இப்படிக்கு காலம்

வெற்றிகள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளை தோண்டி எடுங்கள்

அங்கே வாழ்வு முழுவதும் தோற்றவன் சரித்திரம் பொறிக்கப்படட்டும் 

அவனுடைய போரட்டங்களும் அவனுடைய தியாகங்களும் செதுக்கபடட்டும்

நாயகன் தோற்ற கதை ஒன்று உலகுக்கு கூறுங்கள்

அவன் வெற்றி பெற்று கொடுத்த ஏனைய மக்கள் அவனை கல் எறியும் நிலைக்கு மாற்றிய

நயவஞ்சகர்களின் குரவளைகளை கடித்து எறியுங்கள்

நாட்டின் பல கதைகளை கற்பனை கொண்டு வரலாறுகளை மாற்றிய விரோதிகளை ஊசி கொண்டு கண் விழிகளில் சிற்பம் செதுக்குங்கள்

புரியட்டும் வீரனின் வலிகள் அவனுக்கும்
உணரட்டும் வீரனின் தியாகத்தை அவனும்

போருக்கு சென்றவன் எல்லாம் வீரன் இல்லை
வெற்றி பெற்றவன் எல்லாம் மன்னல் இல்லை

மகுடம் பறிக்க பல சூழ்ச்சி செய்து, போர் வரம்புகளை மீறிய நாசக் காரர்களை பாழடைந்த கிணற்றினில் பாதி தூரத்தில் தொங்க விடுங்கள்

சூழ்சியின் இழப்பு புரியட்டும் அவனுக்கு
துரோகத்தின் அலரல் சத்தம் கேட்கட்டும் அவனுக்கு

விதிகளை உருவாக்கியவனுக்கு விதிகள் இல்லை

வலிகளை ஏற்பவனுக்கு ஆயிரம் விதிகள் 

நீங்கள் ஏமாற்றியது போதும்

வஞ்சம் கொண்ட நீங்கள் உங்களுக்கு நீங்களே பூமியின் மத்தியில் மாபெரும் குழி ஒன்றை அமைத்து கொண்டீர்கள் என்பதில் மாற்றம் இல்லை.....

இப்படிக்கு
காலம்

Post a Comment

1 Comments

நன்றி