Posts

Showing posts from November, 2024

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

காரணம் உண்டு

Image
அகப்பட்டுக் கொண்ட பேருந்து நெரிசல், வாழ்வின் அடுத்தது என்ன என்று தெரியாத ஒரு விரக்தியான நிலை, நிம்மதி தராத வீடு, உறவுகள் மத்தியில் மவுனம் என அனைத்திற்கும் காரணம் உண்டு.  அன்பின் ஓரவஞ்சனையை பார்த்திருக்கிறேன், கடும் சொற்கள் வீசி புன்னகைத்து செல்பவர்களையும் பார்த்திருக்கிறேன். எதுவும் நிலையில்லை என்று தெரிந்த பின்னும் அடிமையாகவே வாழ துணிந்தவனுக்கு எதற்கு வாழ்வு ? என்ற கேள்வியுடன் கடந்து செல்கிறேன். வாழ்வு என்பது சாபமாக இருக்கலாம் ஆனால் வாழ்க்கை என்பது வரம் கிடைத்த வரத்தினால் சாபத்தை சரி செய்ய முயலுவதே இன்பம் அதனை தவிர வேறு ஏதும் இன்பமில்லை என்ற நிலைப் பாடு தான் என்னுடையது. படாத அவமானங்கள் இல்லை. பட்டும் திருந்தவில்லை என்றான பின் என்ன செய்வது. அப்படி என்னிடம் பல பேர் கூறியுள்ளனர் இப்போது நானும் பலரை பார்த்து கூறுகிறேன் இருந்தும் என்னையும் இன்னமும் அப்படி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  இத்தனை அனுபவங்களுக்கு பின்னும் நான் திருந்த வில்லையோ! இல்லையென்றால் இவ்வளவு தான பார்த்துக்கலாம் என்ற எண்ணமாக இருக்க முடியாது. சலிப்பின்றி தினமும் காவல் நிலையம் சென்று ஏதாவது வழக்கு என்மீது போடுங்கள் என்று

மனதின் சொல்லாத முகவரி

Image
தேன் இனிக்கும் என்பது உண்மை தானே !  சில வேளைகளில் எனக்கு இது போன்ற சந்தேகங்கள் வருவதுண்டு. நான் ஓர் தேன் சொட்டு ருசி பார்த்து பரிசோதித்து பின் நம்புவது இல்லை. ஏனென்றால் இதுவரை நான் தேனை பார்த்தது இல்லை. ஆம் இத்தனை அப்பட்டமாக பொய் சொல்வது எனக்கு புதிது இல்லை.  நான் பொய் கூறுவதில் மகத்தானவன். கருப்பட்டி காபி போட்டு கேட்டேன். அம்மா சுக்கு போடவா என்று கேட்டாள் ? சுக்கு போட்டால் அது சுக்கு காபியா இல்லை கடுப்பட்டி காபியா என்று கேட்டேன் ? அது ஒரு நல்ல கருப்பட்டி சுக்கு காப்பி என்று அம்மா சொன்னாள். நான் அப்படியென்றால் அதில் கொஞ்சம் மிளகு சேர்த்துக் கொள்ளுங்கள் என்றேன்! அம்மா, சரி அப்போ உனக்கு சுக்கு, மிளகு, தண்ணி, கருபட்டி காபி வேணும்னு சொல், என்று சிரித்துக் கொண்டே சமையலறைக்கு சென்றாள். நான் கேட்ட கருபட்டி காபி இப்போது எப்படி பரிணமித்துள்ளது ! ஆனால் நல்ல ஆரோக்கியமானது தான். நான் என்ன குடிக்க வேண்டும் என்பதை இங்கு யார் முடிவு செய்திருக்கிறார்கள். அம்மாவா? இல்லை நானா?  இயற்கையாக கூட இருக்கலாம் இல்லை, இல்லை இது தான் விதியோ? யாருக்கு தெரியும் சாதாரண கருப்பட்டி காபிக்கு இத்தனை கலகம் செய்யும் என்

சீமான் ஒரு மேடை பேச்சாளர்

Image
சீமான் அவர்கள் அரசியல் தலைவரா என்று கேட்டால் என்னைப் பொறுத்தவரை இல்லையென்று தான் கூறுவேன். அதே நேரம் இன்னுமொன்றும் கூறலாம் அவர் ஒரு சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதை யும். நான் மட்டுமல்ல அனைவரை இதனை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் பட்டிமன்ற பேச்சாளர்களில் தரப்புகள் பிரியும் போது அதில் இவரை நகைச்சுவை பேச்சாளர் என்ற தரப்பில் மட்டுமே சேர்க்க முடியும். ஏனென்றால் வரலாறுகளை அவருக்கு சாதகமாக நகைச் சுவை மாறாமல் பேசுகிறார். சில வருடங்களுக்கு முன்பு இணையம் அவ்வளவு வளர்ச்சி இல்லை மேடை பேச்சுக்களை மக்கள் பலர் விரும்புவார்கள் அப்போது தன்னுடைய பேச்சு திறமையை மட்டுமே கொண்டு ஒரு கட்சியை இவ்வளவு தூரம் வளர்க்க அவர் பேச்சுக்கு மயங்கி முதலீடு செய்தவர்கள் அதிகம். ஆனால் இன்று இணையம் அடைந்திருக்கும் வளர்ச்சி அபாரம் இந்த நிலையில் ஒரு பேச்சாளராக தன்னை சரியாக அடையாளம் படுத்திக் கொள்ள தவறுகிறார்  எதை கூகுள் செய்தாலும் தரவுகள் கிடைக்கும் இந்த காலத்தில் இத்தனை குழப்பமான பேச்சுகள் அவரை ஒரு கோமாளியாக எதிர் தரப்பு சித்தரிக்க செய்கிறது. அது புறம் இருக்கட்டும் கட்சிகளுக்குள் மாறி மாறி குறை சொல்வது தானே வழக்கம்! ஆனால

யார் இவள் !

Image
  உண்மையில் இப்படித் தான் கேட்கத் தோன்றுகிறது. இத்தனை தெளிவு அனைத்துப் பெண்களுக்கும் வேண்டும் என்பது தான் நமது எண்ணம். உண்மையோ அல்லது நவீன தொழில் நுட்ப வளர்ச்சியில் முகம் மாற்றம் செய்த வீடியோவோ தெரியவில்லை என்ற போதும். ஒரு பிரபலமான பெண்ணின் அந்தரங்க வீடியோ வெளியே வந்துள்ளது என்பது அனைவரும் அதனை பார்க்க புள்ளி வைக்காத இடமே இல்லை. எத்தனையோ ஆபாச வீடியோக்கள் பார்த்துள்ள மனிதர்கள் இன்னமும் சிறிதும் ஆர்வம் குறையாமல் உள்ளனர். அப்படி என்ன புதுமையை பார்த்து விடப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஏனோ ஏதோ ஒன்று அவர்களை அப்படி தூண்டியிருக்கலாம். சரி அனைவரும் தேடி, தேடி பார்த்ததின் பயன் என்ன யாருக்கு என்ன கிடைத்தது ? வக்ரம் இல்லாதவர்கள் யார் ? என்ற கேள்வியும் எழுகிறது. பெண்களும் இதனை சமூக வலைத் தளங்களில் பதிவிட்டு இருந்தது இன்னமும் ஆச்சர்யம். ஆணை மட்டுமே தவறாக சித்தரிக்கும் உலகம் அவர்களை என்ன சொல்லும்!  ஆண், பெண் சரி சமம் என்று கூறும் காலம் இது என்பதனால் இந்த நிலையா ? உண்மை தான் எனலாம் சமீபத்தில் இஃது போல் நடந்த ஒரு ஆணின் சுய இன்ப காணொளியும் இப்படியே அதிகமாக பெண்களால் பரப்ப பட்டது.  யாரும் எதையும

