விஜய்

 சின்ன வயசுல இருந்தே நான் விஜய் ரசிகன் தான், நான் விஜய் படம் மட்டும் தான் பாத்துருக்கேன். தேட்டருக்கு போய் ரெண்டு மூணு படம் தான் பாத்துருப்பேன் அந்த படம் எல்லாம் விஜய் படம் தான் என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவர் முன் நின்றே திருநெல்வேலி சிறுவன் ஒருவன் கூறுகிறான். அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய்.

கடைசியாக எனக்கு ஒரே ஒரு ஆசை தான் அண்ணன் இப்போ என்கூட விசில் அடிக்கனும் னு ஆனா அண்ணன் எனக்கு விசில் அடிக்க வராதுன்னு சொல்லுறாரு சோகத்தில தம்பி நான் அடிக்கவா என்று கேட்டுக் கொண்டு அவர் விசில் அடித்து விட்டு சோகத்துடன் முகம் வாடிச் செல்கிறார். விஜயின் மனநிலை என்னவென்று மீம் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். 


அந்த சிறுவன் கூறியது எத்தனை ஆழமான பதிவு என்று பலர் புரிந்து கொள்ளவில்லை. அவன் ஒரு பதற்றத்தில் பேசினான் நண்பர்கள் உடன் பேசுவது போல விஜய் படம் என்று கூறிவிட்டானே தவிர அவன் கூறியது 

“நான் சிறு வயதில் இருந்தே விஜய் பேன் தான். தியேட்டருக்கு போய் ரெண்டு மூணு படம் தான் பார்த்திருப்பேன் அது அனைத்தும் விஜய் படம் தான்“ 

வீட்டில் டிவியில் மாத்திரம் படம் பார்க்கும் வசதி கொண்ட அவன் தியேட்டர் செல்ல கூட வசதியில்லாதவன் தியேட்டர் சென்று பார்த்த படம் மிகக் குறைவு அது அனைத்தும் விஜய் படம் என்பது ரசிகனாய் அவனுக்கு பெருமை தான். ஏனென்றால் கிராமங்களில் பள்ளி மாணவர்கள் தியேட்டர் உள் சென்றாலே அதனை பல நாட்கள் நண்பர்களிடம் கூறி மகிழும் நிலை தான் இன்றளவும். 

மற்றப் படி விஜய் அரசியல் வருகை பிடிக்காமல் பலர் பலதை ட்ரால் செய்யலாம்.

Post a Comment

1 Comments

  1. ஹரிதேவ் சி29 June 2024 at 13:18

    கட்டுரைக்கு நன்றி ☺️

    ReplyDelete

நன்றி