Posts

Showing posts from June, 2024

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

கள்ளச் சாராயம்

Image
 மனித இறப்புகள் தடுக்க முடியாதவை என்ற போதும், இறப்பு நிகழும் சூழல் என்ன என்பதைப் பொறுத்து அதன் விகிதத்தை மாற்றலாமே தவிற வேறு ஏதும் செய்துவிட முடியுமா என்றால் இல்லை. பிறந்த ஒவ்வொரு உயிரும் மரணம் நோக்கிய காலத்தையே வாழ்ந்துக் கொண்டு இருக்கின்றன. இந்த மரணம் வந்து சேர்வது இயற்கை யாக இருப்பினும் சோகம் தான். செயற்கையாக இருப்பினும் சோகம் தான். சோகம் இல்லாத மரணம் என்பதை நான் இவ்வுலகில் இதுவரை பார்த்தது இல்லை. நன்றாக வாழ்ந்து ஆண்டு அனுபவித்து இறந்தவர்களுக்கு கூட ஆடி பாடி அடக்கம் செய்யும் முன் சில துளி கண்ணீர் செலுத்தாமல் இல்லை. அவர்கள் நம்முடன் வாழ்ந்த நாட்கள் தான் நினைவில் வந்து செல்லும். ஆனால் போக்குவரத்து விபத்து தவிர்க்க கூடியது, இப்படி வேலை செய்யும் இடங்களில் ஏற்படும் விபத்துகள் அனைத்திற்கும் அது ஏற்படும் அல்லது ஏற்பட உள்ள வாய்ப்புகளைப் ஆய்ந்து அறிந்து அவற்றிற்கு ஏற்ற வாறு சட்டங்களை வகுத்துள்ளனர். கடுமையான சட்டங்கள் தான் மனிதர்களை வழிப் படுத்துகிறது.  அப்படி உயிர்கள் மரணிக்கும் விகிதங்களை கூறு போடும் அரசு இந்த “கள்ளச் சாராயம்” என்பதை கண்டுக் கொள்ளாமல் விட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது.

விஜய்

Image
 சின்ன வயசுல இருந்தே நான் விஜய் ரசிகன் தான், நான் விஜய் படம் மட்டும் தான் பாத்துருக்கேன். தேட்டருக்கு போய் ரெண்டு மூணு படம் தான் பாத்துருப்பேன் அந்த படம் எல்லாம் விஜய் படம் தான் என்று கொஞ்சம் கூட மரியாதை இல்லாமல் அவர் முன் நின்றே திருநெல்வேலி சிறுவன் ஒருவன் கூறுகிறான். அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார் விஜய். கடைசியாக எனக்கு ஒரே ஒரு ஆசை தான் அண்ணன் இப்போ என்கூட விசில் அடிக்கனும் னு ஆனா அண்ணன் எனக்கு விசில் அடிக்க வராதுன்னு சொல்லுறாரு சோகத்தில தம்பி நான் அடிக்கவா என்று கேட்டுக் கொண்டு அவர் விசில் அடித்து விட்டு சோகத்துடன் முகம் வாடிச் செல்கிறார். விஜயின் மனநிலை என்னவென்று மீம் போட்டு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள்.  அந்த சிறுவன் கூறியது எத்தனை ஆழமான பதிவு என்று பலர் புரிந்து கொள்ளவில்லை. அவன் ஒரு பதற்றத்தில் பேசினான் நண்பர்கள் உடன் பேசுவது போல விஜய் படம் என்று கூறிவிட்டானே தவிர அவன் கூறியது  “நான் சிறு வயதில் இருந்தே விஜய் பேன் தான். தியேட்டருக்கு போய் ரெண்டு மூணு படம் தான் பார்த்திருப்பேன் அது அனைத்தும் விஜய் படம் தான்“  வீட்டில் டிவியில் மாத்திரம் படம் பார்க்கும் வசதி கொண்ட அவ

ஏண்டா Porn Addict ன்னா என்ன” ?

Image
“ ஏண்டா Porn Addict ன்னா என்ன” ? “ஹேய்… என்னடி ஆச்சி உனக்கு” ?எதுக்கு கேக்குற? அவள்; சொல்லுடா சும்மா தெரிஞ்சிக்கலாம்னு தான். அவன்; சரி மாமன் மகளாச்சேன்னு சொல்லுறேன்..! அவள்; சொல்லு…சொல்லு…. அவன்; அது ஆபாச படங்கள் இருக்குதுல, தெரியுமா ? அவள்; ஆமா தெரியும் சொல்லு… அவன்; உனக்கு எப்படி தெரியும்? அவள்; எப்படியோ தெரியும்டா சொல்லு..! அவன்; அந்த படம் பாத்து பாத்து அப்படியே அதுக்கு பழக்கம் ஆகிருவாங்க. அப்புறம் அவங்களால அந்த படம் பாக்காம இருக்க முடியாதாம், அது தான் போர்ன் அடிக்டுன்னு சொல்லுவாங்க ect…ect…. அவள்; ஓ… ஏன் அப்படி ஆகுது ? ஏன் பாக்குறாங்க அத ? அவன்; 😂😂😂 நல்லா கேட்ட டி, அதுலாம் எனக்கு தெரியல டேய். சரி நீ ஏன் இப்போ இத பத்திக் கேக்குற ? அவள்; அதுவா…! அது வந்து கூட படிக்கிற பொண்ணுங்க எல்லாம் இத பத்தி யே பேசுறாங்க ஆனா எனக்கு இத பத்தி அவங்க கிட்ட பேச ஒரு மாதிரி இருக்கு. அவங்க அந்த படம்மெல்லாம் காட்டுறாங்க ஆனா எனக்கு எந்த பீலிங்கும் இல்ல ஏன்? அவன்; அது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் உணர்வு சம்பத பட்ட விஷயம். நீ அவங்க கூட சேர்ந்து இது எல்லாம் பார்க்காத டி. ஒழுங்க படி  அவ

எதிர்காலம்: நம் உலகத்தின் புதிய பாதை

Image
எதிர்காலம்: நம் உலகத்தின் புதிய பாதை உலகம் மிக வேகமாக மாறிவருகிறது. நம் முன்னேற்றத்திற்கும் நம் மரபுகளுக்கும் இடையே புதிய சமநிலைகளை அடைய உலகம் போராடிக்கொண்டிருக்கிறது. எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை பற்றி எண்ணிக்கொண்டே இருக்கும்போது, நம்மை ஆழமாகச் சிந்திக்கவைக்கும் பல முக்கியமான அம்சங்கள் உள்ளன. அவற்றை பற்றி நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். #### தொழில்நுட்பம் மற்றும் மனித சமூகங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் நம் வாழ்க்கையின் அனைத்துப் பகுதிகளையும் மாற்றியமைக்கின்றன.  - **அறிவியல் வளர்ச்சி:** செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயந்திர கற்றல் (Machine Learning) துறைகளில் புதிய சாதனைகள் மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாறுவதற்கான முனையங்களை உருவாக்குகின்றன. நம் வேலைப்பாடுகள், தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வாழ்க்கைகளில் அவற்றின் தாக்கத்தை உணரலாம். - **ஆரோக்கியம்:** மருத்துவ அறிவியல் துறையில் புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்நாளைக் குறைவதோடு, பல புதிய நோய்களுக்கும் தீர்வுகள் வழங்குகின்றன. #### சூழலியல் மாற்றங்கள் மற்றும் அ

சுயமுன்னேற்றம் மற்றும் அதனை அடைய சிறந்த வழிகள்

Image
  சுயமுன்னேற்றம் மற்றும் அதனை அடைய சிறந்த வழிகள் உலகம் மிகவும் வேகமாக மாறிக்கொண்டு இருக்கிறது. இந்த வேகத்துக்கு ஏற்ப நாமும் மாற வேண்டும், இல்லை என்றால் பின்தங்கி விடுவோம். அதனால் தான் சுயமுன்னேற்றம் என்ற கருத்து இன்றைய காலகட்டத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது. சுயமுன்னேற்றம் என்பது நமது வாழ்க்கையில் உயர்வையும் முன்னேற்றத்தையும் அடைவதற்கான முயற்சியாகும். இந்த முயற்சிகளை வெற்றிகரமாக செயல்படுத்த சில முக்கியமான வழிகள் உண்டு. இங்கு சில முக்கியமான முறைகள் மற்றும் அதற்கான பயிற்சிகள் பற்றிப் பார்க்கலாம். 1. நோக்குகளை அமைத்துக் கொள்ளுதல் சுயமுன்னேற்றத்தின் முதன்மையான படி, தக்க நோக்குகளை அமைத்துக் கொள்வதாகும்.  **குறுகிய கால நோக்குகள்:**  அடுத்த ஒரு மாதம் அல்லது ஆறு மாதங்களில் நீங்கள் அடைய விரும்பும் நோக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். **நீண்டகால நோக்குகள்:**  அடுத்த ஒரு வருடம் அல்லது ஐந்து வருடங்களில் நீங்கள் அடைய விரும்பும் முக்கியமான இலக்குகளை திட்டமிடுங்கள். 2. நேரம் மேலாண்மை நேரத்தை பொருத்து அதன் மதிப்பை உணர்ந்தால், வெற்றி நிச்சயம். நேரம் மேலாண்மை நம்மை நம் நோக்குகளுக்குச் செல்விக்

அன்னப்பூரணி

Image
 வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல கேப் புக் பண்ணினேன் அன்று நண்பி கார் கொண்டு வர்க்கத்துனால. கேப் டிரைவர் ஏதோ படம் போட்டு பார்த்துக் கொண்டு வந்திருந்தார். நாங்கள் உள்நுழையவும் பாஸ் செய்து விட்டு இருந்தார். கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் பயணம் அவர் அந்த படத்தை மறுபடியும் பிளே செய்வார் என்று காத்திருந்தேன் ஏனென்றால் நயன் மற்றும் ஜெய் அந்த சீனில் நின்று கொண்டு இருந்தனர் படம் பெயர் எனக்கு தெரியவில்லை. ஆனால் ராஜா ராணி இல்லையென்று விளங்கியது பொறுமையை இழந்த எனது நண்பன் அண்ணா படத்த ஓட்டி விடுங்க என்றான் அவர் லேசான புன்னகையுடன் படத்தை பிளே செய்தார். நயனுக்கு திருமணம் ஜெய் நயனின் நண்பன் நயன் விரும்பிய செப் ஆக அவளை வலுகட்டாயமாக சென்னை அனுப்புகிறேன் என்கிறார். ஆனால் அப்பா சம்மதம் வேண்டுமென்றார் நயன். இதற்க்கு ஊடே பெண்ணை அழைத்து வாருங்கள் என்று ஐயர் கூற அவளின் பாட்டி மேல வருகிறார். அப்போது ஜெய்யும், நயனும் நிற்பதை பார்த்து எந்த வித அதிர்ச்சியும் இல்லாமல் நின்று கொண்டிருந்தார். நயனின் நடிப்பு கொஞ்சம் சிறுபிள்ளை கெஞ்சல் போல தெரியவில்லை அந்த காட்சிக்கு நயனின் நடிப்பு ரியாலிட்டியாக இல்லாமல் இருந்தது. அத

காமம் வயதின் கோளாறாக இருந்து விட்டு போகட்டும், காதலும் அப்படியா ?

Image
 காமம் வயதின் கோளாறாக இருந்து விட்டு போகட்டும், காதலும் அப்படியா ? ஆம், காதல் காமத்தின் முகமூடி. ஆரம்பத்தில் அது முகமூடி என்று அறியதெரியாது. சில ஊடலுக்குப் பின்னான விலகல்கள், வார்த்தைகள் என ஏற்படும் மாற்றம் தான் அதன் திறவு கோல். அதையும் கடந்து பயணிக்கத் தொடங்கியப் பின் தான் காதல் முகமூடியாக அல்லாமல் உண்மை முகமாக பிரகாசிக்கும். சிலருக்கு முகமூடியாகவே வாழ்கை முடிந்து விடும். இதனை யார், யார் புரிந்து கொள்வார்கள் என்பது அவரவர் புரிதல்களைப் பொறுத்தது. வேறுபாடுகள் தான் மனித மனதின் பரிணாமம் என்பதினால் இதில் அனைவருக்கு ஒத்துப் போகும் கருத்துக்கள் என்று எதனையும் கூறிவிட முடியாதல்லவா!  சகட்டு மேனிக்கு வாழும் இனமாக மனித இனம் தனக்குள் எந்த கட்டுபாடுகளும் இன்று வாழத் துவங்கியதே காதல் காமம் என்ற மொத்த குளறுபடிகளுக்கும் காரணம் என்றிடலாம். ஆண் பெண் காதல் மாறி தற்போது எத்தனையோ காதலர்கள் இனத்திற்குள்ளேயே முளைத்து உள்ளனர்.  இதனை எண்ணிப் பார்க்கையில் மனிதர்களுக்கு எல்லையில்லை பரிணாம வளர்ச்சி என்பது முற்றிலும் உண்மை தான் என்பதனை விளங்கிக் கொள்ள முடிகிறது.  இயற்கைக்கு அதன் பரிணாமத்தை நிறுத்த முயலவில்லை. எ