இருள் சூழ்ந்தவன்

Image
  அடிச்சி அவன் மண்டைய உடைக்காமல் நான் இங்கிருந்து வர மாட்டன் தாயோளி இன்னைக்கு அவனா நானான்னு பாக்கணும் ல மக்கா. என்ற இளமை பருவ வீரத்துடன் நின்றிருந்தான் தினேஷ் பத்து வருடங்களுக்கு முன்பு. வீரம், அந்த வீரத்துடன் பேசிய வார்த்தைகள் எல்லாம் பருவ மாற்றங்கள் போல மாறிக் கொண்டே இருந்தன.  வார்த்தைகள் ஊற்றுப் போல பெருகிக் கொண்டே இருந்தன நரம்புகளின் இறுக்கம் குறைந்து விட்டது ஊரெங்கும் வம்பை விலைக்கு வாங்கியவன் என்று சமாதான படுத்திக் கொண்டிருக்கிறான் அனைவரையும். திருமணம் முடிந்தது, குழந்தை பிறந்தது என்ற தனிப்பட்ட வாழ்க்கை ஏற்படுத்திய மாறுதல்களாக கூட இருக்கலாம்.  வீரர்களை எல்லாம் திருமணம் கோழையாக மாற்றி விட்டது என்று கூறி விட முடியாது ஏனென்றால் வீரன் என்றும் வீரன் தான். ஆனால் அவன் இப்போது பொறுப்புள்ளவனாக முன் பின் நடப்பதை புரிந்து கொண்டவனாக இருக்கலாம். தன் குடும்ப சூழ்நிலையை உணர்ந்தவனாக இருக்கலாம்.  யார் எப்படி இருந்தாலும் அனைவரும் அடுத்த அடுத்த வளர்ச்சியில் சோதிக்கப் படுவார்கள் என்பது போலவே, தினேஷ் இன்று நிலை தடுமாறி நின்று கொண்டிருக்கிறான். உடலுள் வலு இல்லாமல் இல்லை ஆனால் ஏனோ மனம் சோர்ந்து விட்

சூப்பு கடை அக்கா

Image
 வளக்கமாக வேலை முடித்து வரும் பாதை கிட்டத்தட்ட நாற்பத்தைந்து நிமிட இருசக்கர பயணத்தின் பின் ஊரை அடைய ஒரு நான்கு கிலோமீட்டர் தூரம் இருக்க “ஆட்டுக் கால் சூப்” என்று ஒரு பெயர் பலகை கடை ஆரம்பித்து ஒரு சில மாதங்கள் இருக்கலாம் நான் அந்த பாதைக்கு அன்று புதியவன் வழக்கமான பாதையில் மழைவெள்ளம் தேங்கியிருந்ததால். அதிக உடல் உழைப்பு செய்ய வேண்டுமானால் உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் நல்ல உணவுகளும் உணவு கட்டுபாடுகளும் முக்கியம் என்றெல்லாம் மனம் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தது. சூப் கடை அக்காவிடம் “அக்கா இரண்டு சூப் பார்சல் என்றேன்” நேரம் ஒன்பதை கடந்திருந்ததால் கடையில் யாரும் இல்லை.  கடைக் கார அக்கா சூப்பை பார்சல் கட்டிக் கொண்டிருந்தார்கள் சூப் எவ்வளவு என்று கேட்டேன் அறுபது ரூபாய் தம்பி என்றார்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசாரிப்பள்ளத்தில் வாங்கியது பதினைந்து ரூபாய் தான் ஒரு சூப் நான் அந்த அக்காவிடம் அக்கா மத்த கடையில எல்லாம் ஒரு சூப் பதினைந்து ரூபாய் தான் என்றேன்  கடைக்கார அக்கா தம்பி… சூப் இங்க இருந்து குடிக்கிறது பதினைந்து ரூபாய் தான் ஒரு கப் வரும் இதில் ப

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *