Merry Christmas மேரி கிருஸ்த்துமஸ்
- Get link
- X
- Other Apps
மரியா, ஆல்பர்ட் இருவரும் காதலர்கள் போலவே அறிமுகமாகிறார்கள். கதையின் ஆரம்ப நகர்வு இல்லுமினேஷன் போலவே இருக்கும், நம்மை நாம் குழப்பிக் கொள்ளவும் நேரும்.
டைம் டிராவல் படமாக இருக்கும் என்ற எண்ணம் வரும், கதையை காட்சி படுத்தியது அற்புதமாக இருந்தது.
விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் சாதாரணமாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.
நானும் ரவுடி தான் படத்தின் வரும் ராதிகா அங்கு கிரோவின் தாயாகவும் போலீஸாகவும் இருக்க, இங்கு போலீஸாக மாத்திரம் வருகிறார் அதுவும் ஏட்டு ஐயாவாகா.
காத்திரினா வை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றவில்லை, காத்திரினா கதாபாத்திரத்தை மடோனா செய்திருந்தால் இன்னமும் கதை நகர்வு நம்மை சுவாரஸ்யம் செய்திருக்கும்.
ஏனென்றால் விஜய் சேதுபதி, மடோனா இவர்கள் இருவருடைய கெமஸ்டிரி இதற்க்கு முந்தைய படத்தில் விட்டு போன ஒன்றானதால் கொஞ்சம் அதனுடன் தொடர்பு படுத்தி பார்த்திருக்கலாம்.
கிளைமேக்ஸ் சூப்பர். சேதுபதி அந்த குழந்தையிடம் சொல்லும் கதை குழந்தைக்கு போர் அடிக்க அது உண்மையாக நடக்கும் போது சேதுபதி இதற்க்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று முடிவு எடுத்து முகவும் ஏதெர்ச்சையானா நடிப்பு நம்மை வியப்பூட்டும்.
அனைவரும் பார்க்க வேண்டிய படம் வித்தியாசமான கதை களம். காத்திரினா, சேதுபதி லிப்ட் கிஸ் அவ்வளவு சுவாரஸ்யம் ஏற்படுத்தவில்லை பார்க்கும் போதும்.
ஒருவேளை சேதுபதிக்கு ஏற்பட்டிருக்கலாம். மற்றபடி அனைவரும் ஒருமுறை கட்டாயம் பார்க்கலாம்.
சில நாட்கள் கழித்து ஞாயிறு விடுமுறை போர் அடித்ததால் நெட்பிளிக்ஸ் ஐடி நண்பனிடம் கடன் வாங்கி பார்த்த நினைவு இந்த பதிவோடு ஒன்றியிருக்கட்டும்.
மீண்டுமொரு படத்துடன்….
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி