மனமே மாமருந்து

காலம்  வேகமாக செல்கின்றது !!
கடமைகள் நிறைய உள்ளது !!
காலத்திற்கு ஏற்றார் போல்,
வேகமாக பயணிக்க வேண்டியுள்ளது...

எண்ணங்களின் ஓட்டங்களையும் அதன் வேகத்தையும் நான் என்றும் நிறுத்த முற்படுவது இல்லை, நான் மனதிற்கு நல்லது கெட்டது என எதையும் பிரித்து காட்டுவது இல்லை அதன் போக்கிலேயே விட்டு விடுகிறேன், 

நான் எண்ணங்களை காட்ச்சிப்படுத்தி திரைப்படம் போல் கண்டு ரசிக்கிறேன் !!

ஒருவேளை மனதிற்கு நான் இவை தவறானவை அவை சரியானவை என பிரித்து காட்டியிருந்தால் அவைகள் தவறென கூறியவற்றில் மீதே அதிக நாட்டம் காட்டியிருக்கும்,

ஏனென்றால் தவறென நாம் கூரும் எல்லாவற்றிலும் அதாவது எல்லா செயலிலும் வார்த்தைகளிலும் பயத்தையே  முன்னிறுத்திக்கிறோம்.

பயம் என்ற ஒரு குட்டி வார்த்தை மனிதனின் மனத்தையும் அவனது செயலையும் எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது 

எனக்கு அப்போது எட்டு வயது ஊரிலுள்ள நடுநிலை பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன், பயம் என்றால் என்னை பொறுத்த வரை இருளில் பேய் வரும் என்ற பயம், படிக்கவில்லை எனில் வாத்தியார் அடிப்பார் என்ற பயம், சாப்பிடவில்லை எனில் அம்மா அடிக்கும் இல்லையென்றால் பூச்சாண்டி பிடிசிட்டு போயிடுவான், அதுவும் இல்லையா ஒரு கோணி பை கொண்டு புள்ள புடிக்கிறவன் வருவான் அவன் தூக்கிக்கொண்டு  போயிடுவான், இந்த வரிசையில்

நாய், பாம்பு என்றால் இன்னும் அதிக பயம். பள்ளிக்கு  பின்புறம் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டி சில கல்லறைகள் உண்டு அது மட்டும் அல்லாது சில அல்ல பல நேரங்களில் பிணங்கள் எரிக்கவும் செய்வார்கள் இதனால் பள்ளியில் பல முறை விடுமுறை அளித்த நாட்களும் உண்டு அது ஒரு தனி இன்பம் தான் என்றாலும் நாம் நம் கதைக்கு வருவோம்,

இடைவேளை பொழுதுகளில் ஒண்ணுக்கு அடிக்க (சிறுநீர் கழிக்க) மாணவர்கள் அனைவரும் பள்ளியை சுற்றி இருக்கும் வரப்புகளில் வரிசை கோர்த்து நிற்போம் பெரிய மாணவர்கள் அதாவது எங்களை பொறுத்த வரை ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் இருந்து அனைவரும் அந்த கல்லறை இருக்கும் தோப்பில் உள் சென்று அங்கு இருக்கும் வரப்பு மேடுகளிலும் கள்ளி மரங்களிலும் சுற்றி நின்று அல்லது கூட்ட்டமாக நின்றி சிறுநீர் கழிப்பார்கள்,

எனது மனதில் நீண்ட நாள் ஆசை அது அந்த கல்லறை இருக்கும் இடத்தில் நானும் ஒரு நாள் செல்ல வேண்டும் என்று,

அந்த நாளும் வந்தது 

02.01.1998 ஆவது ஆண்டு காலை 11.30 மணிக்கு அந்த ஓசை கணீர் என எனது காதுகளில் ஒலித்தது ரொம்ப யோசிக்க வேண்டாம் இடைவேளையைக்கு அடிக்கும் அந்த மணியோசை தான் அது  

