அன்புள்ள மகளுக்கு Anbulla Magalukku

 


எனது தாத்தா உனது பூட்டன் தனது கும்பம் பசியாற பட்டினி கிடந்து உழைத்தார்..

எனது அம்மா உனது பாட்டி எங்களுக்காக உழைத்தாள் பட்டினி இல்லாமல் வளர்த்தால்..

நாங்கள் இன்று பணத்திற்காக ஆசைக்காக உழைக்கிறோம் உணவை மறந்தோம் !!

நாளைய உலகம் மீண்டும் உணவுக்காக போராடலாம் !

பஞ்சம் வரலாம் ஏதும் நிலையில்லை !!

நீ பணத்திற்காக ஓடாதே ஆசைக்காக வீழாதே வாழ்வை அதன் போக்கில் அதன் எதார்த்த்தொடு நகர்...

மரம் பூக்கும், காய்க்கும், கனிக்கும் பின் உதிர்த்தும் அவ்வளவு தான் மனித வாழ்வும் !!

உடல் சார்ந்த மாயைக்குள் சிக்குண்டால் மாண்டு விடுவோம்...

உயிர் சார்ந்த தெளிவிற்கு மரணம் இல்லை, மாய்க்கும் எண்ணமும் இராது இயற்கைக்கு...

புல், செடி, மரம், கொடியுடன் பேசும் ரகசியம் அறிந்துகொள் !!

எதிர் கால கணிப்பை ஓர் போதும் கைவிடாதே, அது உன்னை சார்ந்தோரை வழி நடத்தும்...

மனித பிறப்பு நாம் வாழ மட்டுமல்ல அனைவரையும் வாழ வைக்க...

நண்பர்கள் பலரை சேர்த்து கொள் அனைவரையும் நல்வழிப் படுத்து. 

உயிரோட்டத்தினை உணர்ந்து இரு உதவி செய் ஆனால் யாரிடமும் உதவி என்று கேட்காதே !!

இருப்பதை கொண்டு வாழப் பழகு, இயற்கையை காதல் செய்... 

பிறப்பின் சூட்சுமம் அறிந்து கொள் மனதின் சக்தியை விசாலப்படுத்து !

நிகழ்காலத்தில் நிலைத்திரு, இறந்த கால நினைப்பை விடு, எதிர்காலத்தை கவனி, கணிக்கவும் செய் !!

படைப்பை போற்று புதிய பரிணாமங்களில் உன்னரிவை செலுத்து...

இயற்கையின் மறுமங்களை ஆராய்ச்சி செய்யாதே, உணர முற்படு தினமும் ஒரு மணி நேரம் நிச்சயமாக தியானம் செய் !!

தினமும் கடற்கரைக்கு செல் அதன் விசித்திரத்தை உணர். பேரலைகளுக்கு இடையே அதன், அதன் அதீத சக்தி வெளிப்படுவதை கவனி !!

ஒரு நொடியில் உலகை சூளும் வல்லமை கொண்ட ஆழி பேரலைகள் காக்கும் பொறுமையை பார் !!

ஆர்பாட்டங்கள் எல்லாம் அடங்கி போகும் அதன் பிரமாண்டத்தில்.

அடிக்கடி மலைகளுக்குள் பிரசவி அதன் விலாசம் அறிந்துக் கொள்!!

வாழ்வின் முழு பகுதியையும் இயற்கையோடு இணைய முற்படு, பெருவெளியை பார்...

அதன் பேரமைதியை காண் ஆர்பாட்டம்மில்லாத, சலசலப்பு இல்லாத பெரும் சத்தம் இல்லாமல் பெரு வெடிப்பு நிகழ்ந்த மர்மம் விளங்கிக் கொள் !!

இரவின் இரகசியம் விளங்கும்... பெருவெளியின் பேரொளிக்குள் ஐக்கியமாகலாம்...

சூழ்நிலைகளை கைவசப் படுத்திக் கொள் !!

சித்தம் தெளிய நித்தம் பிராத்தனை செய், நான் உன்னுடன் இல்லா நாட்களிலும் உன்னால் என்னை காண முடியும்....

மானுட மாயை -யருத்து சித்தத்தில் நிலைத்து இரு..

சின்னஞ் சிறு அசைவிற்கும் அர்த்தம் விளங்கும் !!


பேரமைதிக்குள் நிலைத்து இரு !!



Post a Comment

1 Comments

நன்றி