Posts

Showing posts from May, 2024

கதைக்குள் கதை

Image
  பெருங்குற்றம் ஒன்று நடந்து விட்டிருந்தது அன்று யாரும் அதனை அறிந்திருக்கவில்லை அது குற்றமென்று. அவன் கல்லூரி பயின்றுக் கொண்டிருந்த தருணம் போதை ராஜாக்கள் பலருடன் சேர்ந்து அவனது வாழ்வும் அவ்வாறே சென்றுக் கொண்டிருந்தது. கண்ணன் ஆர்ப்பாட்டம் நிறைந்தவன் எதனையும் எளிதில் கிரகித்துக் கொள்ளும் தன்மையுடையவன் அது  ஹிந்துக்கள் அதிகமானோர் வாழும் ஊராக இருந்த போதும், ஹிந்துவாக இருந்து கிருஸ்தவத்தை தேர்ந்தெடுத்த குடும்பத்தினர் ஒன்று இரண்டு பேர் இருந்தனர் இது நாளடைவில் அருகில் இருக்கும் குடும்பத்தினரையும் கிருத்தவத்திற்கு மாற்றும் முயற்சி நடந்துக் கொண்டிருந்தது. ஊர் தலைமை நிர்வாகிகள் கூடி அன்று ஒரு நாள் மாலை ஊர்கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். கண்ணன் அவனது நண்பர்கள் மற்றும் நிர்வாகிகள் எதிரணியாக இருந்த பலராமன் அந்த அணியில் இருந்தார். அவர் தலைமையில் மது விருந்து நடைப் பெற்றுக் கொண்டிருந்தது.  கண்ணனுக்கு வாழ்வில் எந்த குறையுமில்லை இறைவன் அவன் வாழ்வை நிம்மதி சூழப் படைந்திருந்தார் என்ற போதும் அவனுக்கு நல்லது கெட்டதை சொல்லிக் கொடுக்க தகப்பன் அருகில் இல்லை. அவனைக் கண்டிக்க அவனது அண்ணனும் அருகில் இல்லை. தக

திறன்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்

Image
ஒரு முறையல்ல வாழ்வில் ஒவ்வொரு முறையும் வெற்றிப் பெற திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள். திறன்கள் என்பது எதை எதையோ சாதிக்க வேண்டும் நான்கு பேர்கள் நம்மை பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்தின் சாரலில் இருக்கக் கூடாது. அது முழுவதும் நாம் என்ன வேலை செய்கிறோம் அல்லது நமக்கு என்ன பிடிக்கும் என்பதை நன்கு தெளிவு படுத்தி அதில் அடுத்து அடுத்து என ஆழ்ந்து செல்ல அதைப் பற்றிய முழுமையான அறிவு தேவை அவற்றை நாம் நமது சொந்த முயற்சியுடன் அவற்றை கற்றுக் கொள்ள வேண்டும். கற்றல் என்பது கவனித்தலை முன்னிலைப் படுத்துகிறது, கவனம் அனைவருக்கும் இயல்பாக இருப்பது இல்லை. வாகனம் ஓட்டும் போது அல்லது ஏதோ பயணங்களில் போது இதனை உங்களில் நீங்கள் நிச்சயம் கவனித்து இருப்பீர்கள்.  உங்கள் பார்வை எங்கோ இருக்கும் ஆனால் நீங்கள் உங்கள் மனதின் வாசம் பயணித்துக் கொண்டிருப்பீர்கள், பெரும்பாலோனோர் இதனை நினைவு கூற முடியும். அப்படி கற்பனையில் அலைவது இல்லை கவனித்தல் என்பது கண்கள் காண்பதை காதுகள் கேட்பதை கிரக்கங்கள் ஏதுமின்றி மூளை புத்தியின் வழியாக அறிந்து கொள்ள வேண்டும்.  நாம் எந்நேரமும் கவனிக்க துவங்கி விட்டோம் என்றால் வினிப்புணர்வு என்பது தானாகா

சீத கயாவும் பெண்களால் கொடுக்கப் படும் திதியும்

Image
 முதலில் இப்படி ஆரம்பிக்கலாம் இல்லை இல்லை வேண்டாம் என்று எண்ணி இந்த வரிகளுக்குப் பின் இதனை கூறுகிறேன். என்பது சிறிய ஆசுவாசம் தான் புரியவில்லையோ! இறந்தவர்களுக்கு திதி கொடுப்பது ஆண்கள் மாத்திரம் தான் என்ற விதி ஒன்றை தேவி சீதா தனது தந்தைக்கு காசியில் திதி கொடுத்து அந்த விதியை மாற்றி எழுதினார். அதன் படி பாரம்பரியமாக பெண்கள் திதி கொடுக்க சீதா தனது தந்தைக்கு திதி கொடுத்த காசிக்கு செல்கின்றனர். அங்கு சீதா கயா என்ற இடம் பெண்கள் தனது தாய் தந்தையருக்கு திதி கொடுக்கலாம். என்ற கொடுப்பினை அடைய பல மாநிலங்களில் இருந்து பெண்கள் தங்கள் குடும்பத்தினரோடு வருகிறார்கள். யாம் வியந்த விஷயம் யாதெனில் அங்கு இருக்கும் புரோகிதர்கள் தென்னிந்திய அனைத்து மொழிகளும் பேசுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பெண்கள் அங்கு தனது இறந்து போன தாய் தந்தையருக்கு மாத்திரம் தர்ப்பணம் செய்யவில்லை. பதினாறு தலைமுறைக்கு செய்கிறார்கள். அது சித்தி, சித்தப்பா அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகள், கொள்ளு பேரர்கள், அவர்கள் அண்ணன் தம்பி என்று வரிசை நீண்டு கொண்டே போகும் இதில் யாரும் விடுபடுவது இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இறந்தவர்கள் அ

சுற்றுலா அனுபவம் (Tourist Experience)

Image
  இந்த தலைப்பை நான் அணுகுவது முறையாக இருக்கும் ஏனென்றால் எனக்கு சுற்றுலா பிடிக்காது. அது விரைய செலவு என்பதனால் அல்ல அது நம்மை சுற்றியிருப்பவர்கள் மிகைப் படுத்தும் ஓர் கற்பனை எண்ண பிம்பம் அவ்வளவு தான். பலர் என்னிடம் கூறுவதுண்டு எனக்கு வாழ்நாள் கனவு பேரிஸ் செல்ல வேண்டும் என்பது, இப்போது காலத்திற்கு ஏற்றார் போல பல இடங்கள் அவர்கள் மனதில் இடம் பிடித்து இருக்கும். நமது ஊரில் நம்மை சுற்றி அல்லது நமது ஊரை ஊற்றி உள்ள அழகானா காட்சிகளையே நாம் ரசிக்க விரும்புவது இல்லை. இதில் சுற்றுலா என்று ஊர் விட்டு ஊர். நாடு விட்டு நாடு என்று சென்று என்ன ரசித்து விட போகிறார்கள். நான்கு நாட்கள் பன்னை தின்னதும் நம்ம ஊரு பழைய கஞ்சி நினைப்பும் அதன் ருசியும் ஊரைப் பார்த்து இழுத்து வந்து விடும். தற்போதைய காலங்களில் அலைபேசியில் சோஷியல் மீடியாவில் யாரோ சென்றோ காணொளிகளைக் கண்டு அது அற்புதம் அது பிரமாதம் என்று கூறுவதை நம்பி அவர்களும் செல்லத் துடிக்கின்றனர். ஒரே ஒரு கேள்வி தான் கொஞ்சம் கொஞ்சமாகா சேர்த்து வைத்த அந்த பணத்தை சுற்றுலா என்ற பெயரில் விரயமாக்குவது ஞாயமாக படவில்லை எனக்கு. சரி அப்படி அந்த சுற்றுலா உங்களுக்கு என்ன க

முட்டுக் கொடுப்பவர்கள் அரை வேக்காடுகள்

Image
 ஒரு தவறு ஒருவன் செய்வானாகில் அது எத்தகையது என்பதை முதலில் உள்வாங்க வேண்டும். அது கண்டிக்க பட வேண்டியதா இல்லை சொல்லி புரியவைத்து விடலாமா என்று. தவறுகளின் வீரியம் எத்தகையது என்பதை பொறுத்து அதற்க்கான தண்டனைகளை சமூகம் அரசியல் சட்டம் உருவாக்கி வைத்துள்ளது. அப்படி அந்த சட்டங்கள் முறையானவையா என்பவை அல்ல விவாதம். தவறுகளுக்கு கண்டனங்கள் தெரிவிக்கும் போது அது தவறே இல்லை என்று அவர்களுக்கு துணை நிற்பார் சிலர். அது ஏற்புடையது அல்ல. ஒரு சிறு தவறு தான் என்றாலும் அதனை நிச்சயம் புரியவைக்க வேண்டும். அல்லாது அவர்களுக்கு முட்டுக் கொடுப்பது அவர்கள் வாழ்வை தவறான பாதையில் கொண்டு போய் சேர்க்கும். இன்று அவர்கள் துணை நிற்க சிறிய தவறு பெரிய தவறாக மாறும். இன்று இவர்கள் உதவி செய்தது போல அந்த பெரிய தவறிற்கு உதவ முடியாத நிலையில் அவர்களும் தள்ளப் படலாம்.  அண்மையில் காவலதிகாரி ஒரு வேனை நிறுத்தினார். அந்த வேனில் டிரைவர் இறங்கி செல்ல வாகனத்தின் பத்திரங்கள் அனைத்தையும் கேட்க அவரும் அவற்றை அவர்களிடம் காண்பிக்கிறார். ஆனால் அவர் அதில் திருப்தியாகாதவரை அவருடைய ஓட்டுநர் உரிமம் கேட்டார் அதையும் அந்த வாகன ஓட்டிக் கொடுத்தார். க

நண்பர்களின் முக்கியத்துவம்

Image
 சிலருக்கு நட்புகள் பாரம், சிலருக்கு தான் வரம் இருந்தாலும் நட்பு என்ற ஒரு புள்ளி இல்லாமல் வாழ்வை தகர்த்த முடியாது என்பது தான் எதார்த்தம்.  நட்பு எப்போது எல்லாம் தேவைப்படும் என்றால் நட்பு எப்போதும் தேவைப்படும். திருமணம் என்ற ஒன்று ஆகும் வரை நட்பு ஊரில் அல்லது ஊரை சுற்றி, பள்ளியில் அல்லது கல்லூரியில் வேலை செய்யுமிடங்களில் என்று ஆணுக்கும் ஆணும் அல்லது பெண்ணும் இருக்கலாம். பெண்களுக்கு தான், இருப்பினும் நாம் நினைப்பது போல நட்பு என்பது ஒரு உறவு முறையல்ல அது ஒரு உணர்வு தாய் தந்தையரிடம் நண்பர்களாக இருக்கலாம். மனைவி அல்லது அண்ணன் தம்பிகள் என எல்லா உறவுகளிலும் தான் நட்புகள் உள்ளது. நட்பின் பரிணாமம் ஒளிவு மறைவு அற்றது. அது சுயநலமற்ற ஒரு உணர்வு விட்டுக் கொடுக்கும் மனது என்று அங்கு உணர்வுகள் அன்பால் மாத்திரம் கொட்டிக் கிடக்கும். புதிதாக பேருந்து பயணத்தில் ஒரு நபரை சந்திக்க முதல் நட்பு புன்னகையில் மலர்கிறது அடுத்த அடுத்த சந்திப்பு சிறிது சிறிதாய் நட்பை கசிகிறது. அந்த நட்பு டீ கடையில் தொடர, பிராண்டி கடையில் தொடர என உயிருக்கு உயிரான நண்பர்களாக்கி இருவீட்டார் நட்பாகி பெண்கொடுத்து பெண்ணெடுக்கும் வரை அந்

காதலன் காமனின் புதல்வன்

Image
 அவனுக்கு பெண்கள் புதிதல்ல, அவனை சுற்றி எப்போதும் பெண்களே உள்ளனர் அவனுக்கு மற்றைய ஆண்களை போல பெண்களை தன்னை பார்க்கும் படி ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் கிடையாது. அவன் அவனுடைய இயல்பை எப்போதும் யாருக்காகவும் மாற்றியது இல்லை. அவன் பெண்களை ரசிப்பவன் அவர்களின் ரசிகன். ஆணழகன் இல்லை. அவனை விரும்பாத பெண்கள் இல்லை. அவன் மீது மோகம் கொள்ளாதவளும் இல்லை. அவன் யாரையும் வேண்டாமென்று விலக்கியது இல்லை. தெளிவானவன் பெண்களிடம் காதல் வார்த்தைகளை கூறி அவர்களை நயவஞ்சகம் செய்து ஏமாற்றி அடைய அவன் பொறுக்கி இல்லை. ஆனால் அவனை எப்படியாவது அடைய வேண்டுமென்ற எண்ணம் பெண்களுக்கு உண்டு. ஆனால் அது நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவன் மடி மீது சாய வேண்டும், அவனை கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும், அவனுடன் தனிமையில் இருக்க வேண்டும் என்ற ஒரு காதல் பிரியம் தான் அது. அவனது இயல்பான பேச்சு அவனை யாரிடமும் வெறுக்கச் செய்யாது. ஆண்களிடமும் தான் ஆனால் ஆண்கள் அவனை கன்னி ராசிக் காரன் என்று சொல்வார்கள். ஆனால் அவன் மிதுன ராசிக் காரன் என்பது அவர்கள் அறிந்திருக்கவில்லை.  அவன் ஒளிவு மறைவு இல்லாதவன். எந்த பெண்ணிடமும் எந்த நிலையிலும் சில நேரம

காசு பணம் வந்தால் காக்கா கூட கலராகிறும்

Image
 காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிரும்டா என்று பருத்தி வீரன் படத்தில் அமீர் ஒரு வசனம் வைத்திருப்பார். ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் எதார்த்தமும் கூட  பணம் அழகு இதனை எப்படி ஒப்பிடுவது அல்லது வேறு படுத்திப் பார்ப்பது என்று அல்லாமல் நிதர்சனம் என்ன என்பதனை புரிந்து கொள்ள முயல்வோம். பணம் என்ன செய்ய முடியும் ? என்ற கேள்விக்கு என்ன செய்ய முடியாது என்று தான் கேட்க தோன்றும். ஆனால் பணம் என்ன செய்கிறது என்ற பகுப்பாய்வுக்குள் சென்றால், பணம் தேவையை பூர்த்தி செய்கிறது மற்றும் ஆசையை நிறைவேற்றுகிறது. தேவை பூர்த்தியாகும் பட்சத்தில் மனதில் ஒரு நிம்மதி குடி கொள்கிறது. ஆசை நிறைவேறும் போது மனதில் ஏகாந்தம் குடிக் கொள்கிறது. இந்த மனம் நிம்மதியாய் இருந்தால் ஆரோக்கியம் அது தானாக வருகிறது.  ஆரோக்கியம் வரும் போது முகம் பொலிவாகிறது உடல் மினு மினுக்கிறது. அகத்தின் அழகை முகத்தில் காட்டுகிறது. பணம் வந்ததால் இது அனைத்தும் வந்தது என்ற மாயையில் நாம் மூழ்வியும் விடுவோம். ஆனால் இவை அனைத்தும் மன நிம்மதியால் வந்தது. இந்த நிம்மது தேவையை பூர்த்தி செய்து வரவேண்டிய கட்டாயம் இல்லை. தேவைகளை குறைத்துக் கொண்டு இருப்பதை திருப்த

தன்னம்பிக்கை

Image
 தன்னம்பிக்கை யாரோ தருவது அல்ல, அது தானாகா உள்ளிருந்து வரும் உத்வேகம். ஒரு சவாலான வேலை அதனை ஒரு சிலரால் தான் இதுவரை செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் யாரும் அந்த ஆபத்தான வேலையை செய்ய முன்வரவில்லை. ஆனால் கட்டாயம் அந்த வேலையை செய்து முடிக்க வேண்டிய நிலை ஆனால் அங்கிருக்கும் யாருக்கும் அந்த வேலையைப் பற்றி தெரியாது. தெரிந்தவர்களை வைத்து செய்யலாம் என்றால் அவர்கள் வந்து செய்ய தயாராக இல்லை.  அதிக பணம் கேட்டாலும் பரவாயில்லை ஆனால் அவர்களுக்கு நான் இல்லாமல் யார் செய்து விடுவார்கள் என்ற எண்ணம். ராமுவிற்கு நம்பிக்கை உண்டு யாரோ ஒருவர் நிச்சயம் இந்த வேலையை செய்யத் தான் போகிறார்கள். நாம் செய்தால் என்ன! என்று தோன்றினாலும் வேலை செய்யும் இடம் என்பது மீட்டர் உயரம். தப்பி தவறி விழுந்தால் எதுவும் மிஞ்சாது. ஆனால் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவனுக்கு தீர்க்கமாக உண்டு. அவன் உடன் இருந்தோருக்கு விருப்பம் இல்லை. விருப்பம் இல்லை என்பதை தாண்டி பயம் இதை நாம் எப்படி செய்ய முடியும் ? மொத்தம் இந்த வேலை தெரிந்தவர்களே குறைவு இப்படி ஒரு நிலையில் ஏதேனும் சந்தேகம் வந்தால் கூட அதை யாரிடம் கேட்க முடியும

பிரசவ வார்ட் ஒரு இருட்டறை

Image
 அரசு பொது மருத்துவமனை தொடங்கப்பட்டது பிரிட்டிஷ் காரன் என்றாலும் அதனை அன்று முதல் இன்று வரை அரசு தொடர்ந்து வருவது சிறப்பு. எத்தனை ஏழை மக்கள் அரசு பொது மருத்துவக் கல்லூரிகள் மூலம் பலன் அடைகிறார்கள் என்றால் மிகையாகாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தனி தனி வார்டு அமைத்து அரசு தன்னால் முடிந்ததை செய்கிறது என்று கூறிவிட முடியாது. ஏனென்றால் அரசால் இன்னமும் பல செய்யமுடியும். ஆனால் அரசு அதிகாரிகள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை நடுநிலை வர்க்கத்தவர்கள் தொடங்கி அன்றாடம் காய்ச்சி வரை பலன் பெறுவது அரசு மருத்துவமனை மூலம் தான்.  இப்படி இருக்கும் பட்சத்தில் அரசு மருத்துவமனை தனியார் கட்டிடங்களை மிஞ்சி அதி நவீன கருவிகள் மூலம் அதிக டாக்டர் எண்ணிக்கை மூலம் இன்னமும் எவ்வளவு பராமரிக்கப் பட வேண்டும். ஆனால் கவனம் எல்லாம் பேருந்து நிலையம் திறப்பதிலும், மணல் குடோன் திறப்பதிலுமே உள்ளது என்று மக்கள் குறை கூறும் அளவு உள்ளது.  பிரசவ வார்ட் ஒரு இருட்டறை: பிரசவ வார்ட்டிற்கு ஏதேர்ச்சையாகா நுழைய நேர்ந்தது ஒரு குறிபிட்ட வயது முதல் தனது உடலை பத்திரப்படுத்தி பாதுகாத்து. தன் உடல்

ஹாட் ஸ்பாட் ( Hot Spot )

Image
 வழக்கமா தம்பி ஒருத்தன் எந்த படம் வந்தாலும் அத முதல் ஆளா பாத்துட்டு அதுல நல்ல படமா எனக்கு அனுப்பி வைப்பான். அண்ணா இத கண்டிப்பா பாருங்க மிஸ் பண்ணிடாதீங்க ன்னு சொன்ன படத்துல இந்த ஹாட்ஸ் பாட் ஒண்ணு. படம் ஆரம்பம் முதல் இரண்டு நிமிடம் வழக்கமான கீரோ என்ட்ரி போல இருந்தாலும். கதை ரொம்பவே புதுசு ஆனால் படத்தோட லிங் ஆக மனசு மறுத்துச்சு. ஏதோ நமக்கு நடந்த மாதிரியே இருந்துச்சி. ஒரு ஆணோட கழுத்தில தாலி அது நம்ம சம்பிரதாயம் இல்லைன்னாலமும் அது மனுசன் உருவாக்குன சடங்கு தான, ஆனால் துர்துஷ்டா வசமா இப்படி ஆகிற கூடாது. படத்திலயே ஏற்றுக் கொள்ள முடியல. வேலைக்கு போக வேண்டாம் பையன் வீட்டோட இருந்தால் போதும். வீட்டு வேலை பாக்குற அப்பா என மனம் ஒவ்வாத கதைக்களம். புகுந்த வீட்டில் பையன் போய் தவிக்கும் தவிப்பு. இதையே தான் ஒரு பெண் அனுபவிக்கிறாள் என்பது அது நமக்கு வரும் போது தான் புரிகிறது. படத்தில் கூட இப்படி ஒரு காட்சியை ஒரு ஆணாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. படம் துவங்கி திருமண காட்சி முடிந்து மணமகன் விஜய் மணமகள் தனு வீட்டிற்குள் வந்ததும் ஒரு பாடல் வரும் வரிகள் ஒவ்வொன்றும் பிரமாதம் அந்த பெண் குரல் காதுகளில் கணீர

முயற்சியின் மாயை

Image
 அவனுக்கு அனைத்திலும் நாட்டம் கூட, எதை அவனிடம் கூறினாலும் அவன் அதன் கற்பனையை பற்றிக் கொண்டு வெகு தூரம் சென்றிடுவான். அதன் விளைவுகளை பற்றி அறியவில்லை. அறிந்திருக்க முயற்சிப்பதும் இல்லை. வயது அப்படி பாராங்கல்லையும் அசைக்கும் துணிச்சல் அவனுக்கு இருந்தது. பெரியோர்கள் கூறுவார்கள் “கல்லை தின்னாலும் ஜீரணிக்கும் வயது” என்று.  அவனுக்கு தொழில் செய்ய மிகுந்த ஈடுபாடு, வேலைக்கு சென்றால் நினைத்த நேரம் விடுமுறை எடுக்க முடியாது, நினைத்த மாதிரி செயல்பட முடியாது என்ற எண்ணம். யாரோ அவனுக்கு விதைக்க எப்படியேனும் ஏதாவது தொழில் செய்ய வேண்டும், என்ற எண்ணம் அவனுக்கு  நிறுவனம் ஒன்றில் வேலை செய்து சேர்த்து வைத்த சிறிய தொகை கொண்டு அவனது உறவினர் ஒருவருடன் இணைந்து தொழில் துவங்கினான். உழைப்பில் அவனை மிஞ்ச யாருமில்லை. அசாத்திய திறமைசாலி அவனுக்கு ஆண்டவனே துணை, அவன் துணை கொண்டு உள்ளாரா துணிச்சல் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்ற நம்பிக்கை கொண்டவன். தொழில் முழுவும் அவன் ஒருவனால் மாத்திரம் நடைமுறை செய்யப்பட்டது அவன் அந்த தொழிலுக்கு புதிது என்றாலும் கொஞ்சம், கொஞ்சமாக கற்றுகொண்டு ஓரிரு மாதங்களில் சிறந்து விளங்கினான். அவ

கோடை காலம் (The Summer)

Image
 மழை வந்ததும் மனதிற்கு அத்தனை இதமாக இருக்கிறது அனைத்து ஜீவ ராசிகளுக்கும். இந்த மழைக்கு முன் உயிர்கள் வாழ்வா! சாவா! என்று போராடிக் கொண்டிருந்தன.  சூரியனுக்கு கொஞ்சம் கூட இறக்கம் இல்லையா என்று திட்டாத மனிதர்கள் குறைவு, வசதி படைத்தவன் ஊட்டி, கொடைக்கானல் என்று செல்கிறான். இரண்டு மாதமும் அவனால் அங்கு இருக்க முடியும். ஆனால் இதே காரமான வெயிலில் தான் கூலி தொழிலாளி மூட்டை சுமக்கிறான், கட்டிட வேலைக்கு செல்பவன் செங்கல் சுமக்கிறான். அடிக்கும் வெயிலில் இப்போது தான் நிறைய செங்கல்கள் காயவைக்க முடியும் என்று முதலாளி அதிக செங்கல் அறுக்க கட்டளை இடுகிறான். பறவைகள் இறை தேடி அலைய அவைகளுக்கு உடலில் சக்தி இல்லை சிறிய தூரத்திலேயே களைப்படைகின்றன. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நீர் நிலைகள் இல்லை, வீடுகள் உள்ளன. இருந்து என்ன லாபம்? முன்பெல்லாம் எல்லா வீடுகளின் பின்புறத்திலும் கொல்லை பகுதி இருக்கும். குளிக்க, பாத்திரம் கழுவ, கால்கழுவ என்று தனித் தனியாக பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். புழுக்கள் கூட ஆனந்தம் பாடி கிடக்கும் மண்ணில் மேற்பரப்பில். கோழிகள் அவற்றை பிடிக்க ஆர்வம் காட்டி இருக்கும். இன்றைய காலம் முழு

ஏசுவிற்கும் முருகனுக்கும் என்ன பிரச்சனை ?

Image
 கூடவே சுத்துறான், சர்ச்சில் சாப்பாடு போட்டா வாங்கி கொண்டு வந்து எல்லாரையும் சாப்டுங்கன்னு சொல்லுறான். கோவில் சாப்பாடு மாத்திரம் வேண்டாமாம்.  அவரவர் தனிப்பட்ட விருப்பம் எது பிடித்திருக்கிறதோ அதை உண்ண வணங்க அனைவருக்கும் உரிமை உண்டு. யாருடைய தனிபட்ட நடைமுறையையும் கேலி செய்ய முயற்சிக்க வில்லை. சரி இந்து மத கோவில் சாப்பாடு அல்லது பூஜை பிரசாதங்கள் மட்டும் தான் தடையாம். மற்றபடி முஸ்லீம் பிரியாணி, புத்தர் கோவில் அன்னதானம் என அனைத்திற்கும் முழு சுகந்திரம் உண்டு. முருகர் கோவில் அன்னதானம் ஏசுவிற்கு பிடிக்காதா இல்லை உங்களுக்கு பிடிக்காதா? சரி கிந்து கோவில் அன்னதானம் வேண்டாம் என்று கூற ஏதாவது காரணம் உண்டா என்றால் பதிலில்லை. அது சிறுவயதில் இருந்தே அப்படி பழக்கப் பட்டது என்றார். சரி பரம்பரை கிருஸ்டியானிட்டி போல என்றால் அதுவும் இல்லை அவர் அப்பா கிந்து வாம். இவர்களை என்ன சொல்ல என்று தெரியவில்லை. மனம் போன போக்கில் வாழ்பவன் தான் மனிதன் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. எத்தனையோ மனிதர்களை கடந்து வந்திருக்கிறேன் ஆனால் இப்படி யாரையும் நான் பார்த்ததில்லை. ஆச்சர்யம் இல்லை ஆனால் பைத்திய காரத் தனமாக தோன்

வயதின் பராமரிப்பு செலவு

Image
 கூட்டு குடும்பம் எல்லாம் தற்போது சீரியலில் பார்பதோடு சரி, இப்படி தான் இருந்திருப்பார்கள் போல என்று மனதிற்குள்ளேயே நினைத்துக்கொண்டிருப்பவர்கள் தான் அதிகம்.  ஒரு குடும்ப பெண்ணின் அத்தியாவசியம் என்ன ? குடும்ப நலனை தவிர அவள் மனதில் ஏதும் இல்லை. பசி பட்டினி இல்லாமல் பிள்ளைகளை வளர்த்து விட வேண்டும் என்ற வாசி.  அவள் அதற்க்காக வேலைக்கு செல்லவும் தயங்குபவள் இல்லை. கணவனை எப்படியாவது தினமும் வேலைக்கு அனுப்புவதே அவளுக்கு பெரும் பாடு. இதில் மது பிரியர்களாக இருந்தால் அவர்கள் நிலமையை நினைத்துப் பாருங்கள்.  தனது குடும்பத்திற்காக பெண் என்ன செய்கிறாள் என்றால்? அவள் பெரும் தியாகம் செய்கிறாள். என்பதை மறுக்க எவரும் இல்லை.  காலை முதல் இரவு வரை அவள் ஓயாது உழைத்துக் கொண்டே இருக்கிறாள். காய்ச்சல் தலைவலி என்றால் விடுமுறை கேட்கும் நமக்கு அதை பற்றிப் புரிதல் இருக்காது என்பது மெய். அவள் குழந்தை, மங்கை, பெண், தாய், பாட்டி, பின் பூட்டியாகி முகம் சுருங்கி அன்பை மாத்திரம் விதைக்கும் ஆலமரம் ஆகிறாள். தன் வயதினால் ஏற்படும் இயலாமையை அவள் மறுக்கிறாள். அவள் அவளுக்கு என்று எதுவும் வேண்டாதவள். ஆனால் காலம் அனைவருக்கும் ஒரு மு

அழைப்பில்லாத திருமண வீட்டு விருந்து

Image
 அனைவரும் விரும்பும் ஒரு விருந்து தான் இது, திருமண  வீட்டு சாப்பாடு என்றால் யார் வேண்டாம் என்று கூறுவார்கள். அம்மா தனியாக செல்லும் திருமண வீட்டில் அசைவம், அல்லது பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம் என வித்தியாசமாக எது போட்டிருந்தாலும், அவள் கொஞ்சம் சாப்பிட்டு பின் பிள்ளைகளுக்கும் வாங்கி வரும் அன்பு… ஒரு உலக வராற்று காவியம் தான். நண்பர்களுடன் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்கு நல்லா டிப், டாப்பாக உடை அணிந்து மணமகன் தோற்று விடும் அளவு வாசனை திரவியங்களையும் பூசிக் கொண்டு அழைப்பே இல்லாத திருமத்திற்கு சென்று அங்கு அறிமுகமில்லாதவர்களிடம் மாப்பிள்ளையின் தோழன் என்று கூறி அவர்களிடம் இருந்து ஒன்று இரண்டு மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அதனை குடித்துகொண்டு. பந்தியில் பாயாசத்திற்கு அடிபோட்ட கதைகள் அனைவர் வாழ்விலும் நிச்சயம் நடந்திருக்கும்.  யாராவது ஒருவருக்கு முதலில் வரும் செய்தி, பக்கது ஊர் கோவிலில் இன்று அன்னதானம் இந்த செய்தி கோவில் நோட்டிஸ் செல்லும் வேகத்தை விட இளைஞர்களை வந்து வேகமாக அடைகிறது. அதிலும் கிடாவெட்டு போன்ற செய்திகளுக்கு கோவில் குடும்பத்தை மிஞ்சிய கூட்டம் வந்து நிற்கும். சாப்டா இப்படி

இலங்கையும் கேரளாவும் அக்கா தங்கை ( Srilanka and Kerala )

Image
 கடவுளின் தேசம் என்று கேரளத்தை அனைவரும் குறிப்பிடுவது உண்டு. அவ்வாறு, அதற்கு ஏற்றவாறு தான் தன்னை தானே அமைத்திருக்கும் கேரளம். இயற்கை எழில் கொஞ்சும் பேரழகு கேரளத்தை மிஞ்ச வேறு எந்த நாடு இருந்து விட முடியும்? என்ற கேள்விக்கு இலங்கை என்ற அந்த சிறிய நாடும் போட்டிக்கு வருகிறது.  கேரளாவை ஓரம் கட்டும் அளவு இல்லையென்றாலும் அதற்கு இணையாக சில இடங்கள் உள்ளது. மற்றும் கேரளாவில் மக்கள் அவரவர் வீட்டை சுற்றி மரங்கள் செடிகள் கொடிகள் என அனைத்திற்கும் இடம் அமைத்திருப்பார்கள்.  அப்படியே அந்த நடைமுறையை இலங்கையில் பரவலாக காண முடிகிறது. ஒவ்வொரு வீடும் குறைந்தது இருவது சென்ற் நிலத்தின் நடுவில் அமைக்கப் பட்டுள்ளது. அதாவது இருபது சென்ற் நில அமைப்பு கொண்ட இடத்தின் நடுபகுதியில் மூன்று அல்லது நான்கு சென்ற் அளவு மனைகளை அமைத்து வீட்டை சுற்றி முற்றம் பெரிதாகா அமைத்து தினமும் அழகாகா பராமரித்து வருகிறார்கள்.  மழை ஓய்ந்த போது சாலையோர வீடுகள் மழையில், மாலையில் இலங்கை சாலை சாலையோர கடை, கோடை மழை இலங்கை பேக்கரி முழுவதும் மைதா மா பன்கள் கேரளாவில் கோடை காலம், மழைகாலம் என்றெல்லாம் இல்லாமல் எப்போது மழைவரும் என்பதை கணிக்கவே முட

ஹீராமண்டி (Hiramandi - The Diamond Bazaar)

Image
 நவாப் ஆட்சி காலம் அது வேசிகளுக்கு என்று ஒரு தனி அரண்மனை, நவாப்கள் பொழுது போக்கு வேசிகளின் நடனம். ஆடும் வேசிகளுக்கு நவாப்கள் பொற்காசுகளை வாரி இறைக்கின்றனர்.  பொற்காசுகள், வைரம் வைடூரியம் என நவாப்கள் எண்ணிலடங்கா செய்வங்களை பரிசாக அளிக்கின்றனர் வயது வந்து முதலில் வேசியாகும் பெண்ணிற்கு மூக்கு வளையம் விலக்கும் விழா நடைபெறுகிறது. அந்த விழாவில் பல நவாப்கள் வருகை தருவார்கள், அதில் பல பொய்காசுகளை கொடுத்து அந்த பெண்ணை விலைக்கு வாங்கி கொள்வார்கள் அவள் கடைசி வரை அந்த நவாப் யுடன் மாத்திரம் இருக்க வேண்டும்.  மற்றைய பெண்கள் அன்றாடம் வரும் வழிபோக்கர்கள் தொடங்கி பலரும் பலருடன் சென்று செல்வங்களை ஈட்டிக் கொள்கின்றனர். இதில் நவாப்கள் கொடுத்த கனவு மாளிகை யாருக்கு என்ற போட்டி வேசிகளுக்கு இடையே நடக்கிறது.  வேசிகள் எப்போதும் மது போதையிலே காண்பிக்கபடுகின்றனர். வேசிகளை பற்றிய படம் என்றாலும் ஆபாசங்கள் இல்லை.  இப்படி கனவு மாளிகைகளுக்காவும், நவாப்களுக்காகவும் சண்டையிட்டுக் கொண்டிருந்த வேசிகள் கடைசியில் சுகந்திர போராட்டத்திலும் பங்கு கொண்டு பல ஆங்கிலேயர்களை துப்பாக்கியால் சாதுர்யமாக சுட்டு தள்ளுகிறார்கள். வேசிகள்

கோடை மழை

Image
 அனல் வீசுகிறது ஊரெங்கும், நிற்க நிழலில்லை. நிழல் கிடைத்த போதும் காற்றில்லை. வெக்கை பிழிந்து எடுக்கிறது உடல் நீரை. தாகம், தண்ணீர் குடிக்க குடிக்க அடங்கவில்லை. அனைவரும் சுட்டெரிக்கும் சூரியனை பற்றி பேசாமல் இல்லை, என்னா வெயில் நாப்பது டிகிரி மேல அடிக்கும். இப்படியே போனால் வர போரா சந்ததிகள் எல்லாம் பூமியில வாழுறது சந்தேகம் தான். என்றான் மாரிமுத்து கொஞ்சம் கூட இரக்கம் இல்லை, இந்த வெயிலுக்கு காலையில ஏழு மணிக்கு இப்படியா கொதிக்கும்! மாடி படியில் காலை வைக்க முடியல. நாம சின்ன பசங்களா இருக்கும் போதே கோடை விடுமுறை நேரங்களில் விளையாடா போனா அம்மா வையும், இந்த வெளியில் விளையாடாத! சாயங்காலம் விளையாடலாம் என்று சொல்லும். இருபது வருடங்களுக்கு மேல் ஆண்டு தோறும் வெயில் அதிகரித்து தற்போது இந்த நிலையில் வந்துள்ளது. மரங்கள் எல்லாம் வெட்டி வேலி அமைக்க, தழைக்க முடியாமல் வேரில் நவீன மருத்துகள் ஊற்ற என்று நம் மக்கள் செய்யும் வேண்டாதா வேலைகள் கொஞ்சம், நஞ்சமா என்ன ! காகிதங்களுக்கும், வீடுகளுக்கும் என்று அனைத்திற்கும் மரங்கள் பயன்படுத்தாமல் வாழ்கை இல்லை என்ற நிலையில் வாழ்வை நகர்த்துகிறது, இந்த நூற்றாண்டு  அப்துல்

யார் இந்த பூமியில் நிரந்தரமானவர்கள் ?

Image
எந்த பூமியை பற்றி பேச பால்வெளில் பல்லாயிரம் பூமிகள் உள்ளது, இதில் நாம் எந்த பூமியில் இருக்கிறோம் என்பதை ஏதோ ஒரு மனக்கணக்கில் குறித்து வைத்திருக்கலாம் யாரோ ஒருவர் அதனை அங்கீகாரம் செய்ய ஒருவரை நாடியிருக்கலாம்.  அவர் அதனை ஏற்றுக் கொண்டது என்பது ஒரு அனுபவ அறிவாக இருக்கலாம் அந்த அனுபவ அறிவு அவர்களுக்கு கிடைத்தது ஏதாவது ஆன்மீக புத்தகத்திலா இருக்கலாம்.  மனிதன் மனத்தால் தெய்வீக பரிணாமத்தை அடையாமல் அவனால் எதையும் ஊர்ஜித படுத்த முடியாது. அவன் அகவழி பயணம் மாத்திரமே மெய்ஞானத்தை தரும். அந்த ஞானம் அவனை உயர்த்தும்.  அண்ட சராசரங்கள் யாவையிலும் அவனை வியாபிக்க செய்யும். ஆனால் பூமியில் நிலையாக, நிலையானவர்களாக இருக்க முடியுமா என்றால் சாத்தியம் இல்லை. சித்தர்கள் ஞானிகள் தேவர்கள் எல்லாம் மரணமற்றவர்கள் தான் என்ற போதும் அவர்கள் பூமியில் இல்லையோ என்று தான் தோன்றும். உடலை விட்டு உயிர் சென்ற பின் உடல் இன்பங்கள் அதாவது உலக இன்பங்கள் எல்லாம் மாயை என்கிறாரகள். மாயா நதியில் தினம் தினம் உழன்று வாழும் நமக்கு மாயம் என்ன மந்திரம் என்ன வென்று தான் தோன்றுகிறது. நிரந்தனமானவர்கள் என்று பூமியில் ஏதும் இல்லை மலைகளும், கடல்களு

கனவு ஒரு முன்னெச்சரிக்கை ஏற்பாடு

Image
நாள் : 19/05/2024 நாடு : இலங்கை இடம் : புத்தளம்  நேரம் : 6:10                தூக்கம் வரும் அனைவரும் தூங்கத் தான் செய்வார்கள் சிறிது கண்ணயர்ந்து விட்டேனாம்… கனவும் வந்தது வெள்ளமும் வந்தது.  உண்மையில் கனவுகள் அனைத்தும் நமக்கு எதையோ தெளிவு படுத்த விரும்புகிறது. சாதாரணமாக கனவு தானே என்று விட்டு விட முடியாது. கனவுகள் மனதில் எங்கோ ஒரு மூலையில் ஆழ்ந்து பதிந்த நினைவுகளின் வெளிப்பாடாக இருக்கலாம். அல்லது நடக்க போவதாக இருக்கலாம். தினமும் கனவு காண்பவர்கள் வரிசையில் தினம் தினம் புது புது கனவுகள் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு இல்லாதவை இப்படி கனவுகள் தினமும் தோன்றினாலும் சில கனவுகள் நம்மை பயமுறுத்தி விடும்.  சில கனவுகள் நமது வாழ்வில் நடக்கும். கனவுகளுக்கு தொடர்போடு சில கதைகளும் வாழ்வில் ஐக்கியமாகும். அன்று பெரிய சுனாமி கோடைகாலம் பலர் அங்கும் இங்கும் நீரில் அடித்து சொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். நான்மட்டும் நீரோட்டம் அறிந்தவனாகவும் அந்த கோர அலைகளில் நீந்தும் வல்லமை பெற்றவனாக, எனக்குள் இருந்து உறங்கிக் கொண்டிருந்த அந்த வீரன் அனைவரையும் காப்பாற்றும் உத்வேகத்தில் இருக்க. அவனை தடுக்கலாகதவனாய் இயற்கையும் அவன

Merry Christmas மேரி கிருஸ்த்துமஸ்

Image
 மரியா, ஆல்பர்ட் இருவரும் காதலர்கள் போலவே அறிமுகமாகிறார்கள். கதையின் ஆரம்ப நகர்வு இல்லுமினேஷன் போலவே இருக்கும், நம்மை நாம் குழப்பிக் கொள்ளவும் நேரும். டைம் டிராவல் படமாக இருக்கும் என்ற எண்ணம் வரும், கதையை காட்சி படுத்தியது அற்புதமாக இருந்தது.  விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் சாதாரணமாக அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார்.  நானும் ரவுடி தான் படத்தின் வரும் ராதிகா அங்கு கிரோவின் தாயாகவும் போலீஸாகவும் இருக்க, இங்கு போலீஸாக மாத்திரம் வருகிறார் அதுவும் ஏட்டு ஐயாவாகா. காத்திரினா வை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றவில்லை, காத்திரினா கதாபாத்திரத்தை மடோனா செய்திருந்தால் இன்னமும் கதை நகர்வு நம்மை சுவாரஸ்யம் செய்திருக்கும். ஏனென்றால் விஜய் சேதுபதி, மடோனா இவர்கள் இருவருடைய கெமஸ்டிரி இதற்க்கு முந்தைய படத்தில் விட்டு போன ஒன்றானதால் கொஞ்சம் அதனுடன் தொடர்பு படுத்தி பார்த்திருக்கலாம். கிளைமேக்ஸ் சூப்பர். சேதுபதி அந்த குழந்தையிடம் சொல்லும் கதை குழந்தைக்கு போர் அடிக்க அது உண்மையாக நடக்கும் போது சேதுபதி இதற்க்கு மேல் ஒன்றும் வேண்டாம் என்று முடிவு எடுத்து முகவும் ஏதெர்ச்சையானா நடிப்பு நம்மை வியப்ப

சர்பத் ஒரு அவமான பானம்

Image
 முந்தைய நாள் மச்சானுடன் அடித்திருந்த ரம் காலை சிறிது மந்த நிலையில் மூளையை வைத்திருக்க, குமார் செய்வதறியாது வீட்டில் முன் வாசலுக்கு, பின் வாசலுக்கு நடந்துக்கொண்டிருந்தான் வீட்டின் பின் புறம் சிதறி கிடந்த கற்கள் “சரம்பல் கற்கள்” காலில் குத்துவதாக குமாரின் மனைவி கூற, ஏற்கனவே கிறக்கத்தில் இருந்தவனுக்கு ஒரு யோசனை. பின்புறம் நடைபாதை போன்ற வடிவமைப்பில் ‘கூழாங் கற்களை’ பதித்து வைத்தால் கால்களுக்கு இதமாகவும், அக்கு பஞ்சர் போல குதி கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து மூட்டு வலி நிவாரணியாக செயல் படும் என்று பத்திரிக்கை ஒன்றில் படித்த நினைவு. அவன்  அந்த யோஜனையை மனைவியிடம் கூற அவள் சரி என்றி இழுத்துக்கொண்டே கேட்க நல்லா தான் இருக்கு! யாரு பண்ணுறது ? கல்லு வாங்க எவ்வளவு காசு ஆகும்னு ஏதாவது விசாரிங்க என்றாள். குமார் சற்று அவன் புத்திசாலி தனத்தை மனைவியிடம் நிரூபிக்க விரும்பியவனாய் அதுக்கு எதுக்கு காசு! இப்படியே கொஞ்சம் தூரம் போனால் மலை தான் ஓடைகளில் சும்மாவே கிடக்கும் அதை போய் இரண்டு சாக்கு அள்ளி போட்டால் போதும் என்றவனாய், எப்படி ஐடியா என்று மனைவியின் பின் சென்று அவளை வயிற்றோடு கட்டி பிடித்தான். சிற

உங்கள் கருத்துக்களை இங்கே பதிவிடலாம் வலை தளத்தின் மேம்பாட்டிற்கு பயன்படும்.

Name

Email *

Message *