*_கற்று கொள்_*
கற்று கொள்ள தயாராக இரு காற்றும் கற்று தரும், பறப்பது எப்படி என்று அல்ல.
தென்றல் வீசும் ரகசியத்தை!!
விழிப்போடு இரு எப்பொழுதும் இயற்கையின் பல மர்மங்கள் புலபடும் !!
காத்திரு பல கேள்விகளோடு காலம் பதில் சொல்லும் அதன் உன்னதத்தையும் விசித்திரத்தையும்!!
அமைதியாக இரு ஆர்பரிக்கும் அலையும் அடங்கித்தான் போகும் உன் பேரமைதியில்!!
*_உறவுகள்_*
உறவுகள் போர் வாள் போல நம்மிடம் இருக்கும் வரை மட்டுமே நமக்கு சாதகமா செயல்படும்!!
உணர்வுகள் வெட்டுண்ட காயத்தில் விழுந்த தீ பிழம்பு போல நினைத்தாலே நெஞ்சு பதை பதைக்கும்!!
*_காலம்_*
நோயற்றவன், நோயுற்றவனுக்கு போதனை வளங்குகிறான் இன்று, நாளை? வாழ்கை ஒரு வட்டமல்லவா !!
மருத்துவன் வைத்தியம் பார்கிறான், மருத்துவனை அறிந்தவன் ஆலோசனை வளங்குகிறான்!!
ஆன்மீகமும் அப்படியே நீ இறைவனை உணரும் வரை போதனைகளுக்குள் புதைந்திருப்பாய்!!
*_குணம்_*
குரங்கின் குணம் இது தான் என்று அனைவருக்கும் தெறியும், என்றோ ஒரு முறை பார்பவன் ஆனந்தமடைகின்றான், தினமும் பார்பவன் எரிச்சல் அடைகின்றான். ஆனால் குரங்கு ஒரு போதும் அதன் குணத்தை யாருக்காவும் மாற்றியது இல்லை, அதன் போக்கிலேயே துள்ளி குதித்து திரிகின்றது.
மனிதர்கள் வாழும் இடத்தில் நீர் ஓட்டம் இன்றி ஒரே இடத்தில் தேங்கினால் பூஞ்சைகளுக்கும், தவளைகளுக்கும், கொசுக்களுக்கும் கொண்டாட்டம் தான், ஆனால் மனிதனுக்கு?
ஒவ்வொரு விலங்குகளுக்கும் ஒவ்வொரு குணம், ஆனால் மனித விலங்கிற்க்கு மட்டும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விலங்கின் குணமாம்,
ஒரு மனிதனின் பொறாமையும், வெறுப்பும், அல்லது பழிவாங்கும் உணர்ச்சியும் ஒருவனை என்ன செய்துவிட இயலும்? அதீத மன உளைச்சலோ அல்லது ஏதோ உடல் உபாதையா அதுவும் இன்றி மரணத்தை தர இயலுமோ?அவ்வளவு தானே!!
வாழ்கை பற்றி ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக தான் இருக்கும், அதனை இரசிப்பவர் சிலர், வெறுப்பவர் பலர், அதன் சுவாரஸ்யத்தில் பண்படுபவர் வெகு சிலர், அந்த சிலர் அனைத்தையுமே ஆழ்ந்த கண்ணோட்டத்தில் காண்கின்றனர்!!
0 Comments
நன்றி