயம் என்ன மந்திரம் என்ன வென்று தான் தோன்றுகிறது.
நிரந்தனமானவர்கள் என்று பூமியில் ஏதும் இல்லை மலைகளும், கடல்களும் கூட காற்றும் நதியும் கூட எல்லாம் மாறிக் கொண்டே தான் இருக்கிறது.
எல்லாம் கால மாற்றத்தில் சுழன்று கொண்டு தான் இருக்கிறது. நிரந்தரம் என்ற நினைப்பே நிரந்தரம் இல்லா நிழல் நினைவு தான்.
நிரந்தரம் என்பது உண்மையில் மாற்றம் ஒன்றுதான் அந்த மாற்றம் ஒன்று தான் என்றும் நிரந்தரமாக உள்ளது.
பிறந்து வளர்ந்து வாழ்ந்து நாம் அரசனோ அரண்மனை மந்திரியோ யாராக இருந்த போதும் மரணம் என்பது உறுதி, இருந்தும் மனிதர்கள் தவறு செய்ய தயங்குவதில்லை.
அவர்கள் மனக்கணக்கில் கோபுரம் கட்டி வாழ்கிறார்கள் வாழ்வு நிலையானது நாமும் நிலையானவர்கள் என்று நம்புகிறார்கள்.
அதனால் எப்போதும் போய் பேசி ஏமாற்றி வாழ்கிறார்கள் இப்படி அவர்கள் வாழ வேண்டிய அவசியம் என்ன?
நம்மை சுற்றி என்ன நடக்கிறது! நேற்று நம்மருகில் உயிரோடு இருந்தவர்கள் இன்று வெறும் புகைப்படமாக இருக்கிறார்கள்.
இப்படி பல மரணங்களையும், அவர்கள் வாழ்வையும் பார்க்கும் போது மனதிற்குள் பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளது.
நாம் எதற்க்காக பிறந்தோம் சாதாரணமாக ஒரு வாழ்வை வாழ்ந்து விட்டு செல்லவா இந்த பிறவி என்பதில் ஒரு நிறைவு இல்லை.
ஊரறிய ஏதோசாதித்து விட வேண்டும் என்ற எண்ணம் தற்போது குறைந்து நம்மை நாம் மாற்றி விட வேண்டும். என்று தோன்ற செய்கிறது இல்லாமல் வெறும் கூலிக்காக மாத்திரம் வேலை செய்து உடல் வாடி மடிவதை விட ஒரு சிறந்த செயல் ஒன்றை செய்து விட்டு நிம்மதியாய் மரணிப்பது சிறப்பு தான்.
எல்லாம் இறையருள் தான் என்றபோதிலும் மனதின் கற்பனைகளை கட்டுப் படுத்த பல வழிமுறைகள் கொடுக்கப் பட்டுள்ளது அல்லது போதித்துள்ளார்கள் என்று கொள்ளலாம்.
நிரந்தரமானா ஏதும் நிரந்தரமாய் இல்லையென்று தான் தெளிவு படவேண்டியுள்ளது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி