கனவு ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடு
- Get link
- X
- Other Apps
நாள் : 19/05/2024
நாடு : இலங்கை
இடம் : புத்தளம்
நேரம் : 6:10
தூக்கம் வரும் அனைவரும் தூங்கத் தான் செய்வார்கள் சிறிது கண்ணயர்ந்து விட்டேனாம்… கனவும் வந்தது வெள்ளமும் வந்தது.
உண்மையில் கனவுகள் அனைத்தும் நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது. சாதாரணமாக கனவு தானே என்று விட்டு விட முடியாது. கனவுகள் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஆழ்ந்து பதிந்த நினைவுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது நடக்க போவதாக இருக்கலாம். தினமும் கனவு காண்பவர்கள் வரிசையில் தினம் தினம் புது புது கனவுகள் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இல்லாதவை இப்படி கனவுகள் தினமும் தோன்றினாலும் சில கனவுகள் நம்மை பயமுறுத்தி விடும்.
சில கனவுகள் நமது வாழ்வில் நடக்கும். கனவுகளுக்கு தொடர்போடு சில கதைகளும் வாழ்வில் ஐக்கியமாகும்.
அன்று பெரிய சுனாமி கோடைகாலம் பலர் அங்கும் இங்கும் நீரில் அடித்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நான்மட்டும் நீரோட்டம் அறிந்தவனாகவும் அந்த கோர அலைகளில் நீந்தும் வல்லமை பெற்றவனாக, எனக்குள் இருந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரன் அனைவரையும் காப்பாற்றும் உத்வேகத்தில் இருக்க.
அவனை தடுக்கலாகதவனாய் இயற்கையும் அவனுக்கு துணை புரிகிறது. அவனால் இயன்ற அளவு மக்களை காப்பாற்றிக் தப்பிக்க ஏதுவானா இடங்களில் சேர்க்கிறான்.
மூழ்கவிருந்த கப்பலை கண்டு அதில் இருந்து மரண பிடிக்குள் தவிக்கும் மக்களை காப்பாற்ற முனைகிறான், திடீரென்று அலை சத்தங்கள் வித்தியாசமாக குளத்து நீர் காற்றில் அலம்புவது போல சத்தம் கேட்கிறது.
அப்போது தான் லேசாக விழிப்பு தட்டியது அது கனவு என்பது தோன்றியது சிறிது புரண்டு படுக்க தண்ணீருக்குள் முழுவதும் நனைந்து இருப்பதை உணர்ந்து எழுந்து பார்த்தால் அரை முழுவதும் தண்ணீர் தரையில் வைத்திருந்த தொலைபேசி மூழ்கும் அளவு தண்ணீர்
நிஜமாகவே சுனாமி தான் என்று அலறி அடித்து எழுந்து பக்கத்து அறைகளில் படுத்திருந்த நண்பர்களை எழுப்பி கூற அனைவர் அறையிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை பார்த்த நண்பர்கள் பயந்து வெளியில் ஓட கதைவை திறக்க வெளியில் இருந்து அதிக நீர் அறைக்குள் சாடியது
அதன் பின் தான் புரிந்தது மாடியில் அமைக்கப்பட்டிருந்த சிட் அவுட்டில் மழை நீர் வடிய அமைத்திருந்த குழாய் அடைபட்டு நீர் பெருகி வீட்டிற்குள் வந்துள்ளது.
சுனாமி வந்தது போன்ற கனவு தண்ணீர் உள் நுழைய ஆரம்பித்த போதே துவங்கியிருக்கிறது, உறக்கத்தில் கவனிக்க முடியவில்லை ஆனால் உள்ளுணர்வு அதனை கனவு வாயிலாகா புரியவைக்க முயற்சித்து உள்ளது.
அதனை உணரும் அளவு தெளிவு இல்லாத உறக்கம். உறக்கம் தெளிந்த பின் அனைத்தையும் உணர முடிந்தது கனவின் அடி நாதமும் புரிந்தது.
இது கனவின் மூலம் காலம் எதிர்வர இருக்கும் விளைவு ஒன்றை முன்கூட்டியே தெரியபடுத்தி அதிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவுகிறது.
கனவு என்பது வெறும் கனவு அல்ல அது ஒரு இயற்கையின் முன்னெச்சரிக்கை ஏற்பாடு...
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி