அன்று அதிகாலை 3.20 மணி அளவில் நானும் எனது நன்பனும் தேனி அரன்மனைபுதூரை அடைந்தோம்,
பழுது ஏற்பட்டு நின்று கொண்டிருந்த காற்றாலை ஒன்றை சரி செய்ய அதற்க்கு முந்தைய நாள் இரவு ஏழு மணி அளவில் கண்டமனூர் சென்ற நாங்கள் பணியை முடித்து விட்டு அரண்மனைபுதூர் வரும் போது அதிகாலை மூன்று மணி இருக்கும்.
அந்த மேற்க்கு கரையோரம் மலைமுகடுகளுக்கு மேல் மேக கூட்டங்கள் ஏதும் இன்றி இருள் சூழ்ந்து அந்த இருளின் நடுவினில் வளர்பிறை நிலவின் ஒளி எங்களை மெய் மறந்து நாங்கள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அந்த காண கிடைக்காத இரவுகளின் இரகசிய இரசனைகளின் முக்கியமான அந்த பொன்னிர ஒளியை கண் இமைக்காது பார்த்திருந்தோம்,
சொல்ல மறந்து விட்டேன் வெரும் நிலவொளி மட்டுமல்ல காற்றினால் நிலவோடு இணைந்த மேகம் ஒன்று இறைவா என்னவென்று வர்ணிப்பது கண்ட காட்சியை நீங்களே பாருங்கள்.
இந்த இயற்கை மீதும், இறைவன் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு என் உள்ளும் புறமும் அவன் நிறைந்திருப்பதை கனம் கனம் உணர்பவன் நான் அவன் என் புற கண்களுக்கு கொடுத்த இந்த மாபெரும் காட்சியை எங்கனே கடந்து வருவது,
மேகங்கள் நெற்றியில் பூசிய வீபூதி போலவும் அதன் மேல் நிலவு சிவனின் நெற்றி கண் போலவும், இறைவன் எனக்கு காட்சி தருகிறான் சிவ பெருமானின் நெற்றியை நான் தரிசித்தேன் என்பதை கூறினாலும் அந்த நேரம் எனக்குள் ஏற்பட்ட அந்த பரவசத்தை கூற முற்படுகையில் உண்மையில் நான் உங்கள் முன் தோற்று தான் போகின்றேன்.
இயற்கையும், இறைவனும் பல வேடிக்கைகளை நிகழ்த்தி கொண்டு இருப்பதை நாம் நிறைய கேள்வி பட்டிருப்போம், அந்த பெரும் ஆசீர்வாதம் நமக்கு உண்மையில் நிகழும் போது நாம் செய்வதறியாது திகைத்து தான் நிற்கிறோம் அந்த ஒரு கனம்.
சிவ பெருமானின் திரு நாமத்தை கூறிய படியே வணங்கி கொண்டு அங்கிருந்து நகர்ந்தோம் நானும் என் நண்பனும் புறபட்டு முப்பது வினாடி பொழுதிலே நான் மறு முறை திரும்பி பார்க்கும் போது காட்சி மாரியிருந்தது
மேகங்கள் கலைந்து இருந்தன அந்த நொடி என்னை இன்னமும் மெய்சிலிர்க்க செய்தது என்னை மீண்டும் மீண்டும் அவன் பொற்பாதத்தில் சரணாகதி அடைய செய்கிறது என்னை அரவணைக்கும் பேரன்பு, எனகழித்த வரங்களுக்கே என்னால் இன்றளவு நன்றி கடன் நிறைவேற்ற முடியவில்லை,
இறைவன் எனக்கு காட்சி கொடுப்பது இது முதல் முறை அல்ல,
பேரானந்த நிகழ்வுகளை இறைவன் இவ்வாறு நிறைவேற்றும் பொழுது தான் மனம் திருப்தி அடைகின்றது ஏனென்றால்?!
உண்மையில் ஈசன் மானிட உடல் பூண்டு என்முன்னே தோன்றி குழந்தாய் நான் தான் நீ வணங்கும் சிவன் என்று கூறியிருந்தால் அந்நேரம் என் உணர்வு நிலை செயலற்று இருந்திருந்தால் என்னால் உணர முடியாது,
ஐயா மிகுந்த மகிழ்ச்சி உங்களுக்கு ஏதேனும் தேவை படுகின்றதா ( ஐயா காபி,டீ எதாவது குடிக்கிரீங்களா ? ) என்று கேட்டிருப்பேன் ஏனென்றால் அவ்வளவு தானே மனித மனம்,
ஒன்றை அடைய பாடு படும் போது கிடைக்கும் சுகம் அது கையில் இருக்கும் போது தெரிவதில்லையே!!
இறைவனும், இயற்கையும் மர்மங்களாக இருக்கும் வரை மட்டுமே மனித மனம் அதீத தேடுதலில் திளைத்து நிற்க்கும்.
ஒன்றை பற்றிய இரகசியங்கள் புலபடும் போது அங்கே அலட்சியங்கள் பிரப்பெடுக்கின்றன!!
வாழும் வரை மனைதனுக்கு வாழ்கை போராட்டம் தான்.
🕉
ReplyDelete