Posts

Showing posts from May, 2021

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

தலைவன்

Image
அவனை அனைவரும் கோபகாரனாகவே கண்டிருந்தனர்,  அவன் இடம் நேர் நின்று பேச அனைவருக்கும் பயம் தான், வேலை நேரங்களில் மட்டும்  மற்ற வேளைகளில் அவனை போன்றொரு நகைச்சுவையாளன் கிடையாது ஏதாவது பேசி அல்லது யாரையாவது குறை கூரியாவது அனைவரையும் சிரிக்க வைத்து விடுவான், இல்லையென்றால் பேராபத்து தான் நிற்வாகத்திற்க்கு கோவத்தில் பேசும் போது அனைவருக்கும் உடலில் இரத்த அழுத்தம் ஏறும் வகையினில் அந்த வார்த்தைகளில் வேகம் இருக்கும், குடும்ப பிரச்சனைகளின் அழுத்தம் தாங்காது இருக்கும் எவரும் இங்கு பணி செய்தால் சில நாட்களில் வெடித்தி சிதறிடுவார்கள், அப்படி நடந்ததையும் பார்த்திருக்கிறோம், அனைவருக்கும் உதவி செய்யும் மனம், வேலை சரியாக நடக்க வேண்டும் என்ற எண்ணம் செயல் சரிதான், தொழிலில் பாவம் புண்ணியம் பார்க்க கூடாது என்று சொல்வார்கள் பெரியோர்கள்,  இருந்தும் ஓடி ஓடி காலம் நேரம் பார்க்காது உழைத்து வந்த ஒருவனுக்கு இந்த கேள்விகளின் ஆழம் எறிச்சலையும் வெறுப்பையும் அதிகரிக்க தான் செய்யும், அதே நேரம் பாராட்டுதலுக்கும் பஞ்சம் இல்லை அனைவரிடமும் ஒவ்வொரு பொருப்பை கொடுத்து தனி தனியே நிற்ணயிப்பது சிறப்பு அதில் என்னவென்றால் ஒர

பொன்னிற மேகங்கள்

Image
இயற்கை தரும் காட்சிகளும் அதனால் மனம் அடையும் திருப்தியையும் யாரொருவராலும் கொடுத்திடல் இயலாது, தினம் தினம் வேலை பழுவாலும், குடும்ப நிகழ்வாலும் வேதனையுரும் மனித மனத்திற்க்கு எங்கே நிம்மதி பெருமூச்சி கிடைக்கின்றது? கோவிலாகட்டும் அல்லது குழந்தைகளுடன் செலவிடும் நேரம் தவிர்த்து சிறு நண்பர்கள் உடனான மகிழ்ச்சி சில நேரம் நண்பர்கள் கூட்டத்திலும்  ஏற்படும் கருத்து வேறுப்பாடுகள் என ஏதோ ஒரு வகையில் மனம் சலிப்புற்று கொண்டு தான் இருக்கின்றது இவ்வளவு மன அழுத்தங்களுக்கு மத்தியில் இந்த இயற்கையின் சில அற்புத காட்சிகள் நம்மை மெய்மறந்து அதன் போக்கிலேயே இழுத்து செல்கின்றன  அப்படி தான் அந்த மாலை பொழுது பணி முடிந்து மனம் ஏதோ ஆழ்ந்த யோசனையில் இருக்க நிகழ்வது அறியாது ஏதோ நினைவுகளுடன் சென்று கொண்டிருந்த போது தான் கண்களுக்கு இதமாக... மனதிற்க்கு புத்துணர்ச்சி தர கூடிய அந்த மேக கூட்டங்கள் மாலை மங்கும் அந்த வேளை சூரியனின் பொன்னிற ஒளி  மேகங்களை தன்வசம் ஈர்த்து ஒட்டு மொத்த மேக கூட்டங்களையும் தன் பொன்னிற ஒளியினால் நனைய வைத்திருந்தது.. அதனை பார்த்து, பார்த்து மனம் ஒரு விசாலம் அடைகிறது.. என்னை அறியாது அதன் போக்கிலே நானும

அன்று அவள்

Image
வழக்கம் போல் அன்று அவன் காலை எழுந்து வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று  அந்த காலை நேர இயற்கையை சிறிது இரசித்து விட்டு உடற்பயிற்சி செய்ய துவங்கும் முன்  எதிர் வீட்டு மாடியில் இருந்து குட் மானிங் என்று ஒரு சத்தம்  சிறிது கூர்ந்து கவனித்த பிறகு தான் குட்டி குழந்தை பக்கத்து வீட்டு ஆண்டியின் மகள் புவி தண்ணீர் டேங் அருகினில் தென்பட்டாள் பாவம் குழந்தை சிறு வயதிலேயே தீவிர உடற்பயிற்சி பெற்றோர் கட்டாயத்தால், அவன் அந்த குழந்தைக்கு பதிலுக்கு ஒரு புன்னகையுடன் குட் மானிங் புவி..... என்று கலாய்த்த படி கூறி கொண்டு பயிற்சியை தொடர்ந்தான் சிறிது நேரத்திலேயே கீழிருந்து சத்தம் என்னங்க ஆபீஸ்க்கு டைம் ஆகுது சீக்கிரம் வாங்க என அவனது மனைவி அவனை அழைக்க அவனது மனைவியின் குரல் காதில் விழுந்ததும் தான் அவனுக்கு நினைவு வருகிறது ஆபீஸ்க்கு நேரம் ஆகிரது என்பதல்ல, அவனுக்கு திருமணம் ஆகிவிட்டது என்று.. அதை நினைத்து புன்னகைத்த படியே கீழே சென்றான்  கீழே சென்று பார்த்தால் மனைவி சமையல் அறையினில் நல்ல மணம் வீச சமைத்து கொண்டிருக்கின்றாள்  என்ன இன்று சமையல் கலை கட்டுகிறது என்று மனதில் நினைத்த படியே சமயலைறை நோக்கி சென்றா

சிவ பெருமான் தந்த தரிசனம்

Image
அன்று அதிகாலை 3.20 மணி அளவில் நானும் எனது நன்பனும் தேனி அரன்மனைபுதூரை அடைந்தோம்,  பழுது ஏற்பட்டு நின்று கொண்டிருந்த காற்றாலை ஒன்றை சரி செய்ய அதற்க்கு முந்தைய நாள் இரவு ஏழு மணி அளவில் கண்டமனூர் சென்ற நாங்கள் பணியை முடித்து விட்டு அரண்மனைபுதூர் வரும் போது அதிகாலை மூன்று மணி இருக்கும்.  அந்த மேற்க்கு கரையோரம் மலைமுகடுகளுக்கு மேல் மேக கூட்டங்கள் ஏதும் இன்றி இருள் சூழ்ந்து அந்த இருளின் நடுவினில் வளர்பிறை நிலவின் ஒளி எங்களை மெய் மறந்து நாங்கள் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே இறங்கி அந்த காண கிடைக்காத இரவுகளின் இரகசிய இரசனைகளின் முக்கியமான அந்த பொன்னிர ஒளியை கண் இமைக்காது பார்த்திருந்தோம், சொல்ல மறந்து விட்டேன் வெரும் நிலவொளி மட்டுமல்ல காற்றினால் நிலவோடு இணைந்த மேகம் ஒன்று இறைவா என்னவென்று வர்ணிப்பது கண்ட காட்சியை நீங்களே பாருங்கள். இந்த இயற்கை மீதும், இறைவன் மீதும் எனக்கு தீராத காதல் உண்டு என் உள்ளும் புறமும் அவன் நிறைந்திருப்பதை கனம் கனம் உணர்பவன் நான் அவன் என் புற கண்களுக்கு கொடுத்த இந்த மாபெரும் காட்சியை எங்கனே கடந்து வருவது, மேகங்கள் நெற்றியில் பூசிய வீபூ

