பிணம் தின்னி கழுகுகள் நாங்கள் வட்டமிடும் கானகத்தில் வயதான சிங்கம் மரணத்தை எதிர் கொண்டு தனக்கு தானே குழி நோண்டிக் கொண்டிருந்தது.
எங்களுக்கோ அத்தனை பொருமையில்லை. சிங்கத்தை சுற்றி வட்டமிட்டோம்.
வட்டமிட்டபடியே கீழே இறங்கி சிங்கத்தின் அருகில் செல்ல பயந்து தாழ்ந்து பறந்து கொண்டிருந்தோம், இதனை அறிந்த சிங்கம் சிறிதும் பயம் இல்லாமல் தோண்டி கொண்டிருந்த குழியின் அருகினில் முன் கால்கள் இரண்டையும் சீராக முன் நீட்டி பின் கால்கள் இரண்டையும் சீரக மடக்கி அமர்ந்தது.
அதனை பார்க்கும் போது வேட்டைக்கு தயாராக நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அமைந்தது அந்த சைகை.
கழுகளாகிய நாங்கள் வட்டமிட வட்டமிட சிங்கத்தின் கர்ஜனை கூடியது எங்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே தான் இருந்தது.
இதனை பார்த்த சிறுத்தைகள் சிங்கத்தை சுற்றி அகண்ட தூரத்தில் பதுங்கின.
சிறுத்தைகளின் நோக்கம் என்னவோ நாங்கள் தான், ஆனால் எங்களின் பார்வை சிங்கத்தின் மீது மட்டுமே.
பதிமூன்று ஆண்டுகளாக, இந்த நாற்பது ஏக்கர் பரப்பளவு கொண்ட வானுயர்ந்த மரங்களை பெற்ற மலைகளின் தேசமான அடர்ந்த கருக்கயல் காட்டின் அரசன் தான் இந்த சிங்கம்.
இங்கே லட்சகணக்கான உயிர்களைக் கொண்ட ஓர் பெரிய குடும்பம் நாங்கள், எங்களுக்குள் போட்டி அதிகமாக இருந்துள்ளது ஆனால் பொறாமை இல்லை.
சண்டைகள் என்பதை நான் பிறந்ததிலிருந்து பார்த்ததே இல்லை நாங்கள் வாழ்ந்த வாழ்கை கண்டு நாள்தோரும் மாரி எங்களை வாழ்த்த மறந்தது இல்லை.
அந்த ஒரு நாள் நாங்கள் அனைவரும் மிருகத்தனமாக நடந்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலை எங்களுக்கு வந்திருக்காது.!!
எங்கள் அரசனை நாங்களே பழிதீர்க்கும் அவலத்தில் இன்று சிக்கியுள்ளோம்;
நாங்கள் இருப்பது கருக்கயல் மலையின் மிகத்தாழ்ந்த பகுதி இங்கே நாங்கள் எங்கள் நாட்டில் தவறு செய்தவர்களை தண்டனைக்காக மட்டுமே இங்கு அனுப்புவோம் இங்கு இது வரை வந்தவர்கள் யாரும் திரும்ப நாட்டிர்க்குள் வந்ததில்லை.
இங்குள்ள கொடிய பூச்சிகளில் ஒன்று கடித்தால் உடனடியாக உயிர் போகாது, வலி தெரியாது!!
ஆனால் தாகம் மட்டும் எடுத்துக்கொண்டே இருக்கும்.
அருகினில் நீரோடை; தாராளமாக நீரோட்டோம் இருந்து என்ன பயன் ?
தாகம் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தீராது.
அந்த உணர்வும் தீராது இருந்து கொண்டே இருக்கும்.
என்ன தான் செய்யமுடியும்?
தொண்டை வரண்டு அங்கிருந்து நடந்து செல்ல கூட திராணியில்லாது செய்து விடும்.
அந்த பூச்சியின் விஷத்தை முறிக்கும் மருந்து எங்கள் கைகளில் தான் இருக்கும் நாங்கள் தான் பறவை படைகளின் தலையாய படை கழுகு படை.
இங்கு வந்த ஒருவன் மரணத்தை எட்ட இருக்கும் தருவாயில் அவன் மண்ணை உண்ண ஆரம்பிப்பான்.
அதுவரை அவனை கண்காணித்து வரும் நாங்கள் அந்த நேரத்தில் அவனுக்கான மாற்று மருந்தை கொடுத்து அங்கிருந்து மீட்டு கொடியகம்மா எனும் நீர் வீழ்ச்சியில் விடுமோம்.
அது முழுக்க முழுக்க இராணுவ படைகள் பயிச்சி செய்யும் இடம், உயிர் மீண்டவர்களுக்கு இராணுவ வீரர்களுக்கு தேவையான உணவு படுக்கை என அனைத்தையும் தயார் செய்யும் பணி வழங்கப்படும்.
அதன் பின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் அங்கேயே தான் கழித்தாக வேண்டும் அவர்களுக்கு மீண்டும் நாட்டினுள் இடம் இல்லை.
நான் புதிதாக பறவை படைகளில் இணையும் புது பறவைகளுக்கு பயிற்சி அழித்து அவர்களை நான்கு திசை வான் காவலுக்கு அனுப்பி வைப்பது எனது வேலை.
வசந்த காலம் அனைவரும் கேள்விபட்டு இருப்பீர்கள் ஆனால் நாங்கள் வாழ்ந்திருக்கிறோம்.
எங்கள் மன்னனின் கம்பீரமும், அவரது ராஜங்கத்தின் சிறப்பும் எங்களையும் எங்கள் வாழ்கை முறையையும் செழிப்பாக வைத்திருந்தது.
யாருக்கும் யாதும் தடை இல்லை உணவை தவிற எங்களுக்கு வேறு என்ன தேவைபட போகிறது!!
அதுபோலவே நாட்டின் சட்டங்களும் கடுமையாக இருந்தது.
அதனால் தான் இத்தனை சுதந்திரம்; எங்கள் உணவுகள் அனைத்தும் அயல் நாட்டில் இருந்தே வேட்டையாடப்படும்.
எங்கள் உள்னாட்டினுள் வேட்டையாட கூடாது என்பது அரசனின் உத்தரவு.
நான் வானுயர்ந்த காவல் காக்கும் கழுகு படையில் இணையும் முன்பு செழிப்பான தேசமான எங்கள் நாடு வஞ்சகர்களின் பிடியியினில் சிக்காமல் இருந்திருந்தால் நான் எனது தந்தையை இழந்திருக்க மாட்டேன்.
அவர் எங்களை பற்றி சிந்தித்ததை விட நாட்டை பற்றியும் நாட்டு மக்களுக்காக சிந்தித்தது தான் அதிகம்.
சிந்தித்தது மட்டும் இல்லை எத்தனையோ புது புது யுக்திகளை கையாண்டு பல கொட்டுவான் இன நெருப்பு கன்னிகளிடம் இருந்து இந்த நாட்டையே காப்பாற்றியுள்ளார்.
இந்த கொட்டுவான் இன நெருப்பு கன்னிகள் பகலில் மட்டுமே உணவை சேர்க்க வெளியே வரும் அதுவும் நமது கண்ணுக்கு வெளிப்படையாக தெரிவதில்லை.
வெட்ட வெளிச்சமாக தெரியும் வானத்தை கூர்ந்து பார்த்தால் இரண்டு புள்ளிகளை வளைந்த கோடுகள் மூலம் இணத்து வைத்தார் போல மங்கலாக தெரியும். நாம் பார்க்கும் இடம் எல்லாம் நகருவது போல மாய காட்சியளிக்கும்...
அது அருகில் வருகிறது என்பதோ அல்லது நம்மை தாக்க வருகிறது என்பதை அந்த வண்டிலிருந்து வரும் அதிக வெப்பத்திலிருந்து தான் நாம் உணர முடியும்.
இந்த வண்டு எந்த வித சத்தமும் வெளிப்படுத்துவது இல்லை. பார்க்க சாதரணமாக தெரியும்...
இந்த கொடிய விஷ பூச்சிகளில் ஆண் வண்டு ஒன்று மட்டுமே உண்டு. அந்த ஆண் வண்டை ஆயிரக்கணக்கான பெண் வண்டுகள் பாதுகாக்கும்.
இந்த கொட்டுவான் இன நெருப்பு கன்னிகளின் உணவு மாமிசம் மட்டுமே...
இவை தரையில் இருந்து பத்து அடி உயரம் அளவு மட்டுமே பறக்கும்...
இந்த வண்டுகளில் இருந்து வெளிவரும் வெப்பத்தை நாம் உணரும் நொடியும் அது நம்மை தாக்கும் நொடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை...
அதனாலே அதனிடமிருந்து தப்பிக்க அனைவரும் உயர்ந்த மரங்களிலோ!! அல்லது மரக்கிளைகளிலேயோ வாழ்ந்தனர்...
இந்த வண்டுகள் கடித்து சென்ற குரங்கை பார்க்கும் போது நரிகளினால் கடி பட்டது போல் இருக்கும் இந்த வண்டுகளின் ஒன்று கடித்துவிட்டால் அடுத்து அடுத்து அந்த மாமிச குருதி வாடையில் அடுதடுத்து ஒன்றம் மேல் ஒன்றாக கடித்து பிடுங்கி செல்லும்...
குருதி நிறத்தை வைத்து தான் வண்டுகளின் வடிவத்தை காண முடியும்.. அந்த வண்டுகள்
தொடரும்.....
பேரொளியின் கற்பனை துகளில் இருந்து
நான் :-
👌👌🏿👌🏿🤝👍
ReplyDelete