குழுவன்

Image
  ஒரு இனத்தின் பெயர் பின்னாளில் சாதிகள் என்று பிரிக்கப் படுகிறது. அப்படி நான் சிறுவயதில் கேள்விப் பட்ட ஒரு இனம் இந்த குழுவ இனம்.  இவர்களை தனியாக வரையறுக்க வேண்டுமென்றால் இவர்கள் தினமும் குளிப்பது இல்லை, குளத்து மீன், ஆமை, பாம்பு இவைகள் இவர்களுடைய பெரும்பாலான உணவு பழக்கம். பாம்புகளின் நெய் இவர்களிடம் எப்போதும் இருக்கும் என்பார்கள். இதனை கடந்து தொழில் அந்த காலத்தில் மிதிவண்டியில் ஐஸ் விற்க செல்வதும். திருமண வீடுகளில் எச்சி இலைகளை அப்புறப் படுத்துவதும் மேசையை துடைப்பதும் போன்ற வேலைகளை செய்தார்கள்.  ஆற்றங்கரையில் பட்டா இல்லா நிலத்தில் தங்கள் குடிசைகளை அமைத்து இருந்தனர். அவர்கள் குடியிருந்த ஆற்றங்கரை கடந்ததும் ஒரு நடுநிலைப் பள்ளி இருந்தது. அதில் தான் அவர்கள் பிள்ளைகளை ஆசிரியரின் கட்டாயத்தின் பேரில் பள்ளிக்கு அனுப்பினார்கள். அங்கு தான் நானும் படித்தேன் என்னுடன் இருவர் பயின்றனர் இருவரும் எனக்கு நண்பர்கள் தான். பள்ளிக்கு அணிந்து வரும் சீருடை அவர்கள் துவைத்து உடுத்துவது மிகவும் குறைவு ஆனால் அவர்களிடமிருந்து வியர்வை நாற்றமோ வேறு ஏதேனும் அசவுகரியமாக தோன்றியது இல்லை. ஆனால் சில வேலைகளில் கொஞ்சம் பய

கடலும் நானும்

Image
  ஆழமான கடல் பகுதி செல்ல நெடு நாள் ஆசை, கம்பீரமாக மூச்சடக்கி பெரும் தவம் ஏற்றிட வேண்டும். சுப்பு காண்பதெல்லாம் கனவு மாத்திரமே அவனால் எதனையும் எளிதினில் செயல் வடிவம் கொடுத்து விட முடிவதில்லை. இத்தகைய கனவுகள் போல அவன் பல அடுக்குகள் அடுக்கிக் கொண்டிருப்பான். ஏதாவது ஒன்றில் அவன் லயிக்க வேண்டும் என்பது தான் அவனது ஆசையும். அப்படியே அவன் கரப்பனையில் கூட மூழ்கி முத்தெடுக்கும் வரை பொறுமையில்லாதவன். எண்ணியவை எண்ணிய மாத்திரம் நடக்க வேண்டுமென்ற எண்ணம் தான். காலம் காக்கும் பொறுமை மனித மனம் அணுகுவதில்லை. அப்படி காலத்தின் பொறுமையோடு பயணிக்க முயன்றால் மனித ஜல மனம் அங்கும் இங்கும் ஆடாது காத்திருக்கப் பழகிக் கொள்ளும்.  சுப்புவின் கனவு எல்லாம் ஏதோ வந்து போவதாக இல்லை அவனின் உள்ளுணர்வு திரும்ப திரும்ப கனவுகளின் காட்சிகளை ஓட்டிக் கொண்டே இருக்கும். யாரிடமும் விளக்கம் பெற அவனுக்கு விருப்பம் இல்லை. சுப்புவிற்கு இத்தனை நாட்கள் வந்த கனவுகள் எப்படியோ நினைவில் இருந்து அகன்று போயிருந்தாலும், அவனால் மறக்க முடியாமல் இன்றளவும் ஓடிக் கொண்டு இருந்தது கடலின் ஆழப் பகுதியில் அவன் அமர்ந்திருப்பது போன்ற கனவு தான். கனவுகள் கா

Vazlakku 2022 Malayalam movie

Image
 வழக்கு என்ற மலையாள படம் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் 3.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த படம் பலரால் விமர்சையாக பாராட்டப் பட்டது. ஒரு சினிமா தனிப்பட்ட ஒரு மனிதனின் வாழ்வியலை பாதிக்கும் படியான முறையில் அமையும் போது அது அனைவராலும் ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் பல லட்சம் செலவு செய்து வெளி வந்து ஓடாமல் செல்லும் படங்களுக்கு மத்தியில். நல்ல கதைத் தேர்வுடன் குறைந்த செலவில் எடுக்கப் படும் படங்கள் அதிகம் வெற்றிப் பெறுவது மழையால சினிமா தான். இந்த வழக்கு என்ற படத்தை டிவின் தாமஸ் புரொடியூஸ் செய்துள்ளார். மற்றும் அவரே நடைத்துள்ளார். இந்த படம் மொத்தம் ஒன்றரை மணி நேரம் தான் அதில் தேவையில்லாத கட்சிகள் என்று படத்தின் நீளத்தை அதிகம் செய்ய பல நீளமான காட்சிகள் பதிவு செய்துள்ளனர். இது ஒரு இயல்பான சினிமாவாக எடுத்திருந்தால் அதனை முப்பது நிமிட குறும்படமாக முடித்திருக்க வேண்டியது. முதல் இருபது நிமிடங்கள் கிராபிக்ஸ் பார்க்க அருமையாக இருந்தாலும் காரணமில்லாமல் நேரக்தைக் கடத்திக் கொண்டிருந்தது. தனியாக உடைக்கப் பட்ட பாறைகளை காட்டும் போதும் அந்த கேமரா வியூகம் செல்லும் வேகத்திற்கு ஏற்ற பின்னணி இசை என்றாலும் அந்

விவாகரத்து

Image
 கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்பதெல்லாம் இன்றைய காலத்தில் வெறும் வாய் வார்த்தைகள் தான். ஆனால் அன்றைய காலங்களில் பெண்களை வளர்க்கும் போதே நாளை போக போற வீட்டில இப்படி மகாராணி மாதிரி எல்லாம் இருக்க முடியாது எல்லா வேலையும் நீ தான் பார்க்கணும் இப்பவே ஒழுங்கா கத்துக்க அப்படி தான் அம்மா திட்டி திட்டி வளர்த்தாள். பெண் வாழ்வில் என்ன படித்து தெரிந்திருக்க வேண்டுமென்றால் சமையல் தான். ஆனால் இன்றைய காலம் எத்தனையோ மாறியுள்ளது. ஆண்கள் செய்யும் தொழில் முதல் அவர்கள் அடிமட்டத்தில் செய்யும் சுமை தூக்கும் பணி கூட பெண்கள் செய்கிறார்கள்.  இது அவர்களுக்கு சவாலானா செயலா என்றால் இல்லை. அவர்களால் இதை மிஞ்சி பயணிக்க முடியும் என்று அறிந்த ஆண்கள் அன்றைய காலத்திலேயே அவர்களை அடிமைகளாகவும், ஒரு ஆபாச கண்காட்சிகளாகும், சிற்றின்ப போதை வஸ்துக்களாகவும் தங்கள் தேவைக்கு அவர்களை மாற்றி வைத்துக் கொண்டனர். அவளுக்கு இன்றளவும் முழு சுகந்திரம் கொடுக்கப் படவில்லை. நாம் மீடியாவில் பார்ப்பது தான் உலகம் என்று நம்பிக் கொண்டு இருக்கிறோம். ஆனால் உண்மை என்னவோ அதுவல்ல.  நாம் மீடியாவில் பார்க்கும் பெண்களும் கூட பல போராட்டம் கடந்

பணம், பதவி எல்லாம் !

Image
அரவிந்திற்கு வயது பதின்மூன்று இருக்கும். யாரும் அறிவுரை கூறாமலே அவனாகவே அவனது வீட்டு அருகில் உள்ள கோவில் வளாகத்தில் நடைபெறும் சிலம்பம் பயறிச்சியில் சேர்ந்தான். குருவை மிஞ்சிய சிசியன் என்பது போல சிலம்பத்தில் வேகமாக தேர்ந்தான் ஓராண்டு முடுவு பெற அவன் சிலம்பத்தில் அசாத்திய வேகம் கொண்டு ஊடுருவும் கட்டைகளை துவம்சம் செய்யும் அளவு அசாத்தியா சிலம்ப விளையாட்டு வீரனான். சிலம்பம் ஆசிரியர் அவனை கண்டு பெருமைக் கொண்டார் அவனால் பல ஊர் மாணவர்கள் இங்கு வந்து சிலம்பம் கற்க ஆர்வம் கொண்டனர்.  மாணவன் எவ்வளவு சாமர்த்தியவானாக இருந்தாலும் பெருமை என்னவோ குருவிற்கு தானே. குருவின் வளர்ப்பு தானே! அதனை யாரும் மறுக்க முடியாது என்றாலும், ஒவ்வொரு தனித் தனி மாணவனும் அவனது தனித் திறமைக்கு ஏற்றார் போல யுக்திகளை கையாள பழக்கப் படுவார்கள். அரவிந்திற்கு அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்பது ஆசானின் எண்ணம், ஆகையால் அவர் நல்ல நாள் ஒன்றை தேர்வு செய்து மாலை கோவில் பூஜை முடிந்த பின்னர். கோவில் வளாகத்தில் சிலம்பம் அரங்கேற்றம் நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர்கள் பத்து வயதிற்குள் உள்ளவர்கள் அடுத்து இருபது, முப்பது என்று பத்து வயது வித்திய

விசம்

Image
 எண்ணும் அனைத்தையும் கூற வேண்டுமென்ற எந்த கட்டாயமும் யாருக்குமில்லை. இருந்தும் சிலரால் அவற்றை கட்டுப்படுத்தி விட முடியாது. மனதின் அழுத்தம் காரணமாக அவர்களால் எண்ணங்களை அதிகப்படியாக கோர்வையாக கடந்த முடிவதில்லை. ஆகையால் தோன்றியவற்றை உடனே பேசி முடிக்கிறார்கள்.  என்ன பேசுகிறோம் என்று கூட அவர்கள் அக்கறை கொள்வது இல்லை. பல வேலைகளில் நெருங்கிய சிலருடன் பலர் பெரும் சோகங்களை கொட்டித் தீர்ப்பதாகவே எண்ணிக் கொண்டு இப்படி தலைகால் இல்லாமல் பேசிக் கொண்டிருப்பார்கள். பேசுவது என்றால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும். அர்த்தமற்ற வார்த்தைகள் எதற்க்கு. ஏதோ பேச வேண்டுமென்று பேசியவற்றையே திரும்ப திரும்ப பேசிக் கொண்டிருப்பவர்களும் உண்டு. நண்பர்கள் கூடிய மாலை விருந்து அது அங்கு மது போதை தலைக்கு ஏறிய ஒருவன், அருகிலிருந்தவனை பார்த்து “நீ யாரு தெரியுமா எனக்கு? நீ என்னோட உசுரு மச்சான் உனக்காக நான் என்ன வேணாலும் செய்வேன் தெரியுமா” என்றான் அடுத்து கொஞ்சம் நேர அமைதியில் மற்றவர்கள் பேசிக்கொண்டு இருந்தனர். தொங்கிய தலையை உயர்த்திக் கொண்டு “மச்சான் நீ யாரு தெரியுமா எனக்கு” என்று ஆரம்பித்தான் இங்கு என்னவோ இரண்டாம் முறை தான்

யார் இறந்தால் என்ன?

Image
 வாசல் வரை வழியனுப்பும் மனைவிகள் ஏராளம் உள்ள ஊரில் வாசல் தாண்டி கணவன் வேலை செய்யும் இடம் வரைக்கும் வழியனுப்பவும் தயங்காதவள் தான் மகேஸ்வரி. வைராக்கிய காரிதான். கடுகு சிருந்தாலும் காரம் குறையாது என்ற பழமொழிக்கு ஏற்ற அவள் உடலைமைப்பு. பதினொரு வயது மதிக்கத் தக்க ஒரு குமரனின் உயரம் இருப்பாள் மகேஸ்வரி. ஆனால் நடையில் அவள் வேகம் வேறு யாரும் ஈடுகொடுப்பது அத்தனை சாத்தியமில்லை. கோளாறு என்னவென்றால் அவள் கண்கள் நேராக சாலையை கவனிக்காது. அக்கம் பக்கம் என சிப் செயலிழந்த எந்திரன் ரோபோ வின் தலை சுற்றுவது போல மேய்ச்சல் கொள்வாள். அதே வேகத்தில் அடுத்த தெரு கடந்து, கமலா, மாலா என ஒவ்வொருவர் வீட்டிற்கும் சென்று கடந்து வந்த பாதையில் யாரையாவது அவர்கள் வளர்ச்சிக் கண்டு குறை கூறாமல் செல்ல மாட்டாள்.  பதினொரு வயது சிறுவன் உயரம் என்றாலும் 25வயதில் இரண்டு மகன்கள் உண்டு. மகன்கள் படிப்பை முடிக்க தான் காத்திருப்பு என்பது போல படித்து முடிக்கவும் ஊரில் யார் கை, காலிலாவது விழுந்து வேலை வாங்கி விட வேண்டும் என்ற ஆக்ரோசம் நிறைந்த அவள் அதையும் செய்து முடித்தாள். ஊரிலே யாரும் விரும்பாதா ஜீவன் இருந்தும் யாரும் விலக்குவது இல்லை. க

Padine kumar(பாடினி)

Image
  பொதுவான பேச்சி, எதையாவது பேச வேண்டுமே என்றாக கூட இருக்கலாம். இன்றைய காலம் எவ்வளவோ மாறிவிட்டது. நாம் படித்த படிப்பு சார்ந்த வேலையை தான் செய்ய வேண்டுமென்றும் என்ற கட்டாயம் இல்லை. நமக்கு எந்த வேலை பிடித்திருக்கிறதோ அதனை தாராளமாக செய்ய சுகந்திரம் இருக்கிறது. முன்பு காலங்களில் படித்த வேலை கிடைக்க வில்லை என்றால் கிடைத்த வேலையை படித்துக் கொள், அப்படியே பிழைத்துக் கொள் என்பார்கள்.  இல்லையென்றால் மாடுதான் மேய்க்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால் மாறிவரும் காலம் ஒரு வேலை செய்பவர்களையும் கற்றலில் ஆர்வம் குறைந்து அவர்களை பிரபலம் ஆக செய்கிறது. பின்னொரு நாளில் பணம் மட்டுமே அத்தியாவசியம் என்ற பணத் தேவையை நோக்கி நகரச் செய்கிறது.  அப்படியே மாடல் அழகிகள் சினிமாவிற்கு தேர்வானா காலங்கள் கடந்து இன்று யார் வேண்டுமானாலும் நாயகிகள் ஆகலாம், அல்லது நாயகன் ஆகலாம் என்ற தீர்க்கத் தனமான நம்பிக்கையை இணையம் செய்து வருகிறது. பல மருத்துவ பெண்கள் நடிகைகளாக வலம் வருவதை பார்க்க முடிகிறது. சாய் பல்லவி தொடங்கி இன்று சமூக சோஷியல் மீடியா நடிகைகள் வரை பலர் டாக்டர்.  பிறகு ஏன் இந்த நடிப்பு ? இன்றைய தலைமுறைகள் தொழில் என்று ஒன்ற

கல் நெஞ்சக் காரி அவள்

Image
தோற்று போகிறேன் அவளிடம்   தொலை தூரப் பயணம், வேலை என்று வீட்டை ஏமாற்றிவிட்டு அவளைக் காண விமானம் ஏரியாயிருந்து. புறப்பட பதினைந்து நிமிடம் தாமதம் ஆகும் என்ற அறிவிப்பு முதல் விமான பயணம் என்பதனால் கொஞ்சம் அச்சம் வேறு, ஒரு வழியாய் விமான பயணம் திருப்தி அள்ளித் தெளித்திருந்தது.  அந்த நாடும் என் நாடும் பெரிய வித்தியாசம் இல்லை. என்னை சந்திக்க வருவதாக கூறியவளை இன்னமும் காணவில்லை. நீண்ட நேரமாக காத்திருந்தேன். என் காத்திருப்பு ஒரு பெண்ணுக்கானது தான் என்பதை எப்படியோ தெரிந்துக் கொண்ட அருகில் இருந்த பெண்மணி சிறு புண்ணகையுடன் பேச துவங்கினார். ஆனால் அவர்களுடைய முதல் வார்த்தை என்னை ஆச்சர்ய பட வைத்துவிட்டது. ஒரு வேளை மந்திரக் காரியாக இருக்குமோ என்று. “Don’t worry she will come” என்று எனது டேபிள்எதிர் இருக்கையில் அமர்ந்தார். நன்றாக பேசினார் பேச்சி தொடர எங்கே தங்க போகிறீர்கள் என்று கேட்டார். அவளை தவிர எனக்கு வேறு யாரையும் தெரியாதே! நான் அவர்களிடம் இல்லை எனக்கு தெரியவில்லை, அவள் வந்த பின் தான் முடிவு செய்யவேண்டும் என்றேன். ஒரு வித கேலி சிரிப்புடன், நீங்கள் இங்கு ஐந்து மணி நேரங்களுக்கு மேல் காத்திருக்கிறீர்கள

வெற்றியில் கற்றுக் கொண்ட பாடங்கள்

Image
 தோல்வி தினம் தினம் நடப்பது தான், அப்படிப்பட்ட தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள என்ன இருக்கிறது என்று தான் கடந்து விடுகிறார்கள். ஆனால் நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை தோல்வியில் இருந்து அல்ல ஆம், நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை வெற்றியில் இருந்து. தோற்றுப் போக பல காரணங்கள் உண்டு. ஆனால் வெற்றிப் பெற ஒரே ஒரு காரணம் தான் அது தான் நம்பிக்கை நம்பிக்கை என்ற ஒன்று போதும். நம்மால் செய்ய முடியாது என்ற செயல்கள் மீது முதலில் பயம் தான் வரும், பயம் பக்தியை உருவாக்கும், பக்தி நம்பிக்கையை தரும், நம்பிக்கை பலத்தை தரும் சில வேலைகளில் அமானுஷ்யங்களையும் செய்யும். நம்பிக்கை சாத்தியமில்லா எல்லாவற்றையும் சாத்தியமாக்கும். அது மனித மனத்தின் அகத்தில் இருந்து புது உத்வேகத்தை உருவாக்கும். வெற்றியின் காரணம் அறிந்து கொள்வது எவ்வளவு முக்கியமானது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். வெற்றி நாம் நினைப்பது போல பலரை தோற்கடிப்பது இல்லை. வெற்றி என்பது தனித்தன்னை. அது பல நிபந்தனைகளை கொண்டிருக்கும்.  முறையான நம் பயிற்சி அந்த வெற்றியை நோக்கி இழுத்துச் செல்லும். நம்மை நாம் அறியாத வரை வெற்றியின் சுவை கிடைத்தாலும் பயன் இல்லை. நம

இறந்து போன நாய்க் குட்டிகள்

Image
 நாய்களை அறியாத மனித பிறவி ஒன்று வையகத்தில் இல்லை. மனிதனுக்கும் மிருகங்களுக்கும்மான நெருக்கங்களில், மனிதனுடன் மிகவும் நெருங்கி பழகும் ஒரு மிருகம் தான் இந்த நாய்கள்.  கோம்பை, கன்னி, சிப்பிப் பாறை என்று மன்னர் காலத்தில் நாய்களை போருக்குப் பயன்படுத்திய வரலாறும் உண்டு. அன்றாட வாழ்வில் காலை முதல் அன்றாடம் நாம் செல்லும் இடமெங்கும் நம்மை பின்தொடரும் காவல் காரன் என்றால் மிகையாகும்.  அதற்கு என்று ஒரு செல்லப் பெயர் வைத்து அழைப்பது உண்டு பலவேறு பேர்கள் இருந்தாலும் என்னுடைய ஆசை முழுவதும் கறுப்புக் நிறமான நாய் ஒன்றை வாங்க வேண்டும் அதுவும் அவனை கருப்பன் என்று பெயர் வைத்து வளர்க்க வேண்டும் என்பதாகும். அது ஒரு அலுவலகம், சைட் ஆபீஸ் ஊருக்கு சற்று ஒதுக்குப் புறமாக கடற்கரை பேக் வாட்டர் அருகில் அமைந்துள்ளது. அந்த அலுவலகத்தில் மொத்தம் ஐந்து பேர்கள் தான் வேலை செய்கிறார்கள் அதில் இரண்டு பேர்கள் உள்ளூர் வாசிகள், மற்றைய மூன்று பேர்கள் வெளியூர் வாசிகள். இங்கு இந்த அலுவலக ஊழியர்களை நம்பி நான்கு நாய்கள் அவர்கள் எப்போது வேலைக்கு வந்தாலும் ஓடி வந்து வீட்டு நாய்கள் போல அவர்களை பின் தொடர்வது வழக்கம். சுய தேவை தானே ஒவ்

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *