வழக்கம் போல் அன்று அவன் காலை எழுந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று
அந்த காலை நேர இயற்கையை சிறிது இரசித்து விட்டு உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன்
எதிர் வீட்டு மாடியில் இருந்து குட் மானிங் என்று ஒரு சத்தம்
சிறிது கூர்ந்து கவனித்த பிறகு தான் குட்டி குழந்தை பக்கத்து வீட்டு ஆண்டியின் மகள் புவி தண்ணீர் டேங் அருகினில் தென்பட்டாள்
பாவம் குழந்தை சிறு வயதிலேயே தீவிர உடற்பயிற்சி பெற்றோர் கட்டாயத்தால்,
அவன் அந்த குழந்தைக்கு பதிலுக்கு ஒரு புன்னகையுடன் குட் மானிங் புவி..... என்று கலாய்த்த படி கூறி கொண்டு
பயிற்சியை தொடர்ந்தான் சிறிது நேரத்திலேயே கீழிருந்து சத்தம் என்னங்க ஆபீஸ்க்கு டைம் ஆகுது சீக்கிரம் வாங்க என அவனது மனைவி அவனை அழைக்க
அவனது மனைவியின் குரல் காதில் விழுந்ததும் தான் அவனுக்கு நினைவு வருகிறது ஆபீஸ்க்கு நேரம் ஆகிரது என்பதல்ல, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று..
அதை நினைத்து புன்னகைத்த படியே கீழே சென்றான்
கீழே சென்று பார்த்தால் மனைவி சமையல் அறையினில் நல்ல மணம் வீச சமைத்து கொண்டிருக்கின்றாள்
என்ன இன்று சமையல் கலை கட்டுகிறது என்று மனதில் நினைத்த படியே சமயலைறை நோக்கி சென்றான்
அங்கே மனைவி இளம் மஞ்சள் நிற புடவை கட்டி கொண்டு தலை விரித்து இருக்க இரண்டு காது அருகில் இருந்து சிறிது கூந்தலை மட்டும்
எடுத்து பின்புறம் மொத்த கூந்தலையும் சேர்த்து பிடித்த வண்ணம் அவனுக்கு மிகவும் பிடித்த அந்த
தலை கட்டை கட்டி அதில் சிறிது முல்லை பூவும் அதன் நடுவினில் ஒரு ரோஜா பூவும் வைத்து கட்டியிருந்தாள்
அவளை பார்த்ததுமே மொத்த நரம்பு மண்டலங்களும் இயக்க நிலையில் இருப்பதை உணர்த்த அவனுக்கு என்ன ஆச்சர்யம் என்றால்
இன்று என்ன விசேசமாக இருக்கும் என்று தான் தோன்றியது, நேற்று இரவு கூட எதையும் நம்மிடம் கூறவில்லையே
என்றும் காலையில் இப்படி கிழம்பி நிற்க்க மாட்டாளே நமது திருமண நாளும் இன்னமும் வரவில்லையே என
யோசித்த படியே அவள் அருகின் சென்று அவள் முகத்தை பார்த்தான் சிறிது புன்னகையை அவள் உதடுகளும் வெட்கத்தை அவள் கண்களும் அவனுக்கு உணர்த்த
அவன் அவளை பின்புறமாக அவள் வயிற்றோடு சேர்ந்து அணைக்க அவள் வார்த்தை மட்டும் வெட்கம் கலந்த சிறு முறைப்புடன்
என்ன இது காலையிலேயே என கையில் வைத்திருந்த கரண்டியின் பின் புறம் கொண்டு செல்லமாக சிறிது வலிக்கும் படி அடிக்க
அவன் ஆ....என கத்தி விட்டான் வெளியில் பாத்திரம் துலக்கி கொண்டிருந்த அவனது தாய் என்னடா ஆச்சி என்று கேட்க
செய்வதரியாது ஒன்னும் இல்லடி ஆத்தா...ஆ.... என சிரித்தபடியே குளிக்க ஓடினான், அவள் அவனது செய்கை கண்டு புன்முருவல் பூத்து நின்றாள்
குளியலறை விட்டு வெளி வந்த பிறகும் கூட இன்று அவள் எதனால் கிழம்பி நிற்கிறாள் என்று பிடி படவில்லை ஐயயோ இன்று அப்போம் ஏதோ பஞ்சாயத்து வைக்க போர சண்டைகாரி என ஒருவித அன்புகலந்த பயத்துடன்
அவளுடைய பிறந்த நாளும் இல்லை, கோவிலுக்கு சென்று வந்த அடயாளமும் இல்லை, திருமண நாள் இன்னமும் வர வில்லை என்று ஆலோசித்த படியே அவனும்....
எதனால் அவனது மனைவி அன்று கிழம்பியிருந்தாள் என்பதை கமெண்டில் கூறுங்கள் உங்கள் கர்பனை கலந்து சென்சார் உண்டு...
Comments
Post a Comment
நன்றி