வழக்கு என்ற மலையாள படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 3.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த படம் பலரால் விமர்சையாக பாராட்டப் பட்டது.
ஒரு சினிமா தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்வியலை பாதிக்கும் படியான முறையில் அமையும் போது அது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும்.
ஆனால் பல லட்சம் செலவு செய்து வெளி வந்து ஓடாமல் செல்லும் படங்களுக்கு மத்தியில். நல்ல கதைத் தேர்வுடன் குறைந்த செலவில் எடுக்கப் படும் படங்கள் அதிகம் வெற்றிப் பெறுவது மழையால சினிமா தான்.
இந்த வழக்கு என்ற படத்தை டிவின் தாமஸ் புரொடியூஸ் செய்துள்ளார். மற்றும் அவரே நடைத்துள்ளார். இந்த படம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் தான் அதில் தேவையில்லாத கட்சிகள் என்று படத்தின் நீளத்தை அதிகம் செய்ய பல நீளமான காட்சிகள் பதிவு செய்துள்ளனர்.
இது ஒரு இயல்பான சினிமாவாக எடுத்திருந்தால் அதனை முப்பது நிமிட குறும்படமாக முடித்திருக்க வேண்டியது. முதல் இருபது நிமிடங்கள் கிராபிக்ஸ் பார்க்க அருமையாக இருந்தாலும் காரணமில்லாமல் நேரக்தைக் கடத்திக் கொண்டிருந்தது.
தனியாக உடைக்கப் பட்ட பாறைகளை காட்டும் போதும் அந்த கேமரா வியூகம் செல்லும் வேகத்திற்கு ஏற்ற பின்னணி இசை என்றாலும் அந்த இடத்தில் பிணம் அல்லது யாரேனும் தூக்கிட்டு இருக்கலாம் என்ற எண்ணமே முதலில் தோன்றியது.
ஆனால் ஆரம்பித்த நோக்கம் வெறும் அலைபேசி உரையாடல் அடுத்த இருபது நிமிடங்களை கடத்தும் போது கொஞ்சம் போர் அடிக்க துவங்கிவிட்டது.
இந்த படம் உண்மையில் அனைவருக்குமானது இல்லை ஒரு செட் ஆப் ஆடியன்ஸுக்கு மட்டுமே பிடிக்கும். கேமரா ஸ்லோ ஸ்டடி என்று காட்சிகள் மூலம் கருத்துக்களை சொல்ல முயன்ற விதம் சிறப்பு ஆனால் அது அனைவருக்கும் புரியாது. காலம் கடத்தல் போலவே இருக்கும்.
ஒரு வித்தியாசமான த்ரில்லிங் டிராமா பார்க்கணும்னா இந்த படத்தை பார்க்கலாம்.
கதையின் நகர்வு அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை நிச்சயம் உருவாங்கும். ஆனால் மிகவும் பொறுமை வேண்டும் இந்த படத்தை பார்க்க.
0 Comments
நன்றி