கடலும் நானும்
- Get link
- X
- Other Apps
ஆழமான கடல் பகுதி செல்ல நெடு நாள் ஆசை, கம்பீரமாக மூச்சடக்கி பெரும் தவம் ஏற்றிட வேண்டும். சுப்பு காண்பதெல்லாம் கனவு மாத்திரமே அவனால் எதனையும் எளிதினில் செயல் வடிவம் கொடுத்து விட முடிவதில்லை. இத்தகைய கனவுகள் போல அவன் பல அடுக்குகள் அடுக்கிக் கொண்டிருப்பான். ஏதாவது ஒன்றில் அவன் லயிக்க வேண்டும் என்பது தான் அவனது ஆசையும்.
அப்படியே அவன் கரப்பனையில் கூட மூழ்கி முத்தெடுக்கும் வரை பொறுமையில்லாதவன். எண்ணியவை எண்ணிய மாத்திரம் நடக்க வேண்டுமென்ற எண்ணம் தான். காலம் காக்கும் பொறுமை மனித மனம் அணுகுவதில்லை.
அப்படி காலத்தின் பொறுமையோடு பயணிக்க முயன்றால் மனித ஜல மனம் அங்கும் இங்கும் ஆடாது காத்திருக்கப் பழகிக் கொள்ளும்.
சுப்புவின் கனவு எல்லாம் ஏதோ வந்து போவதாக இல்லை அவனின் உள்ளுணர்வு திரும்ப திரும்ப கனவுகளின் காட்சிகளை ஓட்டிக் கொண்டே இருக்கும். யாரிடமும் விளக்கம் பெற அவனுக்கு விருப்பம் இல்லை.
சுப்புவிற்கு இத்தனை நாட்கள் வந்த கனவுகள் எப்படியோ நினைவில் இருந்து அகன்று போயிருந்தாலும், அவனால் மறக்க முடியாமல் இன்றளவும் ஓடிக் கொண்டு இருந்தது கடலின் ஆழப் பகுதியில் அவன் அமர்ந்திருப்பது போன்ற கனவு தான்.
கனவுகள் காயப்படுத்துவது இல்லை ஆனால் கலங்கப் படுத்துகின்றன. கனவு ஒரு ஆசையை அடிமனதில் தூண்டி விட்டு செல்கிறது இல்லையென்றால் அது ஒரு பயத்தை உள் விதைத்து விடுகிறது.
அப்படி அவனையறியாமல் அவனுக்கு விதைக்கப் பட்ட அந்த கனவு விதை அவனை கடலை நோக்கி இழுத்துச் சென்றது. கடல் போராட்டத்தின் அடையாளம் அலைகளே சாட்சி.
காலத்திற்கு ஏற்ப தன்னை சுருக்கி விரித்து பரிணாமங்கள் பல லட்சம் யுகங்களை உள்ளடக்கியது கடல். அவன் நின்று கொண்டு ஆழ்ந்த யோசனையில் உள்ளான் இங்கிருந்து எப்படி துவங்குவது? என்ற கேள்விக்கு அவனிடம் பதிலில்லை. மூச்சடக்கி முப்பது நிமிடங்கள் நிற்க முடியாதவன் நான் எப்படி அலைகளுக்கு நடுவே செல்வது! நான் உள்ளே போய் அமர்ந்தாலும் அலையின் வேகம் மீண்டும் கரைக்கு கொண்டு வந்து விடும். அதுமட்டுமல்ல கடலின் எல்லையற்ற பரப்பையும் அலையையும் காணும் போது பயம் ஏற்படுகிறது. மூச்சு வாங்குகிறது. நான் ஏன் இதனை செய்ய வேண்டும்?
கடலில் உள் மூழ்கியிருந்து தவம் செய்வதனால் என்ன நடக்கப் போகிறது? அப்படி செய்வதாயிருந்தால் கரையிலேயே செய்திருக்கலாமே! செய்யலாமே ஏன் கடல் என்ற கேள்வி அவனுக்கு எழுந்து கொண்டே இருந்தது.
அவன் எண்ணங்களை அதன் போக்கிலேயே பயணிக்க விட்டு கடற்கரை மணலிலேயே அமர்ந்து இருந்தான். இரண்டு கால்களையும் மடக்கி கைகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து முதுகு எலும்பு நேராக இருக்கும் படி அமர்ந்து கொண்டான். இது யாரும் அவனுக்கு சொல்லிக் கொடுக்கவில்லை, இதற்க்கு முன் அவன் செய்ததும் இல்லை தியானம் என்றால் என்னவென்றே தெரியாத அவனுக்கு கேள்வி ஒன்று தான் ஏன் இப்படி கனவு வந்தது அதனை எந்த தீர்க்கத்துடன் நான் செய்ய முயன்று இங்கு வரை வந்துள்ளேன் என்பது மாத்திரம் தான்.
காலம் எடுக்கும் சில முடிவுகளுக்கு யாரும் தடையாக முடியாது என்பது தான் உண்மை.
ஏதோ எண்ணியவனாய் கடல்கரை மணலில் இருந்து எழுந்து கடலை நோக்கி நடந்தான், அலைகள் வேகமாக வந்து அவன் கால்களில் மோதி கடந்து சென்றன. சூரியனின் பிரகாசம் கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கச் செய்யும் அளவு கார்மேகங்கள் சூழ்ந்தன. அவன் அவனை மறந்தவனாக கடலின் உள் நடந்தவன் இடுப்பளவு தண்ணீர் கடந்து செல்கிறான். அலை அவனை அங்கும் இங்கும் அலைக்கிறது, தடுமாறி தடுமாறி உள் நோக்கி நகர்கிறான். அவள் இடுப்பளவு நீரை கடந்து செல்லவும் ஆக்ரோஷமானா அலை அவனை மூழ்கடித்தது. அவன் கால்களை யாரோ பற்றி பிடித்து வைத்திருக்க வேண்டும் ஆக்ரோசித்த அலையில் அவன் அசையாதவனாய் அலை கடந்த பின்னும் அவனை பார்க்க நேர்கிறது.
காகங்கள் வானத்தில் கூட்டம், கூட்டமாகா வட்டமடிக்க துவங்கின. அவனது சித்தம் செயல்படவில்லை. அவன் ஒரு வித மாய நிலையில் நிற்கிறான். அலைகள் உயர அவன் கழுத்தளவு நீரில் அவனாகவே மூழ்கி அமர்கிறான். கடலின் ஆழமில்லை அது கடல் கரை நீரில் மூழ்கி என்ன செய்ய முடியும்?
அலைகள் அவனை அங்கும் இங்கும் அலசுகிறது. அவன் திடமாகா இருந்தாலும் அலசும் நீர் அவனை அப்படியே மேலேற்றப் பார்க்கிறது அப்போது அங்கு வந்த சிறு மீன் குஞ்சு மின்மினி போல ஒளி வீசி அவனது முதுகில் ஒட்டிக் கொண்டது. அவன் கரும் பாறை கனமாக மாறியிருக்கக் கூடும். மிதந்து கொண்டிருந்தவன் அப்படியே தரையில் இழுக்கப் பட்டான்.
அவன் சம்பளம் இட்டு இருந்தவன் இப்போது அவனாகவே கால்களை மடக்கி சுகாசனம் நிலையில் அமர்கிறான். என்ன நடக்கிறது என்ற ஆராய்ச்சி அவனில் இப்பொது இல்லை. இதற்க்கு அவன் பல ஜென்மங்கள் பயற்சி செய்திருக்கலாம். யாரறிவார்.
நான் தேகமற்றவன் “சுப்பு கூறுகிறான்” நான் தேசமற்றவன். இந்த வார்த்தைகளுக்கு கடல் செவிசாய்ப்பது போல கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடல் அதிர்வுறுகிறது, அதில் ஒரு ஆனந்தம் தெரிகிறது. சுப்பு அவனுள் ஆழ்ந்து சென்றிருக்க வேண்டும் அவன் ஒருவேளை ஏதேனும் ரிஷி மரபை சேர்ந்தவனாக கூட இருக்கலாம். கனவுக்கு மெய் சேர்க்க கிளப்பி வந்தவனுக்கு ஒரு குடும்பம் இருந்தது என்பதை அவன் மறந்திருக்க கூடும். ஆழ்கடலுக்கு அவன் செல்வான் இல்லை. கரைநீரிலே கரும்பாறை போல அமர்ந்து விட்டானே.
அலைகளின் வேகம் மெதுவாக குறைய துவங்கியது. காற்று அதன் திசையை மாற்றிக் கொண்டது. மழை தரையை நனைக்கத் துவங்கியது. சுப்பு உடல் அலைகளுக்கு மேல மிதக்க துவங்கியது. நடக்கும் செயல்களுக்கான உள்ளர்த்தம் விளங்கவில்லை. மிதந்த சுப்பு அலைகளால் கரையை நோக்கி கடத்தப் பட்டான்.
கல்லானவன் கரைந்தது போல சுருண்டு கிடந்தான் கரையில். ஒருபொழுது கழிந்துவிட்டிருந்தது. மெதுவாக கண்திறந்தான். அவன் கண்கள் ஒளி வீசின.
அவன் மகா அவதாரம் எடுத்துள்ளான். கலியுகம் அவன் கரம் வேண்டிநிற்கிறது.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment
நன்றி