காலம் அனைவருக்கும் பொதுவானது என்பதில் நம்பிக்கை யாருக்கும் இருக்காது ஏனென்றால் யாருடைய வாழ்வு எப்போது உயரும் எப்போது சறுக்கும் என்பது காலம் மட்டுமே அறிந்தவென்று. மனிதன் மிகவும் பயந்தான் கொல்லி என்று ஊர் வழக்கத்தில் எடுத்துக் கொள்ளலாம் அவன் படைப்பை நம்பவில்லை ஆனால் அவன் ஒன்றை படைக்கிறான் அதற்கு பெயர் சூட்டுகிறான். அது உயிரற்றதாக இருந்தும் அதன் மீது ஒரு நம்பிக்கை கொள்கிறான். அந்த நம்பிக்கை அவனுக்கு என்ன கொடுக்கிறது என்றால் அவனுடைய பயத்தில் இருந்து அவனுக்கு ஒரு விடுதலை கொடுக்கிறது என்று கூட கூறலாம்.
யுகங்களின் பரிணாமத்தில் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்று ஒரு பிரிவினை மனிதனை தவிற வேறு யார் உருவாக்கியிருக்க முடியும். அவன் தானே அவன் கற்பனைகளை வாழ்வியலில் பொருத்தி ஒரு வித இயல்பற்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறான்.
நாகர்கோவில் நாள் 15-10-1996 இரவு மணி 7:30 ஊர் கூட்டம் நடைபெறும் ஊர் கருங்காலிவிளை கோவில் கிழக்கு வாசல் ஊர் கமிட்டி தலைவர்கள் அமர்ந்து இருந்தனர் எதிர்புறம் இருந்த தெருவில் இடது பக்கம் அமைந்திருந்த ஊர் நிர்வாகி சுயம்பின் வீட்டு திண்ணையில் பெண்கள் வரிசையாக அமர்ந்துக் கொண்டனர்
ஆண்கள் ஊர் பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரும் அவர்கள் அணிகளுடன் இணைந்து ஆங்காங்கே நின்றுக் கொண்டிருந்தனர். ஊர் தலைவர் ஒரு வழக்கறிஞர் அதுமட்டுமல்லாமல் ஒரு கட்சியின் மாநில வழக்கறிஞர் அந்த கட்சியின் நிர்வாகியும் கூட, ஊரில் அவருக்கென்று ஒரு மரியாதை இருந்தது. அது பணத்தால், பதவியால் என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர அவருடைய குணத்தால் என்று யாரும் கூறிவிட மாட்டார்கள். ஏனென்றால் அவர் செய்யும் ஒவ்வொரு பொது விஷயங்களிலும் அவருடைய சுயநலம் இணைந்தே இருக்கும்.
உதவி என்று போய் நிற்பவர்களுக்கு எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் உதவி செய்பவர்களும் நாட்டில் உண்டு என்பதில் ஐயம் இல்லை, ஆனால் அவர் அப்படிப் பட்டவர் கிடையாது கைமாறு எதிர்பார்ப்பவர். முன்பகை ஏதும் இருந்தால் தக்க சமயம் பார்த்து காத்திருப்பார். ஊரில் அவர் மட்டுமே வழக்கறிஞர் என்பதனால் ஏதாவது ஒரு வகையில் அவரிடம் உதவியென்று செல்ல நேரிடும் என்பதினால் குணத்தில் சிறந்தவர்கள் ஏழைகள் அவரிடம் வம்பு வைத்துக் கொள்வது இல்லை.
எதை பற்றியும் யோசிக்காமல் அவரை வம்புக்கு இழுக்கும் நபர்களும் இருந்தனர். அவர் மீது வழக்கு தொடுக்கவும் செய்திருந்தனர் ஊரில் முந்தைய பொதுக் கூட்டங்களில் நடந்த சண்டைகளில் ஏற்பட்ட மோதலில். அவர் அந்த வழக்குகளை அவருடைய அரசியல் செல்வாக்கு பயன்படுத்தி அவருடைய ஓட்டுநர் மீது மாற்றி விட்டார். இப்போது ஊர் போது கோவிலை சுற்றியிருக்கும் அவருடைய நிலத்திற்கு வழிப்பாதை வேண்டும் என்பதற்காக பல வேண்டாத வேலைகளை செய்து வருகிறார் என்பது ஊர் மக்களின் கூற்று.
முந்தைய பொதுக்கூட்டத்தில் எடுக்கப் பட்டிருந்த முடிவு அது ஊரில் இளைஞர்களுக்கு வேலையில்லை. இளம் வயதில் நிறையபேர் இறந்து போகின்றனர் அனைத்திற்கும் காரணம் கோவிலில் சரியான முறையில் பூஜை நடக்கவில்லை என்பதாக இருந்தது கேரள நம்பூதிரியின் வாக்கு. அதற்காக ஏற்பாடு செய்து ஊருக்குள் கோவில் பூஜைக்கு போற்றிகள் இருவர் நியமிக்கப் பட்டனர். கேரள மாநிலத்தை சேர்ந்த அவர்களுக்கு தங்க இடமும் கொடுத்து ஊதியமும் கொடுக்கப் பட்டது மூன்று வருடங்களாக அவர்கள் தான் பூஜை செய்து வருகிறார்கள். அவர்கள் வந்த பின்பு பூஜை முறையில் மாற்றம் செய்யப்பட்டது, பூஜை நேரம் மாற்றப் பட்டது.
தற்போது நடைபெறும் கூட்டத்திற்கான காரணம் போற்றிகள் இருவர் அண்ணன் தம்பி அவர்களுள் ஒருவர் வழக்கறிஞருக்கு ஓட்டுனராக சென்றுவிட்டார். தக்க சமயம் பார்த்து காத்திருந்தவர் நிர்வாகத்தை கலைத்து வேறு நிர்வாகம் அமைக்க வேண்டுமென்று அவருக்கு சாதகமாக அமைக்கவே திட்டம் தீட்டியிருந்தார். இது ஊரார் அறிந்ததே. ஊருக்குள் இருப்பது முப்பது பேர் முக்கியமானவர்கள் இங்கு யார் என்ன பேசிக் கொண்டாலும் அது ஊரில் உள்ள முன்னூறு பேருக்கும் தெரிந்து விடும்.
இதுதானே ஊர், அனைத்து ஊரிலும் இது தான் நிலமை என்றாலும். அந்த அந்த நேரங்களில் அவை மிகுந்த ஆரவாரத்துடன் தான் பேசப்படும். போற்றிகளுக்கு கொடுக்கப் பட்டிருந்த வீட்டில் ஏழு எட்டுப்பேர் கூடி சத்தமும் ஆர்பாட்டமுமாக இருக்க ஊர் தலைவர் அவர்களை திட்டிவிட்டார் என்ப்பா வேறு ஒரு ஊரில் இருக்கும் போது எப்படி இருக்கவேண்டும் என்று கூடவே தெரியாது அக்கம் பக்கத்தில் வீடுகள் உள்ளது நடுத்தெருவுள் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி வைத்தால் எப்படி என்று கேட்டு கொஞ்சம் அதட்டலாக இப்படியே செய்தால் வாகனத்தை எரித்து விடுவேன் என்று கூறிவிட்டு வந்துவிட்டார்.
பஜனை நடக்கும் நேரம் வழக்கறிஞருக்கு ஓட்டுனராக இருக்கும் போற்றி கோவில் மைதானத்திற்கு வந்து ஊர் தலைவரிடம் நீ அவ்வளவு பெரிய ஆளா ? மரியாதை கொடுத்தால் தான் மரியாதை என்று வழக்கறிஞர் பேச்சைக் கேட்டு ஆர்ப்பரிக்க இன்று ஊர் நிர்வாகம் போற்றிகளை என்ன செய்ய என்று தீர்மானம் செய்ய காத்திருக்கின்றனர்.
சான்றோர்கள் கூடியிருக்கும் இந்த அற்புதமான மாலை வேளையில் தாயின் அருளால் அனைவரும் நீண்ட ஆயுள் செல்வம் பெற்று வாழ பிராத்திக்கிறேன். என்று ஆரம்பித்தார் ஊர் தலைவர் (தர்மகர்த்தா) அனைவரும் அறிந்த விஷயம் தான் என்னவென்று விளக்க தேவையில்லை இருந்தாலும் ஊர் நடைமுறையை மாற்ற முடியாது என்று நடந்தவற்றை கூறி என்ன செய்யலாம் என்று கேட்க மக்களில் சிலர் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்றனர். சிலர் மன்னிபெல்லாம் தேவையில்லை இந்த மாதம் முடிந்ததும் அவர்களை அனுப்பி விடலாம் என்றார்கள். நம் ஊரில் பிழைக்க வந்தவர்கள் எப்படி தலைவரை கேள்வி கேட்க முடியும். அது யாராக இருந்தாலும் ஊர் ஹவுரவம் முக்கியம் என்றார்கள்.
கடைசியாக அதுவும் சரி தான் என்று அவர்களை நிறுத்த முடிவு செய்தனர்.
0 Comments
நன்றி