சேரமாதேவி கொழுந்துமலை முருகன் கோவில்


தென்காசியில் இருந்து சேரமாதேவி வழியாக பணகுடி செல்லும் வழியில் கொழுந்து மலை முருகன் கோவில் உள்ளதுமூலவர் முருகர் பால முருகனாக காட்சி தருகிரார் மிகவும் பழமையான கோவில்

பழைய கல் தூண்கள் மிகவும் பிரமாண்டமாக உள்ளது சன்னதியின் உள் நின்று கோவில் மேல் பார்க்கும் போது அந்த பிரமாண்ட கல் தூண்கள் கிடைமட்டமாக வைக்க பட்டிருப்பதை பார்க்கலாம்.
கோவிலை புகைபடம் எடுக்க முடியவில்லை இந்த இயற்கை எளில் மிகு காட்சிகள் கொழுந்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் வழியினில் எடுக்கப்பட்டது.


சுற்றிலும் மலை சூழ பிராமாண்ட பிரமிப்புக்கு நடுவே வீற்றிருக்கிறர் ஐயன்,

கோவில் பிரகாரத்தை வலம் வரும் போது முதலில் வினாயகர் சன்னதி உள்ளது அதன் பின் நாகர் சன்னதி அடுத்ததாக நேராக மூலவரின் பின் புறம் சீர் நேராக சித்தர் ஜீவசமாதி உள்ளது அங்கிருந்து சிறிது நேரம் தியானம் செய்து செல்லலாம்,

கோவிலில் திருமணமான தம்பதிகள் குடும்பமாக வந்து கோவிலில் கணவன் மனைவி இருவரும் வெளி பிரகாரத்தில் அமர்ந்து ஒருவருக்கொருவர் மாலை மாற்றி இறைவனை வணங்கி செல்கின்றனர்.

Post a Comment

1 Comments

நன்றி