இயற்கை தரும் காட்சிகளும் அதனால் மனம் அடையும் திருப்தியையும் யாரொருவராலும் கொடுத்திடல் இயலாது,
தினம் தினம் வேலை பழுவாலும், குடும்ப நிகழ்வாலும் வேதனையுரும் மனித மனத்திற்க்கு எங்கே நிம்மதி பெருமூச்சி கிடைக்கின்றது?
கோவிலாகட்டும் அல்லது குழந்தைகளுடன் செலவிடும் நேரம் தவிர்த்து சிறு நண்பர்கள் உடனான மகிழ்ச்சி சில நேரம் நண்பர்கள் கூட்டத்திலும்
ஏற்படும் கருத்து வேறுப்பாடுகள் என ஏதோ ஒரு வகையில் மனம் சலிப்புற்று கொண்டு தான் இருக்கின்றது
இவ்வளவு மன அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த இயற்கையின் சில அற்புத காட்சிகள் நம்மை மெய்மறந்து அதன் போக்கிலேயே இழுத்து செல்கின்றன
அப்படி தான் அந்த மாலை பொழுது பணி முடிந்து மனம் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்க நிகழ்வது அறியாது ஏதோ
நினைவுகளுடன் சென்று கொண்டிருந்த போது தான் கண்களுக்கு இதமாக...
மனதிற்க்கு புத்துணர்ச்சி தர கூடிய அந்த மேக கூட்டங்கள் மாலை மங்கும் அந்த வேளை சூரியனின் பொன்னிற ஒளி
மேகங்களை தன்வசம் ஈர்த்து ஒட்டு மொத்த மேக கூட்டங்களையும் தன் பொன்னிற ஒளியினால் நனைய வைத்திருந்தது..
அதனை பார்த்து, பார்த்து மனம் ஒரு விசாலம் அடைகிறது..
என்னை அறியாது அதன் போக்கிலே நானும் செல்ல தீடீரென நினைவு திரும்புகிறது
என்னுடன் இருக்கும் அனைவருமே அந்த காட்சியினை கண்டும் காணாததுமாய் நகர்ந்து கொண்டு இருக்கின்றனர்
ஆனால் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை...
வெப்பத்தில் உருகும் பனிகட்டி போல அந்த இயற்கையின் பேரழகினில் நானும் உருகினேன் எனைமறந்து...
காரை வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்த நண்பரை நிறுத்த சொல்லி என் ஆசை தீர அந்த காட்சியை முடிந்த அளவு நேர்த்தியாக பதிவு செய்ய முயற்ச்சித்து
சில புகைபடங்கள் உங்களுக்காக...
நீங்களும் இரசித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்...
கர்பனைகளுக்குள் காட்சிகள் ஆயிரம்!!
காட்சிக்குள்ளும் கர்பனை நிகழ்வதும் சாத்தியம்!!
இயற்கையோடு இணைகையில்...
0 Comments
நன்றி