வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல கேப் புக் பண்ணினேன் அன்று நண்பி கார் கொண்டு வர்க்கத்துனால. கேப் டிரைவர் ஏதோ படம் போட்டு பார்த்துக் கொண்டு வந்திருந்தார். நாங்கள் உள்நுழையவும் பாஸ் செய்து விட்டு இருந்தார். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் பயணம் அவர் அந்த படத்தை மறுபடியும் பிளே செய்வார் என்று காத்திருந்தேன் ஏனென்றால் நயன் மற்றும் ஜெய் அந்த சீனில் நின்று கொண்டு இருந்தனர் படம் பெயர் எனக்கு தெரியவில்லை.
ஆனால் ராஜா ராணி இல்லையென்று விளங்கியது பொறுமையை இழந்த எனது நண்பன் அண்ணா படத்த ஓட்டி விடுங்க என்றான் அவர் லேசான புன்னகையுடன் படத்தை பிளே செய்தார். நயனுக்கு திருமணம் ஜெய் நயனின் நண்பன் நயன் விரும்பிய செப் ஆக அவளை வலுகட்டாயமாக சென்னை அனுப்புகிறேன் என்கிறார். ஆனால் அப்பா சம்மதம் வேண்டுமென்றார் நயன். இதற்க்கு ஊடே பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஐயர் கூற அவளின் பாட்டி மேல வருகிறார்.
அப்போது ஜெய்யும், நயனும் நிற்பதை பார்த்து எந்த வித அதிர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். நயனின் நடிப்பு கொஞ்சம் சிறுபிள்ளை கெஞ்சல் போல தெரியவில்லை அந்த காட்சிக்கு நயனின் நடிப்பு ரியாலிட்டியாக இல்லாமல் இருந்தது. அதுமட்டுமல்லாமல் பாட்டி நின்ற நிலையில் எந்த ரியாக்சனும் இல்லாமல் நிற்கும் போதே பாட்டி நயனை எப்படியும் நீ சாதித்து வா என்று சொல்லி அனுப்பி விடும் என்பது புலப்பட்டது.
அடுத்து வழக்கம் போல வீரமங்கை பெண்ணடிமை வசங்கள் தான். ஆனால் எதார்த்த வாழ்வில் பெண்கள் இன்னமும் வீட்டிற்கு செல்லப் பிள்ளைகள் என்றாலும் அப்பா அம்மா மானம் மரியாதை என்று தான் வாழ்கை யை நகர்த்த வேண்டியதாய் உள்ளது.
0 Comments
நன்றி