என் காதுகளில் அந்த ஓசை ங்................ என்று  ஒலித்து கொண்டேயிருக்க வாத்தியார் பாடம் நடத்திக் கொண்டு இருக்க எனது நண்பர்களுடன் புத்தகங்களை தூக்கி புத்தகப் பையில் சொருகி விட்டு  ஏய்ய்.......... என்று அனைவரும் கூச்சலிட்டுக் கொண்டு வெளியே ஓடினோம் 

நான் சற்றும் நினைத்திரவில்லை இன்று எனது அந்த ஆசை நிறைவேரும் என்று,

நான் அந்த கல்லறை தோப்பிற்குள் சென்றேன் எனது நண்பர்களும் உள்ளே வந்தார்கள் நான் இன்னும் சத்தமாக கத்தினேன் எனது அண்ணனும் அவனது தோழர்களும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே லேய் நீங்கலா இங்க வரக்கூடாது போங்கல அங்க என்று கூற 

நான் எதையும் கண்டு கொள்ளவில்லை பதிலுக்கு நான் 

ஏ... நீங்க மட்டும் தான் இங்க வரணும்னு எழுதியா வச்சிருக்குது என்ற என்னுடைய குழைந்தை பருவ திமிர் கலந்த பேச்சுடன் கேட்க அவர்கள் என்னை பற்றி எனது அண்ணனிடம் ஏதோ பேசிக்கொண்டு நின்றனர் 

அந்த சமயம் எனது நண்பன் என்றோ ஒரு நாள் அவனிடம் வெட்டி பந்தாவிற்காக சொன்ன வார்த்தையை நினைவு கூர்தான் அது 

லேய் நீ இந்த குழிக்கரையில மேல ஏருவேன்னு சொன்னால நீ ஒரு ஆம்பலானா இப்போம் ஏறி காட்டுல பாப்போம் என்றால், 

நானும் உடனே எந்த பதில் கருத்தும் கூறாமல் அந்த கல்லறை மீது ஏறி படுத்திட்டேன் அப்புறம் எழுத்து அமர்ந்து தியானம் செய்வது போல் அமர்தேன், அப்படியே அனைவரையும் ஆசிர்வதிப்பதுப் போல் கையசைத்தேன், 

எனது ஆசையும் நிறைவேறியது எனக்கான சனியும் பிடித்தது;

அன்று மாலை வீடு வந்தேன் எனக்கு முன் வீட்டிற்கு வந்த எனது அண்ணன் நடந்ததை வீட்டிலேயே ஊதி விட்டான் அம்மா கையில் காம்போடு என்னை வரவழைத்தாள் 

எனக்கு ஒன்றும் புரியவில்லை ஒவ்வொரு அடியும் விழ விழ தான் அம்மா கேட்க்கிறாள் ராசாவுக்கு அம்புட்டு தயிரியம் வந்துடுச்சா இனி பள்ளி கூடத்துக்கு போக வேணா பாட்டி கூட போய் ஓலை எடுத்திட்டு வா அப்படி இப்படினு அன்று மாலை வெகு விமர்சையாக இருந்தது வரவேற்பு அம்மா என்னை கவனித்து முடித்ததும்,

நான் எனது அண்ணணை வீடடை சுற்றி துரத்தி துரத்தி கவனித்துக் கொண்டேன் 

அனைவருக்கும் இப்போது புரிகிறதா எனது அண்ணன் பள்ளியில் வைத்து ஏன் என்னிடம் எதுவும் கூறவில்லை என்று ஏதாவது கூறியிருந்தால் அங்கேயே இருவரும் கட்டி புரண்டு அடி போட்டிருப்போம் புத்திசாலி பிள்ளை நேக்கா வீட்டுல கோத்து விட்டுட்டான்.  

இரவு அம்மா உணவு ஊட்டி விட்டு என்னிடம் பாசமாக சொன்னார்கள் இப்படி எல்லாம் செய்யக் கூடாது அப்படி பண்ணா பேய் உள்ள இழுத்து வச்சிரும். அப்புறம் யாராலயும் காப்பாத்த முடியாதுனு சொன்னாங்க அம்மா கம்பு வச்சி அடிச்ச இடம் தணத்து இருந்துச்சு அதற்கும் எண்ணெய் போட்டு விட்டார்கள், 

அம்மா சொன்ன மாதிரி அப்புறம் காலைல கூட பேய் வரும்னு எனகுக்குள்ள எழுந்த பயத்த 5 வருடமா யாராலயும் காப்பாத்த முடியல அன்னைல இருந்து நான் தனியா எங்கயும் போறது இல்ல அப்படி போக வேண்டிய கட்டயம் வரும் நேரங்கள்ல நிக்காம ஓடுவேன் 

தெரிஞ்ச்சோ தெரியாமலோ அம்மா என்னோட மனசுல ஒரு பெரும் பயத்த விதைச்சிட்டாங்க 

அப்புறம் எட்டாவது படிக்கும் போது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்  வரிகள் தான் என்னை எனக்கே உணர்த்தின அந்த வகுப்பில் யாருக்கெல்லாம் அந்த பாடல் புரிந்தது என்று எனக்கு தெரியாது ஆனால் எனக்கு தெளிவாக புரிந்தது      

அந்த வரிகள் 

வேப்ப மர உச்சிச்சியில் நின்னு 
பேய் ஒன்னு ஆடுதுன்னு 
விளையாட போகும் போது
சொல்லி வைப்பாங்க உந்தன் 
வீரத்தை கொழுந்திலேயே 
கிள்ளி வைப்பாங்க 

என்ற வரிகள் தான் அது;  

சிந்தையில் சிவம் இருக்க 
தனிமையில் தவம் இருக்கிறேன் 
வெறுமையில் நிலைத்து நிற்கிறேன் !!

பேசும் வார்த்தைகள் மனிதர்களுக்கு விளங்கவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை 

அவன் உன்னையும், இந்த பேச்சையும், உன் கருத்தையும் அவன் வெறுக்கும் வரை பேசிக்கொண்டே இரு ஆரம்பத்தில் நல்லது சொல்லும் போது யாரும் கேட்க முன்வருவதில்லை தான் ஆனால் நல்லவற்றை உன்னை விட்டு யார் விலகினாலும் நீ தொடர்த்து அதைக் கூறு 

ஒரு நாள் நீ கூறிய வார்த்தைகள் அவன் வெறுக்க வெறுக்க பசுமரத்தாணி போல அவன் மனதில் பதிந்து விடும் அது நிச்சயம் அவனுக்கு ஒரு மாற்றத்தைக் கொடுக்கும் 

விஷயம் என்னவென்றால் மனிதனுக்கு  நல்லதொரு அனுபவமே நல்லதொரு பாடத்தைக் கொடுக்கும் அது வரை நாம் நல்லதை கூறிக்கொண்டே இருப்போம் அந்த நாள் வரும் போது புரிந்து கொள்ளட்டும் 

பயம் என்பது மனம் சார்ந்த ஒரு உணர்வு மட்டுமே அதை நீங்கள் தெளிவா புரிந்து கொள்ளுங்கள், கோவம் வரும் போது எப்படி உங்களை நீங்களே கட்டுப்படுத்த பல யுக்திகளை கையாளுகின்றீர்களோ அதை போலவே பயம் வரும் போது அதற்கான காரணத்தை உணர்த்து கொள்ளுங்கள் உங்கள் அருகில் யாரோ நிற்பது போல் உங்கள் மனம் உங்களை பயம்முற செய்கின்றதா ?

நீங்கள் மனதிடம் கூறுங்கள் ஆம் நான் வணங்கும் இறைவன் என்னுள்ளும் புறமும் உள்ளாள் என்று புன்னகையுடன் கூறுங்கள் !!

மரணம் என்றோ ஒரு நாள் நிச்சயம் தான் அதற்காக வாழும் நாள் முழுவதும் பயந்து கொண்டே இருப்பது தினம் தினம் மரண பயம்  எதற்க்காக ?

பயத்தை தூக்கி எறியுங்கள் பயம் என்ற உங்கள் உணர்வு தான் உங்களை கொல்லுமே தவிர பயம் கொள்ள தேவையில்லை;               

நன்றி 

வாழ்வோம் வளமுடன் 

Post a Comment

1 Comments

நன்றி