நம்மை நாம் யாரிடமோ.. நிரூபிக்க நினைக்கிறோம்..
அதற்காக முயற்சி செய்கிறோம், அது வேலைக்காவோ! அல்லது வியாபரத்திற்காகவோ! ஏதோ தொழிலுக்காகவோ இருக்கலாம்…
நாம் ஏன் நம்மை நிரூபிக்க வேண்டும்?
எந்த கோட்பாட்டின் மையத்தில் சுற்றி வருகிறோம்? நிரூபிக்க நினைக்கும் காரணம் என்ன ? நம் திறமைகள் இங்கே பணமாக்க படுகின்றனவா?
பாராட்ட படுகின்றனவா? பணம், பாராட்டு இவைகள் இல்லையென்றால்
இந்த திறமைகள் என்னவாயிருக்கும் ?
ஏதோ ஒரு பலனை எதிர்பார்த்தே ஒவ்வொரு
செயலும் நகருகிறது… அது மனிதனுக்கு பாராட்டு அல்லது பணம் என்ற பலனை எதிர்நோக்கி உள்ளது;
மற்ற உயிர்களுக்கு உணவு என்பதனை தாண்டி
வாழ ஓர் இடம் அல்லது கூடு என்பதனை மையமாக கொண்டு நகருகிறது…
மனிதனும் இப்படி இருந்து தான் தனது
தேவைகளை அதிகமாக்கிக் கொண்டான் என்பது அனைவரும் அறிந்த கதை தான்…
இருந்தும் ஏதோ
ஒன்று வாழ்வின் தேடுதலாக்க பட்டிருக்கும் நிச்சயம்,
தேடுதல் இல்லாத வாழ்வு என்பது நிச்சயம் அர்த்தம் அற்றது தான்!! தேடுதல் மட்டுமே வாழ்வை முழுமையட செய்யும்…
தமது தேவையை மட்டும் பூர்த்தி செய்து கொண்டிருந்தால்… அந்த தேவையை பூர்த்தி செய்ய பயன்படும், திறமை உண்மையில் திறமை இல்லை…
அதாவது சுயனலம் கொண்டிருக்கும் அறிவு இருந்தும் பலன் இல்லை அது அழிவைத்தரும், பொதுநலன் கொண்ட அறிவு மட்டுமே வாழ்வைத்தரும்…
தம்மை தாண்டி தமது அறிவு நம்மை சுற்றி இருக்கும் அனைவருக்கும் பயன்படும் என்றால் அது தான் திறமை அந்த திறமை அனைவருக்கும் வேண்டும் அனைவரும் அதனை வளர்த்து கொள்ள வேண்டும்
நாளை என்பதனை நம்பி நம்பி இத்தனை நாளைகளை கழித்த நாம் நம்மால் அனைவரும் பலன் பெருவர் என்பதனையும் நம்புவோம் நாளை நிச்சயம் நமதாகும்…
தனக்கு உணவு கிடைத்தால் போதாது தன்னை சுற்றி இருக்கும் அனைவருக்கும் வேண்டும் என்ற எண்ணம் வந்த போது அங்கு உழைப்பு நிலை கொண்டது...
நம்மை நாம் யாரிடமும் நிரூபிக்க
போராட வேண்டாம்…
நம்முடைய வேலையில் திறமையின் வெளிப்பாடு நம்முடைய
திருப்திக்காக இருக்க வேண்டும், நீங்கள் செய்வது எந்த வேலையாக இருந்தாலும் அதன்
பால் நம் மனம் திருப்தியடைய வேண்டும் அதுவே வெற்றிக்கான பாதை மாத கூலி, தின கூலி, இல்லை
தொழில் என எதுவாக இருந்த போதும், நாம் வேலை செய்வது நமக்காக என்பது தான் உண்மை;
நான் இந்த நிறுவனத்திற்க்காக இப்படி
உழைத்தேன், அந்த
நிறுவனத்திற்க்காக அப்படி உழைத்தேன் என்று
பலர் கூற கேட்டிருக்கிறேன்; அப்படி அனைவரும் இலகுவாக கூறிவிடலாம்
ஆனால் உண்மையில் யாரும் யாருக்காகவும் உழைக்கவில்லை சுய தேவைக்காகவே இயங்குகிறோம் என்பதை
நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். நமக்கு கொடுக்கப்படும்
ஊதியத்தை தாண்டி நான் முழுமனதோடு பணியாற்றினேன் என்ற நிறைவுக்கு வரும் போது உனக்கான
உயற்வும் தானாக வரும்… அது முழுக்க முழுக்க அவரவர் தேடலை சார்ந்தது.
வெற்றி தோல்வி என்பதனை கடந்து எவன்
ஒருவன் அனுபவத்தை ரசிக்க துவங்குகிறானோ அப்போது அவன் முழு நிலையைடைகிறான்…
அதுவே வாழ்வின் மயம் அதுவே ஆக்கம்
அதன் பின் எடுக்கும் முடிவுகள் அவனை நிச்சயம் பொருள் சார்ந்து மட்டும் அல்லாது, பொது நலன் சார்ந்து நகர்த்தும்
என்பது தான் உண்மை;
அனுபவங்கள் நிச்சயம் அவனை புறம்போடும்
நன்கு அவனை பக்குவபடுத்தியிருக்கும்;
அவனுடைய நோக்கத்தை சீரமைக்கும் யாரிடமும்
தன்னையோ அல்லது தன் திறமையையோ நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருக்காது…
மனம் அடங்கி நிற்க்கும், தன்னை வழி நடத்தும் அனுபவத்தை
மதிக்க செய்யும், அனுபவங்களுக்கு காரணமான இயற்கையை போற்றச்செய்யும்;
எதுவும் தனது செயல் இல்லை என்ற நிதர்சனம்
புரியும்…
இதில் எதை யாரிடம் நிரூபிக்க ? வேண்டாம் அந்த தேவையும் இல்லை வராது....
எல்லாம் இன்பமயம்;
பிரபஞ்ச பேரொளொயின் கருணை துகளில்
இருந்து நான்;
பிரதீஸ்…
1 Comments
👍🏻
ReplyDeleteநன்றி