கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

சர்பத் ஒரு அவமான பானம்

 முந்தைய நாள் மச்சானுடன் அடித்திருந்த ரம் காலை சிறிது மந்த நிலையில் மூளையை வைத்திருக்க, குமார் செய்வதறியாது வீட்டில் முன் வாசலுக்கு, பின் வாசலுக்கு நடந்துக்கொண்டிருந்தான் வீட்டின் பின் புறம் சிதறி கிடந்த கற்கள் “சரம்பல் கற்கள்” காலில் குத்துவதாக குமாரின் மனைவி கூற, ஏற்கனவே கிறக்கத்தில் இருந்தவனுக்கு ஒரு யோசனை.


பின்புறம் நடைபாதை போன்ற வடிவமைப்பில் ‘கூழாங் கற்களை’ பதித்து வைத்தால் கால்களுக்கு இதமாகவும், அக்கு பஞ்சர் போல குதி கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூட்டு வலி நிவாரணியாக செயல் படும் என்று பத்திரிக்கை ஒன்றில் படித்த நினைவு. அவன்  அந்த யோஜனையை மனைவியிடம் கூற அவள் சரி என்றி இழுத்துக்கொண்டே கேட்க நல்லா தான் இருக்கு! யாரு பண்ணுறது ? கல்லு வாங்க எவ்வளவு காசு ஆகும்னு ஏதாவது விசாரிங்க என்றாள்.

குமார் சற்று அவன் புத்திசாலி தனத்தை மனைவியிடம் நிரூபிக்க விரும்பியவனாய் அதுக்கு எதுக்கு காசு! இப்படியே கொஞ்சம் தூரம் போனால் மலை தான் ஓடைகளில் சும்மாவே கிடக்கும் அதை போய் இரண்டு சாக்கு அள்ளி போட்டால் போதும் என்றவனாய், எப்படி ஐடியா என்று மனைவியின் பின் சென்று அவளை வயிற்றோடு கட்டி பிடித்தான்.

சிறிது வெட்கம் கொண்டவள் அவனிடம் அதை மறைத்து சரி மச, மசன்னு நிக்காம போய்ட்டு வந்துருங்க சீக்கிரமா, சாப்டாம என்னால ரொம்ப நேரம் எல்லாம் இருக்க முடியாது என்றாள்.

அவனும் இல்லடி பட்டு இப்போ வந்துருவேன் என்று அவனுக்கு தெரிந்த நண்பர்கள் நாலைந்து போருக்கு தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்து கூழாங் கற்கள் எங்க கிடைக்கும் டா என்று விசாரிக்க…

ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடம் கூறினார்கள். ஆனால் குமாருக்கு இடம் சரியாகா நினைவு இல்லை ஆனால் எங்கோ ஓரிடத்தில் ஓடையில் கும்பலாகா பார்த்த நினைவு. சரி என்று அவனது தம்பி ஒருவனை அழைத்துக் கொண்டு அவனது பைக்கை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

செல்லும் பாதையில் அவனது ஊரில் இருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் அந்த ஊர் பெயர் ‘குருந்தன்மேடு’ என்ற ஊர் நண்பர்களோடு அடிக்கடி அங்கு செல்வது வழக்கம்.

பேக்கரி, மெடிக்கல், மலரகம் என அத்தியாவசிய தேவையான பொருட்கள் வாங்க அங்கு தான் செல்ல வேண்டும்.

அங்கு ஆற்று பாலம் ஒன்றை கடந்து நூறு மீட்டரில் வலது புறம் கட்டிட வேலைகளுக்கு தேவையான உபகரணங்கள் வாடகைக்கு கொடுக்கப் படும் கடை ஒன்று பரிட்சியமானது குமாருக்கு, கடையை கடந்து செல்ல அவரை பார்த்து லேசானா புன்னகை இருவரும் ஆண்டுகள் கடந்தாலும் பேசாவிட்டாலும் பல நாட்களுக்கு பின்பான சந்திப்பு புன்னகை மூலமே மீட்டெடுக்கப் படுகிறது.

கட்டிட வேலைகளுக்கு உபகரணங்கள் வாடகைக்கு கொடுக்கும் கடைக்கு எதிர் புறம் ஒரு “இசக்கியம்மன் கோவில்” கடந்து செல்லும் ஹிந்துக்குக்கள் அனைவரும் மனதிலோ அல்லது சில செய்கைகளிலோ, இல்லையென்றால் சிலர் முனு, முனுப்பு மூலமோ அவரவர் பக்தியை வெளிக்காட்டுவது வாடிக்கை.

