ஒரு யோகியின் பிறப்பு (பகுதி ஒன்று) Birth of Yogi (Part 1)
- Get link
- X
- Other Apps
அந்தமாலை இன்னமும் என் நினைவுகளிலிருந்து நீங்காத வகையில் தினம் தினம் நினைவுகூர்ந்து ரசிக்கிறேன்.
ஆம் அன்று எனது நண்பனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன் நண்பன் என்றதும் எனக்கு நினைவு வருவது அவனுடைய பக்தி தான் ஒருவேளை அதனால் கூட அவன் என் நண்பன் ஆகியிருக்கலாம்!.
அவனுடைய மனதின் பரிசுத்தம் கண்ட யாருக்கும் அவனை விட்டு விலகிடத் தோன்றாது..
அதில் நானும் முக்கியமான ஒருவன். அவன் எங்களை வரவேற்றான் அவனது மாளிகையினுள்
ஆம் அனைவருக்கும் அவர் அவர் வாழும் வீடு கோவில் அல்லது மாளிகை தானே நானும்
எனது மனைவி மற்றும் என்னுடைய மகன் சென்றிருந்தோம்.
வீட்டின் வெளித் தோற்றம் சொல்வதற்கு ஒன்றும் இல்லை பார்க்கப் பிரமாண்டமாகத் தெரிந்தாலும் முழு
வேலைகளும் முடியாத நிலையிலே இருந்தது நாங்கள் சென்றிருந்தது மாலை நேரம் என்பதனால்
கோவிலில் பக்தி கானம் இசைத்துக் கொண்டிருந்தது.
அவன் ஏற்கனவே அவன் ஊர் கோவிலின் பெருமையைப் பற்றிக் கூறியிருந்தான்
என்பதனால் நானும் கோவிலில் பாடல் இசை கேட்டதும் நாம் இன்று கோவிலுக்குப் போகலாமா
என்றேன்!?..
அவனும் நிச்சயமாக நானே அழைத்துச் செல்லலாம் என்று தான்
நினைத்திருந்தேன் என்றான் சரி என்று வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்து
அமர்ந்தோம்.
குவளையில் எடுத்து வந்தான் அவர்களுக்கே வழக்கமான சர்பத்தை...
நன்னாரி சர்பத்தை சாதாரணமாகக்
கூறிவிட முடியாது உண்மையில் நல்ல சுவையான பானம் தான் அது நன்னாரி சர்பத்தைக்
குடித்துவிட்டு அங்கிருந்து கோவில் நோக்கி நடந்தோம்.
இருநூறு மீட்டர் இடைவெளி மட்டுமே இருக்கும் கோவிலுக்கும் அவன்வீட்டிற்கும்.
ரம்மியமான மாலைப் பொழுது சுற்றி ரப்பர் மற்றும் தென்னை மரங்கள்
அந்த மாலைப் பொழுதை இன்னும் மனதில் பத்திரப்படுத்துகிறது.
அதுமட்டுமல்லாமல் குருவிகளின் ரீங்காரமும் தான்.
கோவிலை வந்தடைந்தோம் கோவிலில் அனைவரும் புதிதாக வந்த எங்களைக் கொஞ்சம் வேடிக்கையாகவே பார்த்தனர்
அவர்களுக்குள் எதோ முனு முனுத்தும் கொண்டனர், மனிதர்கள் மத்தியில் இத்தனை ஆண்டுகள்
வாழ்ந்தாயிற்று இது ஒன்றும் புதிது இல்லையே ?
கோவிலை சுற்றி வந்து கோவினுள் சென்றோம்.
பூஜை நடந்து கொண்டிருந்தது அனைவரும் கருவறை திறக்கும்நொடிக்காகவும் தேவியை தரிசிப்பதற்காகவும் காத்திருந்தனர்,
ஆனால் தினம் தினம் நடக்கும் ஒரு செயல் தான் ஆனாலோ தேவியின் அருள் மற்றும் ஒவ்வொரு நாளும் பார்க்க பார்க்க அவள் புது புது அலங்காரத்தில் கொடுக்கும் தரிசனம் தரும்
மனநிறைவு உலகத்தின் எந்த எல்லையிலும் இல்லை என்பான் எனது நண்பன்.
பூசாரி பூஜை முடித்து விட்டு அபிஷேக நீரைக் கையில்
எடுத்துக் கொண்டு வெளியே வந்தார், அவருடைய உடல் பழ பழ
வன இருந்தது அவர் மீது ஒரு புதுவித வாசனை இதுவரை நான் எங்கும் இப்படி ஒரு வாசனையை
நுகர்ந்தது இல்லை அவரும் நாம் நினைப்பது போன்று வயதானவர் இல்லை அவர்
மிகவும் குறைந்த வயது தான் இந்த வயதினில் இத்தனை அர்பணிப்பா என்று தோன்றியது நண்பன் கூறும் போது கூட எனக்கு இத்தனை வியப்பை கொடுக்கவில்லை. நேரில் பார்த்தபின்பு
இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது.
அவரை பார்க்கும். போது. ஒரு நிம்மதி ஏற்பட்டது மனதினில் நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன் அவர்...
வெளியில் நின்ற பக்தர்கள் அனைவருக்கும் கொண்டு வந்த அபிஷேக நீரைக் கொடுத்தார், அதில் நானும் ஒருவன் அவருடைய முகம்… இந்த வார்த்தையை நான் கதைகளில் தான் கேட்டிருக்கிறேன் ஆனால் இது உண்மை என்பதை இன்று உணர்கிறேன் ஆம் அதுதான் தெய்வக் கடாட்சியம் பொருந்திய முகம் என்பார்கள் அந்த கடாட்சியத்தை நான் முதல் முதலில் தரிசிக்கிறேன்.
கருவறைக்குள் இருந்து காட்சியளிக்கும் தேவி மனித உடலில் தோன்றினால் எப்படி
இருக்குமோ அப்படி உணர்கிறேன் அந்த இளம் வயது பூசாரியை பார்த்து அவர் நெருங்கும் ஒவ்வொருவரும் அவருடைய அந்த குழந்தை சிரிப்பையும்
தங்களுக்குள் பிரசாதமாய் பெற்று கொள்கிறார்கள். பின் கருவறைக்குள்
சென்றார் அவரை தொடர்ந்து வெளியில் நின்று கொண்டிருந்த கீழ்சாந்தி அனைவருக்கும்
பிரசாதம் வழங்கினார். ஆனால் கீழ்சாந்தி வயது அறுபதைக் கடந்து இருக்கும் நிச்சயம்.. பிரசாதத்தை
அனைவரும் பெற்றுக் கொண்டு அனைவரும் கோவிலைச் சுற்றி வலம் வந்து
அப்படியே வீடு சென்றனர்.
நானும் எனது நண்பன் மற்றும் மனைவி மகன் என நான்குபேரும் அங்கு ஒரு ஓரமாக
இருந்த காலபைரவர் சன்னதியின் அருகில் அமர்ந்தோம் எனக்கு அந்த பூஜாரியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் மிகவே நான் எனது நண்பனிடம் கேட்டேன்..?
நான் கேட்டது தான் தாமதம் அவன் நான் எப்போது கேட்பேன் அந்த கதையை என்று கூற மிகுந்த ஆவலோடு இருந்தான்
!
நண்பன் கூற தொடங்கினான்....
நண்பா அவர் வெறும் பூஜாரி இல்லை அவர் இந்த ஊருக்கு கிடைத்த பொக்கிஷம் அவர் சாதாரண மனிதர் இல்லை
அவர் மனித அவதாரம்...
தொடரும்........
பேரொளியின் கருணைத் துகளில் இருந்து நான்.....
பிரதீஸ்
- Get link
- X
- Other Apps
Comments
I'm waiting, please update the balance story 😍
ReplyDelete