அவனை அனைவரும் கோபகாரனாகவே கண்டிருந்தனர்,
அவன் இடம் நேர் நின்று பேச அனைவருக்கும் பயம் தான், வேலை நேரங்களில் மட்டும்
மற்ற வேளைகளில் அவனை போன்றொரு நகைச்சுவையாளன் கிடையாது ஏதாவது பேசி அல்லது யாரையாவது குறை கூரியாவது அனைவரையும் சிரிக்க வைத்து விடுவான்,
இல்லையென்றால் பேராபத்து தான் நிற்வாகத்திற்க்கு கோவத்தில் பேசும் போது அனைவருக்கும் உடலில் இரத்த அழுத்தம் ஏறும் வகையினில் அந்த வார்த்தைகளில் வேகம் இருக்கும்,
குடும்ப பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காது இருக்கும் எவரும் இங்கு பணி செய்தால் சில நாட்களில் வெடித்தி சிதறிடுவார்கள்,
அப்படி நடந்ததையும் பார்த்திருக்கிறோம், அனைவருக்கும் உதவி செய்யும் மனம், வேலை சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம்
செயல் சரிதான், தொழிலில் பாவம் புண்ணியம் பார்க்க கூடாது என்று சொல்வார்கள் பெரியோர்கள்,
இருந்தும் ஓடி ஓடி காலம் நேரம் பார்க்காது உழைத்து வந்த ஒருவனுக்கு இந்த கேள்விகளின் ஆழம் எறிச்சலையும் வெறுப்பையும் அதிகரிக்க தான் செய்யும்,
அதே நேரம் பாராட்டுதலுக்கும் பஞ்சம் இல்லை அனைவரிடமும் ஒவ்வொரு பொருப்பை கொடுத்து தனி தனியே நிற்ணயிப்பது சிறப்பு
அதில் என்னவென்றால் ஒரே வேலையை ஒருவர் பார்த்த பின் அதில் திருப்தியடையாது இன்னொருவர்
அதே பணியை பார்க்க சொல்லும் போது வேலையை முடித்தவனுக்கு தன்னை நம்பாதது போலிருக்கும்
இவ்வளவு கடுமையான வேலை செய்தும் நம்மீது நம்பிக்கை இல்லையெனில் ஏன் உண்மையாக உழைக்க வேண்டும் என்று தோன்றிடுமல்லவா!!
மனித மனம் தானே?
இப்படியே நாட்கள் நகரவும் என்ன தான் வருத்தம் இருந்தாலும் உழைப்பிற்க்கு சலிப்பு இல்லை
யார் என்ன சொன்னா என்ன,? என்னுடைய மனசாட்சிக்கு உண்மையாக நான் வேலை பார்க்கிறேன் என்னும் அனைவருடைய உறுதியும் வியப்பளிக்க,
என்னை நம்பி அவன் வேலை கொடுத்தான் அதனை நான் எவ்வாறேனும் சிறப்பாக செய்துவிட வேண்டும் என்ற எண்ணமும் அனைவரிடமும் வேட்கையாக இருந்தது
புதிதாக சிலர் பணிக்கு வந்து சேர்ந்தனர், அவர்கள் இவர்களுக்கு சலித்தவர்கள் அல்ல அவர்களும் அப்படி தான் வேறு வேறு திசையில் இருந்து கொண்டு வரப்பட்ட காட்டு யானை கூட்டங்கள் போல என்ன சொன்னாலும்
செய்ய ஆயுத்தமாக இருந்தது அந்த படையின் கர்ஜனை
எவ்வளவு பெரிய சூரைகாற்று வீசினாலும் உனக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றியே ஆவேன் என்ற உறுதியோடு
இரவு பகல் பாராது ஓடினார்கள், உழைத்தார்கள்
என்ன ஒரு புறம் கருத்து வேறுபாடு இருந்தாலும் வார்த்தைகளில் தெரிவிக்காது சென்று கொண்டிருந்தவர்கள் ஒரு புறம்
புதிதாக அணிவகுப்பு நடத்தியவர்கள் எதிர் கருத்துகள் கூட்டத்திலேயே எடுத்து வைக்க பட்டது
பதட்டம் இல்லை, பயம் இல்லை, ஆனால் மரியாதை அளவுக்கு அதிகமாகவே இருந்தது
எதிர் கருத்துகள் ஏற்பது, நிறாகரிப்பதும் இயல்பு தான் அது ஒவ்வொருவரின் மன நிலை பொருத்தது
ஆச்சர்யம் என்னவென்றால் இங்கு எதிர்கருத்துகள் அவனால் ஏற்க்க பட்டன நீ பெரியவனா இல்லை நானா என்ற எண்ணம் இல்லை
நீ கூறுவதை யோசித்தால் நீ கூறுவதிலும் உண்மை உள்ளது அது சரியும் கூட
என தன் தப்பை தான் ஏற்று கொள்ளும் பக்குவம் எத்தனை தலைமைக்கு இருக்கும்!!
அந்த யானை கூட்டங்கள் அங்கே பேரானந்தம் கொண்டன...
இத்தனை நாள் உழைத்ததற்க்கு பலனாக அவர் அவர் தனது சொந்த ஊரிலேயே பணி கொடுத்து அமர்த்தப் பட்டனர்
ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளமாய் அவன் திகழ்ந்தான்
அவனுக்கு யார் மீதும் தனிபட்ட கோபம் இருந்ததில்லை
ஆனால் பணியில் தவறு நடக்கும் போது அவன் யாரிடமும் கோபம் கொள்ளாமல் இருந்தது இல்லை என்று கூறிவிட முடியாது.
ஏனென்றால் அது தவறில் வீரியத்தை பொருத்தது....
உடன் பணிபுரிவோருக்கு அவன் கோபகாரன்,
தூரத்தில் இருந்து பார்ப்போருக்கு அவன் சிடுமூஞ்சி,
நெருங்கி பழகியோருக்கு மட்டுமே தெரியும் அவன் குழந்தையென்றும்,
கள்ளகபடமற்ற ஒரு சிறந்த மனிதன் என்றும்!
நாடு போற்றும் நல்லவனா என்பதை பற்றி எனக்கு தெறியாது!
ஆனால் அவன் நான் போற்றும் நல்லவன், நாணய தலைவன், கடமையில் கண்ணியம் கொண்ட சிங்கம்
ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்க்கு அவனும் ஒரு எடுத்து காட்டு,
கோபமே படாமால் ஒரு தலைவன் இருக்கலாகாது, சில நேரங்களில் கோபம் தீர்வாகின்றது தேவையும் படுகின்றது...
அன்பால் அரவணைக்க இது ஆதறவற்றோர் காப்பகம் இல்லை
அவரவர் அவர்கள் கடமைகளை சரியாக செய்தால் இன்பம் மட்டுமே நிலை கொள்ளும் வாழ்வில்...
*_நன்றி_*
Comments
Post a Comment
நன்றி