நான் ஒரு தேசாந்திரி



        பயணங்களில் சுவாரஸ்யம் எதிலும் இல்லை
பல கோணங்கள், பார்வையையும் மனதையும் விசாலபடுத்தும் காட்சிகள், 

        மனம் அதையறியாமலயே தன்னை தான் லயித்து நிற்க்கும், அற்புதம் நிகழ்ந்தும் இந்த இயற்கை.

        போதிமரஙகள் தேவையில்லை, பனி துளியை சுமக்கும் புல் நுனி போதும், ஞானம் பிறக்க பற்பல
அற்புதம் காண கிடைக்கும்.

        ரசனை இல்லாதவனும் ரசிகன் ஆவான் உன் அற்புதத்திற்க்கு, உனக்கென்ன ஆரவாரம் செய்யாது பேரமைதியாய் இருக்க

        கோர தாண்டவம் ஆடவும் தயங்கியது இல்லைதான் நீ! விழி மூடவும் மறுக்கிறது உன்னை
விட்டு அகன்றிடவும் முடியாது!

       நீ செய்யும் ஜாலம் எல்லாம் மாயமமில்லா அற்புதம் தானோ? தவத்தின் உள்ளொரு மாபெரும்
தவம் புரியும் ரகசியம் தான் என்ன?


      எங்கும் சிதறி நீ கிடக்க காணும் இடமெல்லம் என்னை திணரடிக்க, ஒவ்வொரு நொடிக்கு ஒரு முறை உன்னை நீயே செதுக்கி கொள்கிறாயே!!

      உன்னுள் தான் எத்தனை எத்தனை ஆச்சர்யங்கள், மனிதன் இன்னும் வெளிபுலபடாத புதையலையும், ஆழ் கடலையும் ஆராய்ந்து,

     ஆராய்ந்து மாண்டு போகிறான், உன் புனிதம் புறியாத மடையர்கள் அவர்கள், எங்கும் நிறைந்து இருக்கும் உன்னை காணா!

    மலை முகடுகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இல்லையே! கால் அருகே கடந்து செல்லும் கட்டெரும்புகள் கூறும் அதுவே!

   உன் அன்பை காட்டும், அத்தனை சிறிய பூச்சிகளும், கண்ணுக்கு புலபடாத பாக்டீரியாக்களும், அவைகளுக்கும் கை,கால்கள்

    படைத்த உன் கற்பனை, அது கற்பனை அல்ல
அது கருணை, அதற்க்கும் ஓர் எல்லையும் வைத்திருக்கிறாய். ஆம் 

    கை, கால்கள் அற்ற எத்தனை குழந்தைகள் அதுவும் உன் கருணை தானல்லவா? உன்னை இரசிக்க செய்கிறாய், உன் மீது கோபமும் வரச்செய்கிறாய்!?

   எல்லைகளற்ற இந்த பிரபஞ்சத்தில் எத்தனை எல்லைகள் ? நமக்குள் ?! உன்னை போல எல்லைகளற்று இருந்திட நானும்

   ஆவலாய், தினம் தினம் காத்திருக்கிறேன்
அந்த ஓர் நாளுக்காக!!🍃🍃🍃


🍃நன்றி 🍃

Post a Comment

1 Comments

நன்றி