சீமான் ஒரு மேடை பேச்சாளர்


சீமான் அவர்கள் அரசியல் தலைவரா என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்று தான் கூறுவேன். அதே நேரம் இன்னுமொன்றும் கூறலாம் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதை யும். நான் மட்டுமல்ல அனைவரை இதனை ஒப்புக் கொள்கிறார்கள்.

ஆனால் பட்டிமன்ற பேச்சாளர்களில் தரப்புகள் பிரியும் போது அதில் இவரை நகைச்சுவை பேச்சாளர் என்ற தரப்பில் மட்டுமே சேர்க்க முடியும்.

ஏனென்றால் வரலாறுகளை அவருக்கு சாதகமாக நகைச் சுவை மாறாமல் பேசுகிறார். சில வருடங்களுக்கு முன்பு இணையம் அவ்வளவு வளர்ச்சி இல்லை மேடை பேச்சுக்களை மக்கள் பலர் விரும்புவார்கள் அப்போது தன்னுடைய பேச்சு திறமையை மட்டுமே கொண்டு ஒரு கட்சியை இவ்வளவு தூரம் வளர்க்க அவர் பேச்சுக்கு மயங்கி முதலீடு செய்தவர்கள் அதிகம்.

ஆனால் இன்று இணையம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரம் இந்த நிலையில் ஒரு பேச்சாளராக தன்னை சரியாக அடையாளம் படுத்திக் கொள்ள தவறுகிறார் 

எதை கூகுள் செய்தாலும் தரவுகள் கிடைக்கும் இந்த காலத்தில் இத்தனை குழப்பமான பேச்சுகள் அவரை ஒரு கோமாளியாக எதிர் தரப்பு சித்தரிக்க செய்கிறது.

அது புறம் இருக்கட்டும் கட்சிகளுக்குள் மாறி மாறி குறை சொல்வது தானே வழக்கம்! ஆனால் பலமான ஒருவரை எதிர்த்தால் தான் நம்மால் மீண்டும் நிலைக்க முடியும் மக்கள் மனதில் என்று நினைத்து விட்டாரோ என்னமோ

தெரியவில்லை, சரி ஒரு அளவு வேண்டாமா ப்ரோ “உன் வாய் உன் உருட்டு” என்று இணைய வாசிகள் கலாய்க்கும் அளவுக்கு இருக்கிறார். 

இது இன்று மட்டும் அல்ல இது போல பற்பல மேடைகளில் வாய்க்கு வந்ததை உளரி விட்டு சென்றிருப்பார். அதை பற்றி அவர் கண்டு கொள்வதும் இல்லை 

ஏனென்றால் அவர் மக்கள் மனநிலையை நன்கு புரிந்து வைத்துள்ளார். நான்கு நாட்கள் பேசுவார்கள் அதன் பின் வேறு ஒரு டாப்பிக் வரும் இதனை மறந்து விடுவார்கள் என்ற எண்ணம் தான் அது.

என்ன இருந்தாலும் சீமானுக்கு இன்னமும் பொறுப்பு இல்லை அவர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டெல்லாம் கட்சி துவங்கவில்லை 

அவருடைய பிழைப்பு க்கு கட்சி துவங்கியுள்ளார், என்ன பெரிய பொல்லாத கொள்கைகளை கடை பிடித்து கொண்டிருக்கிறார்கள் என்பது சில நேரங்களில் அவர்களுக்கே தெரியாது. 

Post a Comment

0 Comments