ரசனை

ரசனையில் தோற்றவன் என்று யாரும் இல்லை, ஆனால்!  ரசனை இல்லாதவர்களை எப்படி கூற முடியும் வாழ்வை வென்றவர்கள் என்றா?

நிச்சயம் இல்லை தோற்றவர்கள் மத்தியில் அவர்களுக்கு தான் முதல் இடம்.

ரசனையின் ரகசியம் அறியாத வரை வாழ்கை புரியாத புதிராக மட்டுமே விளங்கும்!!

உலகத்திலேயே இது தான் மிக அடர்ந்த வனம் இதனை போன்ற அழகு உலகில் வேறெங்கும் இல்லை என்ற இடத்தில் நின்றாலும் ஆர்பரிப்பு இல்லாத, சலனம் இல்லாது மனம் மாண்டு கிடந்தால் வாழ்வின் ஒவ்வொரு நொடியும் பாழ் தான், மனிதனுக்கு 

மனம் அல்லாது போய்விட்டால் ரசனையின் பேச்சிக்கு அங்கு இடம் இல்லை, அங்கு எண்ணம் இல்லை, அப்படியெனில் ஆக்கம் இல்லை எல்லாம் கலந்தாயிற்று இயற்கையோடு, அது ஒரு ஞான நிலை புத்தன் அடைந்ததை போல அங்கு யார் யாரை ரசிக்க ? எல்லாம் உணர்வு மயம்தான்

நாம் ஞானம் தேடும் புளு! ஆசை எனும் கூறிய பக்கத்தை கொண்ட கத்தி மீது ஊர்ந்து செல்ல முற்படுகிறோம்.

ஆசை அது ரசிக்க செய்யாது அல்லவா!! 

ஆசை உணர்வுகளை சிதைப்பதல்லவா!!

ஞான நிலையொன்றை அடைய 
வேண்டுமென்றால் ரசனையின் 
ஊஞ்சலில் ஆட தான் வேண்டும்.!!

ரசனையின் கடலில் மூழ்கத்தான் வேண்டும்.

ரசனையின் ரகசியிம் தான் ஞானம்.



பேரொளியில் இருந்து நான்

பிரதீஸ்



Post a Comment

1 Comments

நன்றி