அப்படியே இரண்டு அடி முன் சென்றால் ஓட்டுநர் பயிற்சி நிலையம் வலது புறம் கோவிலுக்கு எதிர் புறம். பணிப் பெண் அழகானவள்.

கோவிலில் என்னவோ ஹிந்துக்கள் மாத்திரம் திரும்பி பார்த்து வணங்க, ஓட்டுநர் பயிற்சி நிலையத்தை திரும்பி பார்க்காதவர்கள் யாரும் இல்லை. புதிதாக வருவோர் கூட ஒரு நொடி அவள் அழகில் பார்வையை அவள் மேல் பதித்து அவள் அங்கங்களை பார்த்து தான் செல்வார்கள் பார்ப்போர் கண்களை கட்டிப் போடும் பேரழகி அவள்.

திருமணமானவர்கள், ஆகாதவர்கள் என யாரும் விதிவிலக்கல்ல. சுற்று வட்டாரங்களில் பல பயிற்சி நிலையங்கள் இருந்தும் அனைவரும் அங்கு தான் தங்களது ஓட்டுநர் உரிமத்தை பெற விண்ணப்பிக்கிறார்கள்.

ஒரு முறை வருபவன் அவனது நண்பன், நண்பனோட நண்பன் என அனைவரையும் அழைத்து வருவான்.

அந்த நிறுவனத்திற்கு சொந்த காரர் கடந்து ஓர் ஆண்டில் அபாரா வளர்ச்சி, எப்போது அந்த வழி சென்றாலும் கடையில் இரண்டு மூன்று பேர் விண்ணப்பங்களோடு நிற்பதை காண முடியும்.

அந்த பெண்ணிற்கு ஊதியம் என்னவோ மாதம் எட்டாயிரம் தான். ஆனால் ஒரு மாதம் குறைந்தபட்சம் லட்சம் மேல் வருமானம் ஈட்டும் முதலாளி.

அதிக ஊதியத்திற்கு வேறு கடைகளுக்கு அந்த பெண்ணை அழைத்தும் அவள் செல்ல வில்லை.

அப்படியே நான்கு எட்டு முன்வைத்தால் பைக் சர்வீஸ் கடை, அதனை ஒட்டி 55 வயது தாத்தா ஒருவர் பழக்கடை வைத்துள்ளார்.

அது அடிக்கடி நண்பர்களோடு குமார் வந்து சர்பத் குடிக்கும் கடை தான். போதை தலைக்கேறிய நாட்களில் மறுநாள் காலையிலேயே அங்கு வந்து நன்றாக குளிர்ந்த நீரில் நான்கு சர்பத் போடுங்க தாத்தா ஸ்ட்ராங்கா போடுங்க அடிச்ச மப்பு தெளியனும் என்று அவரையும் விடைப்பது வழக்கம்.

அன்று வழக்கம் போல அவரது கடைக்கு எதிரே பைக்கை நிறுத்து விட்டு அவனது தம்பியிடம் சர்பத் குடிக்குரிய என்று கேட்க அவனும் சரி என்றான்.

தாத்தா ஜில்குன்னு ரெண்டு சர்பத் போடுங்க என்று கடைக்கு முன்புறம் வந்து நின்றான் குமார், அவனது வலது புறம் அவனுடைய தம்பி நின்றான். 

குமாருக்கு முன் புறம் இடது பக்கம் பாக்கு குடுவையும், சுண்ணாம்பு குடுவையும் வைக்கப் பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அவனுக்கு முன்பாகா ஒரு செவ்வக வடிவ பிளாஸ்டிக் டிரை வைக்கப்பட்டு அதில் தண்ணீர் ஊற்றி வைக்கப் பட்டிருந்தது.

அந்த கடைக் கார தாத்தா கை கழுவுவது மற்றும் சர்பத் கப்புகளை கழுவுவது அனைத்தும் அந்த நீரில் தான், அந்த செவ்வக வடிவ டிரையில் குமாரின் பக்கம் எதுவும் இல்லை. 

கடைகார தாத்தா அருகில் இரண்டு சர்பத் பாட்டில்கள் இரண்டு சர்பத் கப்புகள், எலுமிச்சை பழம் பிழியும் கட்டை, ஒரு சில்வர் ஸ்பூன் அந்த தண்ணீருள் இருந்தன. தாத்தா சட சட வென இரண்டு கப்புகளை சிறிது அலசி நிமிர்த்து வைத்து ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டுகளாக வெட்டி அதில் ஒன்றை ஒரு கப்பிலும், மற்றொரு பாதியை இன்னுமொரு கப்பிலும் பிழிந்து சாரை ஊற்றினார்.

தொடர்ந்து டிரையில் வைத்திருந்த சர்பத் பாட்டில்களில் ஒன்று குறைவாக இருந்தது அதனை எடுத்து திறந்து இரண்டு டம்ளர்களிலும் 30 ஊற்றினார் அதன் பின் பிரிசரில் வைத்திருந்த ஐஸ் தண்ணீர் எடுத்து ஊற்ற துவங்கினார்.

குமாருக்கு அப்போது தான் பர்சை மறந்து வீட்டில் வைத்து விட்ட நினைவு வந்தது. அடிக்கடி வரும் கடை என்றபோதும் ஒரு வருட இடைவெளிக்கு பின் அங்கு வந்திருந்தான்.

தாத்தாவிடம்…குமார் கேட்டான். தாத்தா “GPay” இருக்கிறதா பர்சை மறந்து விட்டேன் என்றான் அவர் இல்லை என்றார்… சற்று தடுமாறியவனாய் 

தாத்தா சாயங்காலம் வரும் போது கொண்டு வரவா என்றான் குமார். அவரோ கடன் கேட்காதேமேலும் என்றார். சரி தாத்தா என்று முழுவதும் ஐஸ்நிரப்பி வைத்திருந்த சர்பத் கப்பை எடுக்க எத்தனித்தான்.

தாத்தா அவனை பார்த்து காசு இருக்கா என்று சற்று அழுத்தாகா கேட்டார்! அவன் இல்லை என்றான் கீழே ஊத்திரவா என்றார்?

குமார் அதிரிச்சியில் பதிலளிக்காது உறைந்தான். அவர் சற்றும் யோசிக்காதவனாய் ஊற்றி வைத்திருந்த சர்பத்தை குமாரின் முன்பு இருந்த செவ்வக பிளாஸ்டிக் டிரையில் வேகமாக ஊற்ற அதிலுருந்து அதிர்வில் பதறி துடித்த தண்ணீர் குமாரின் முகத்தில் தெறித்தது.

அவன் அசையும் முன்பு அடுத்த கப்பையும் ஊற்றினார் குமார் முகமும் சட்டையும் நனைந்தது. அவனது தம்பி மௌனம் காத்தான். 

கடையில் சுற்றியிருந்தவர்கள் குமாரை வேடிக்கை பார்க்க கிறங்கடித்த சிறு போதையும் சர்பத் குடுக்காமலே தெளிந்தது.

அவன் பதிலுக்கு கோபம் கொள்ளவில்லை ஏனோ! அவர் வயதானவர் என்றாயிருக்கலாம்! இல்லை நமக்கு ஏன் வம்பு என்று எண்ணியிருக்கலாம். பல அவமானங்களில் இதும் ஒன்றாக கூட இருக்கலாம். அவன் பைக்கில் ஏறி தம்பியை ஏற சொல்லி இருவரும் கூழாங் கல் எடுக்க விரைந்தனர்.

குமாருக்கு கோபம் இல்லையென்றாலும் வருத்தம் அதிகம். அவர் நன்கு பரிட்சயமானவர் ஆனால் இன்று ஏன் இப்படி நடந்து கொண்டார். பணம் இல்லாமல் இல்லை இருந்தும் நாற்பது ரூபாய்க்காக இப்படி நடந்து கொள்வார்களா என்று பல எண்ணங்கள் அவனுள் தோன்ற, அவனதும் தம்பி அண்ணா ஏன் அந்த கடைக்காரர்அப்படி பண்ணிட்டாரு நீங்களும் ஏதும் சொல்லவில்லை என்று கேட்க பதில் இல்லாதவனாய் அமைதியாக பைக்கை வேகம் குறைவாக செலுத்திக் கொண்டிருந்தான். 

அன்றிலிருந்து குமார் இன்று வரை சர்பத் குடிப்பதில்லை “சர்பத் ஒரு அவமான பானம்”



Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *