கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

மனதின் சொல்லாத முகவரி


தேன் இனிக்கும் என்பது உண்மை தானே ! 

சில வேளைகளில் எனக்கு இது போன்ற சந்தேகங்கள் வருவதுண்டு. நான் ஓர் தேன் சொட்டு ருசி பார்த்து பரிசோதித்து பின் நம்புவது இல்லை. ஏனென்றால் இதுவரை நான் தேனை பார்த்தது இல்லை. ஆம் இத்தனை அப்பட்டமாக பொய் சொல்வது எனக்கு புதிது இல்லை. 

நான் பொய் கூறுவதில் மகத்தானவன். கருப்பட்டி காபி போட்டு கேட்டேன். அம்மா சுக்கு போடவா என்று கேட்டாள் ? சுக்கு போட்டால் அது சுக்கு காபியா இல்லை கடுப்பட்டி காபியா என்று கேட்டேன் ?

அது ஒரு நல்ல கருப்பட்டி சுக்கு காப்பி என்று அம்மா சொன்னாள். நான் அப்படியென்றால் அதில் கொஞ்சம் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன்! அம்மா, சரி அப்போ உனக்கு சுக்கு, மிளகு, தண்ணி, கருபட்டி காபி வேணும்னு சொல், என்று சிரித்துக் கொண்டே சமையலறைக்கு சென்றாள்.

நான் கேட்ட கருபட்டி காபி இப்போது எப்படி பரிணமித்துள்ளது ! ஆனால் நல்ல ஆரோக்கியமானது தான். நான் என்ன குடிக்க வேண்டும் என்பதை இங்கு யார் முடிவு செய்திருக்கிறார்கள். அம்மாவா? இல்லை நானா? 

இயற்கையாக கூட இருக்கலாம் இல்லை, இல்லை இது தான் விதியோ? யாருக்கு தெரியும் சாதாரண கருப்பட்டி காபிக்கு இத்தனை கலகம் செய்யும் என்று! இயற்கை பொய் கூறுவது இல்லை அது ஒரு காந்த விசையை மையமாக வைத்து இயங்குகிறது. 

அதற்கு மனிதர்களின் மனங்களில் எழும் எண்ண அலைகளின் வீரியமும் காரணம். ஆம் நேற்று எனது மனைவி துணி துவைத்து கொண்டிருந்தாள் கடுமையான வெயில் துணி அதிகமாக இருந்தது அவள் என்னிடம் வாஷிங் மிஷன் வாங்கி கேட்டு சண்டை போட்டுக் கொண்டிருந்தாள் 

நான் அனைத்து கணவர்களையும் போல அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தேன் அந்த ‘எப் எம் ஒலியை’ அவள் பேசிக் கொண்டே இருந்தாள் நான் கூறினேன் இத்தனையும் ஒரே நாளில் துவைக்க வேண்டாம் ஆபிஸ்க்கு போடுற துணியை மட்டும் துவைத்து போடு மற்றவற்றை நாளை அலசி போடு என்றேன். இடி இடித்தது போல கனத்த அவள் குரல் “..ம்.. ஆபீசுக்கும் இல்ல கூபீசுக்கும் இல்ல மழை பெய்து அவ்வளவும் நனைய தான் போகுதுன்னு சொன்ன” நான் இவ கிட்ட ஏன் வம்புக்கு வீட்டுக்குள்ள போய்ட்டேன்.

நான் சொன்னது எதையும் காதுல வாங்காம நின்னு அவ்வளவு துணியையும் துவைத்து முடிச்சிட்டு காய போடா மாடிக்கு போன நான் “குற்றால குரங்கு” போல வேடிக்கை பார்த்துட்டு இருந்தேன். அவ மாடிக்கு போகவும் ஓ…….ன்னு வந்துச்சி மழை யாத்தி நாலு மணி நேரத்துக்கு மேல மழை 

எனக்கு ஆச்சர்யமும், இன்னொரு புறம் சிரிப்பும் அடங்கல… 

அவ்வளவு வேகம் அவனோட மனசு அப்போ எந்த வெறில இருந்துச்சோ தெரியல…! இப்படி மனைதர்களின் உணர்வுகளை இயற்கை வேகமாக உள்வாங்கிக் கொள்கிறது… கிராமத்தான் அவனுக்கு நடக்கும் நல்லவற்றிற்கு யாவும் இறைவன் காரணம் என்பான். ஊர் தெய்வம் அல்லது குல தெய்வத்தை வணங்குவான்.

படித்தவன் நான்கு பேர் மதிக்கும் மனநிலையில் உள்ளவன் எல்லாம் பிரபஞ்சத்தின் செயல் பிரபஞ்சத்திற்கு நன்றி என்று கூறுவான். இப்படி அனைவரது மனதின் எண்ணங்கள் அவை நல்லவை கெட்டவை என்று பிரிக்க இயற்கைக்கு தெரியாது நீ கேட்டதை பத்து மடங்காக கொடுத்து விடும். எதை கேட்க வேண்டும் அதை எப்படி கேட்க வேண்டும் என்பதை புத்தியால் நாம் தான் பிரிக்க வேண்டும். 

நான் மகத்தானவன் பொய் கூறுவதில் என்று கூறியதும் அதற்காக தான். இயற்கைக்கு பொய் பித்தலாட்டம் எல்லாம் தெரியாது ஆகையால் ஒழுக்கமாக வாழ பழகிக் கொண்டாலே எல்லா பிரச்சனைகளில் இருந்தும் வெளி வந்து விடலாம். 

Comments

Popular posts from this blog

காதலன் காமனின் புதல்வன்

காரணம் உண்டு

வயதின் பராமரிப்பு செலவு

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *