காமம் வயதின் கோளாறாக இருந்து விட்டு போகட்டும், காதலும் அப்படியா ?

 காமம் வயதின் கோளாறாக இருந்து விட்டு போகட்டும், காதலும் அப்படியா ?

ஆம், காதல் காமத்தின் முகமூடி. ஆரம்பத்தில் அது முகமூடி என்று அறியதெரியாது. சில ஊடலுக்குப் பின்னான விலகல்கள், வார்த்தைகள் என ஏற்படும் மாற்றம் தான் அதன் திறவு கோல். அதையும் கடந்து பயணிக்கத் தொடங்கியப் பின் தான் காதல் முகமூடியாக அல்லாமல் உண்மை முகமாக பிரகாசிக்கும். சிலருக்கு முகமூடியாகவே வாழ்கை முடிந்து விடும்.


இதனை யார், யார் புரிந்து கொள்வார்கள் என்பது அவரவர் புரிதல்களைப் பொறுத்தது. வேறுபாடுகள் தான் மனித மனதின் பரிணாமம் என்பதினால் இதில் அனைவருக்கு ஒத்துப் போகும் கருத்துக்கள் என்று எதனையும் கூறிவிட முடியாதல்லவா! 

சகட்டு மேனிக்கு வாழும் இனமாக மனித இனம் தனக்குள் எந்த கட்டுபாடுகளும் இன்று வாழத் துவங்கியதே காதல் காமம் என்ற மொத்த குளறுபடிகளுக்கும் காரணம் என்றிடலாம். ஆண் பெண் காதல் மாறி தற்போது எத்தனையோ காதலர்கள் இனத்திற்குள்ளேயே முளைத்து உள்ளனர். 

இதனை எண்ணிப் பார்க்கையில் மனிதர்களுக்கு எல்லையில்லை பரிணாம வளர்ச்சி என்பது முற்றிலும் உண்மை தான் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது. 

இயற்கைக்கு அதன் பரிணாமத்தை நிறுத்த முயலவில்லை. எத்தனையோ காலங்கள் கடந்து வந்த பூமி சுற்றும் காரணம் பூமியும் அறியாமல் இல்லை.

காதல் அப்படியே காமம் காமத்தின் முற்போக்கு தனத்திற்குள் ஒளிந்துக் கொள்கிறது. விவாகரத்து என்ற எல்லையை உறவுகள் தொட இது முதன் காரணம். தாம்பத்ய வாழ்வில் திருப்தி இல்லாமல் விவாகரத்து செய்துக் கொள்வார்கள் தான் அதிகம் இன்றைய காலங்களில்.

காதல் என்ற தனிப்பட்ட காமம் இல்லா உணர்வை வெளிக் கொணர்வோம். எல்லையில்லா ஆனந்தம் கொள்வோம். 

Post a Comment

0 Comments