தத்துவ கவிதைகள்

*_கற்று கொள்_* கற்று கொள்ள தயாராக இரு காற்றும் கற்று தரும், பறப்பது எப்படி என்று அல்ல.  தென்றல் வீசும் ரகசியத்தை!! விழிப்போடு  இரு எப்பொழுதும் இயற்கையின் பல மர்மங்கள் புலபடும் !! காத்திரு பல கேள்விகளோடு காலம் பதில் சொல்லும் அதன் உன்னதத்தையும் விசித்திரத்தையும்!! அமைதியாக இரு ஆர்பரிக்கும் அலையும் அடங்கித்தான் போகும் உன் பேரமைதியில்!! *_உறவுகள்_* உறவுகள் போர் வாள் போல நம்மிடம் இருக்கும் வரை மட்டுமே நமக்கு சாதகமா செயல்படும்!! உணர்வுகள் வெட்டுண்ட காயத்தில் விழுந்த தீ பிழம்பு போல நினைத்தாலே நெஞ்சு பதை பதைக்கும்!! *_காலம்_* நோயற்றவன், நோயுற்றவனுக்கு போதனை வளங்குகிறான் இன்று, நாளை? வாழ்கை ஒரு வட்டமல்லவா !! மருத்துவன் வைத்தியம் பார்கிறான், மருத்துவனை அறிந்தவன் ஆலோசனை வளங்குகிறான்!! ஆன்மீகமும் அப்படியே நீ இறைவனை உணரும் வரை போதனைகளுக்குள் புதைந்திருப்பாய்!! *_குணம்_* குரங்கின் குணம் இது தான் என்று அனைவருக்கும் தெறியும், என்றோ ஒரு முறை பார்பவன் ஆனந்தமடைகின்றான், தினமும் பார்பவன் எரிச்சல் அடைகின்றான். ஆனால் குரங்கு ஒரு போதும் அதன் குணத்தை யாருக்காவும் மாற்றியது இல்லை, அதன் போக்கிலேயே துள்ளி குதித்

இது தான் காதலோ ❤️

தாழம்பூ வாசனைக்கு  முத்து குயில் பாட்டிசைக்க!! தென்னங் கன்றை ஆட வைக்கும் தென்றலே!! கண்கள் இங்கு எதையும் காண மறுக்குதே!! மனமோ இன்று மரம் போல் நின்று  கொல்லுதே!!  இது தான் காதலோ என சொல்லாமல் சொல்லுதோ!!

என்று அருபடுமோ உறவெனும் ஊஞ்சல் கயிறு?

நிஜம் என்று தான் நினைத்து இருந்தேன் நித்தமும் உன் சேவை கண்டு!! நிழல் தான் நான் என்று ஊர்ஜிதப்படுத்தினாய் உன் பிரிவை எனக்கு தந்து!! கடல் என்று தான் ரசித்து இருந்தேன்  பெரும் பிரளயமாகி  மூழ்கடித்தாய்!! புல்வெளி தான் என்று கிடந்துருண்டேன் பூகம்பமாய் விழுங்கி விட்டயாய்!! சுவாசத்தின் நேசத்தில் தனித்திருந்தேன் வேசம் என்றாகி விலக்கி விட்டயாய்!! வெறுப்பினில் வெம்பி தவித்திருந்தேன் பொருபெனும் வேட்கை தந்து மறைந்தாய்!! பொருப்பினை ஏற்க மறுத்தேன் உறவுகள் என்னும் ஊஞ்சல் தந்தாய்!! ஆடிட மறுத்தேன்!!  ஆட வைத்தாய்!! ஆடி கொண்டு இருக்கின்றேன்!! என்று அருபடுமோ உறவெனும் ஊஞ்சல் கயிரு!!?

சுயநல பூமி

செட்டியாரு அவரோட தோப்ப சுத்தி பாக்குராரு பலவருடம் நெல் விவசாயம் நடந்த இடம் விளைச்சல் குறைவு விலைவாசி இல்லாததுனால் தென்னையை கொண்டு நட்டாங்க தேங்காய் வியாபாரம் கொடி கட்டி பரந்துச்சி இங்க நிக்கிர தென்னுங்களுக்கு எல்லாம் குறைந்தது 40 வயது இருக்கும் இப்போம் கொஞ்சம் வருடமா தென்னைக்கு ஊடுபயிரா வாழை போடுராங்க எல்லாம் நேந்திர பழ வாழை இங்க இருந்து எல்லாம் கேரளாக்கு வியாபாரத்துக்கு போகுது நல்லா லாபம் தந்த தொழில் தா புயல் ல நிறைய சேதாராம் ஆச்சிது அப்புறம் இந்த கொரோனா னால வியாபாரம் எல்லாம் முடிங்கி போச்சி  எல்லாம் சாதாரண விசியம் இல்ல விவசாயிக்கு தான் அதோட கஷ்டம் தெறியும்... செட்டியார ஊருல இருந்து ஒரு பயன் போய் பாக்குறான்  பையன்;  ஐயா வணக்கம் செட்டியாரு : வணக்கம் தம்பி வாங்க நீங்க... பையான் ; ஐயா நான் செல்லகண்ணு பயன்  செட்டியார் ; அவரோட பயனா நீ அதான  எங்கயோ பாத்த மாதிரி ஞாபகம் அப்பா எப்படி இருக்காரு? பையன் ; அவருக்கு முன்னால மாதிரி உடம்பு முடியல  செட்டியாரு : என்ன என்ன ஆச்சி பையான் ; ஐயா உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்  நீங்க விவசாயம் பண்ணுரிங்க ஊருல 70% சொத்து உங்களோடது தான் இங்க மட்டும் இல்ல நிறைய ஊருல

வாழ்கை

Image

தேடுதல்

Image

பேரமைதி

பேசிய வார்த்தைக்குள் பொக்கிஷத்தை வைத்தவன்!! நேசித்த உறவுகளுக்கு வரங்களை கொடுத்தவன்!! யாசித்த ஒன்றினை பெற தனிமை எனும் பேரமைதியில் உறைகின்றான்!! 

நட்பு

நட்பு நலம் கொண்டதல்ல அது உணர்வு கொண்டது  இங்கு தேவை நிறைவேற்றுவது நட்பல்ல, நண்பனின் தேவைக்காக தன்னையே அற்பணிப்பது தான் நட்பு.

மூச்சடக்கி முத்தமிட்டு

Image
வரிகளின் உரிமையாளர் பெயர் தெரியவில்லை 😐யாராக இருந்தாலும் 🔥🔥🔥❤️❤️❤️❤️💐💐💐பாராட்டுக்கள் மூச்சடக்கி முத்தமிட்டு மார்பை கசக்கி  எச்சில் பட்டு ஊடல் பிடியில் தொப்புள் தொட்டு உசுப்பும் கடியில் முனகல் இட்டு யோனி நுழைத்து இன்பம் கொண்டு கசியும் திரவம் பிசிறியடித்து நீட்டி நிமிர்ந்து அயர்ந்து உறங்கினால் முடிந்து போகும் ஆணின் மோகம் ஆனால்.. உன் உணர்வு கடியில் உதடு வலித்து முரட்டு பிடியில் மார்பு வலித்து உருட்டும் அசைவில் வயிறு வலித்து சொருகும் அதிர்வில் கருப்பை வலித்து சுமக்கும் கனத்தில் உடல் வலித்து  உணரும் வலியை  வெளியே சொல்லாமல் வேண்டும் நேரமெல்லாம் உடல்பசிக்கு விருந்தாகி புணரும் சலுகையாக பிள்ளை வலியும் பெறுக்கிறாளே அவளுக்காக என்ன  செய்ய இயலும் உன்னால்.. வேறொன்றும் செய்யாதே பெண்ணும் உயிரென்று மதி.. உயிர் கொண்டு நேசி...... உள்ளார்ந்து யாசி... பெண்மையை கையாளும் மென்மை உனக்கே புரிந்துவிடும் பெண் என்பவள் பூவானவள் அதை கசக்கி எறிந்து விடாதே அதை நுகர்ந்துவிட்டு அரவணைத்துக்கொள் தேவதையாக இருப்பாள் அவள் உன் மனதில்!!!

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *